Responsive Menu
Add more content here...

வி.வி.சி.ஆர். முருகேச முதலியார்

Visits:1478 Total: 2407655

சைவப் பெருவள்ளல் என்று, இன்றும் போற்றி புகழுகிற முருகேச முதலியார். இவரை போல, தெய்வ பக்தி கொண்டவர்கள் அக்காலத்தில் மிக சிலரே. இவருக்கும் தொழில், நூல் வியாபாரம் என்றாலும், தம் வருவாயில் பெரும்பகுதியை, புதிய பள்ளிகளை  உருவாக்குவது , பல நூறு கோவில்களை புதுப்பித்து என இவர் கல்வி & இறைவன் பணிக்கே அர்ப்பணித்தார் என்பதே உண்மை.

 

(22.04.1903 – 30.3.1968)

பிறப்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் செல்வம் செழித்த செங்குந்த கைக்கோளார் குலம் புள்ளிக்காரர் கோத்திரம் பங்காளிகளை சேர்ந்த வி.வி.சி. இராமலிங்கம் முதலியார் – கணபதியம்மாள் தம்பதியினருக்கு 1903-ஆம் ஆண்டு, ஏப்ரல் 22ஆம் நாள் மகனாகப் பிறந்தார்.
குடும்பம்
இவருக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் 4 சகோதரிகள். இவரின் அண்ணன் கந்தப்ப முதலியார்(திருச்செங்கோடு முதல் நகர்மன்ற தலைவர்). மற்றொரு அண்ணன் வையாபுரி முதலியார்(புள்ளிக்கார் மில்ஸ் நிறுவனர்).
இவரின் தம்பி டி.ஆர். சுந்தரம் (சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர்). இவருக்கு சண்முகவடிவேல், கந்தசாமி என இரு மகன்கள்.
 
 
ஆன்மீக சேவை
செல்வ குடும்பத்தில் பிறந்த இவர், முருகப்பெருமான் மேல் பக்தி கொண்டிருந்தார். அந்த காலத்திலேயே இவர் பல கோவில்களுக்கு தர்மகர்த்தாவாக இருந்தார்.
பழனி முருகன் கோவிலுக்கு, 25 ஆண்டு காலம் நிர்வாக அறங்காவலராக இருந்தார்.
பழநியாண்டவர் உலா வருவதற்கு 17.081947 அன்று தங்கத் தேர் தானமாக வழங்கினார்.  (இந்து கோவிலில் பயன்படுத்தப்பட்ட முதல் தங்கம் இதுவே ஆகும், இவருக்கு குழந்தை பாக்கியம் வேண்டி இந்த நன்கொடையை வழங்கினார்)
பழனி முருகனுக்கு வைரவேல் மற்றும் தங்க மயில் வாகனம் செய்து கொடுத்தார்.
முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க பழநி அடிவாரத்தில் பொது திருமடம் ஒன்றையும் அமைத்துத் தந்தார்.
பழனியில் செங்குந்தர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பை நிறுவினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலராக பல ஆண்டுகள் பணியாற்றி அங்கும் பல திருப்பணிகளை செய்து முடித்தார்.
 1963ஆம் ஆண்டு பழனி மலைமீது விஞ்ச் (மின் இழுவை இரயில்) அமைத்துக்கொடுத்தார்.
திருச்செங்கோடு செங்கோட்டு வேலவனுக்குத் தங்கக்காவடி சமர்ப்பணம் செய்தார்.
கிரிவலைப்பாதையில் நான்கு திசைகளிலும் துர்க்கை அம்மன் ஆலயம் அமைத்தார்.
மதுரையில் அன்னை மீனாட்சிக்குப் பல்லக்குச் செய்துதந்து அழகு பார்த்தவர்.
இத்தகைய கல்விச் சேவை, ஆன்மீகப் பணி, சமுதாயப்பணிக்காக தனது செல்வத்தை அள்ளித் தந்த வள்ளல் வி.வி.சி. ஆர். முருகேச முதலியார்
திருச்செந்தூர் முருகன் கோவில் அறங்காவலராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
திருப்பதி திருவேங்கட ஏழுமலையானை வழிபட வரும் அடியவர்கள் தங்குவதற்கு திருமலையில் விடுதியை அமைத்துத் தந்துள்ளார்.
திருத்தணியில் முருகன் கோவிலில் படிக்கட்டுகள் மண்டபங்கள் கட்டி கொடுத்தார்.
இவர் பிறந்த திருச்செங்கோட்டில் அர்த்தனாரீஸ்வரர் மற்றும் முருகனை மாலை நேரத்தில் வரும் பக்தர்கள் வசதிக்காக திருச்செங்கோடு மலைக் கோவிலுக்கும் முதல் முதலாக மின்சார வசதி மின்விளக்கு வசதி நன்கொடையாக செய்து தந்தார். திருச்செங்கோட்டின் அடையாளமாக இருக்கும் மலைப் படிக்கட்டுகளில் இப்போது விளக்கு எரிவது இவரது உபயத்தினால் தான். இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து திருச்செங்கோட்டில் வருபவர்களுக்கு கலங்கரை விளக்கம் போல் முதலில் கண்ணில் படுவது இந்த மலை படிக்கட்டு விளக்குகள் தான்.
தமிழ் நூல்களை எழுதும் நூற்றுக்கணக்கான தமிழ் ஆசிரியர்களுக்கும், தமிழ்ப் புலவர்களுக்கும் பொருளுதவி தந்த வள்ளலாய் திகழ்ந்தவர்.
மேலும் பல கோயில்களுக்கு தங்க ஆபரணங்கள் நன்கொடையாக வழங்கினார்.
இவர் செய்த காரியங்களுக்காக, விளம்பரம் தேடிக் கொண்டதே இல்லை, கோவில் திருப்பணி செய்வதற்காக கல்வெட்டுகள் கூட வைக்க விரும்பமாட்டார். கோவில் நிர்வாகமே தனிப்பட்ட முறையில் இவருக்கு வைத்து கல்வெட்டுகள் இன்று காணப்படுகின்றனர்.
மருத்துவ தொண்டு
ஈரோட்டில் தனலட்சுமி பிரசவ வார்டு என்ற பெயரில் மகப்பேறு நிலையம் ஒன்றை நிறுவினார்.
காசநோய் எனும் டி.பி. தீர, ஈரோடு பெருந்துறையில் காசநோய் சேனட்டோரியம் மருத்துவமனையில் விடுதி மற்றும் ஆய்வுக்கூடம் கட்டித்தந்தார்.
 
 
கல்விப்பணி
ஈரோடு சிக்கய்ய நாயகர் மாசனக்கல்லூரி நிறுவுவதற்காகவும் 50களிலேயே பல லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.
மேலும் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர், மதுரை லேடி டொக் பெருமாட்டி  கல்லூரிக்கு (6,000 பவுன்)ஆறாயிரம் தங்க பொற்காசுகளை நன்கொடையாக அளித்தார்.
அன்றைய தமிழக முதல்வர்(1963) பக்தவத்சலம் முதலியார் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, பழனியில் முருகேச முதலியார் தொழிற்சாலை துவங்க வைத்திருந்த இடத்தை பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பசுத்தாய் கணேசன் பண்பாட்டுக் கல்லூரி துவங்க பல ஏக்கர் நிலத்தை தானமாக அளித்து கல்லூரி கட்டுவதற்கான செலவுகளையும் இவர் ஏற்றார்.
நமது நாடு அடிமைப்பட்டு மக்கள் பஞ்சத்திலும் வறுமையிலும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தபோதே சமுதாய அக்கறை கொண்டு தனது செல்வத்தை முனிவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சென்றடைய வேண்டும் என்ற சிந்தனையோடு 1942ஆம் ஆண்டு துவக்கப்பட்டது தான் ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகம் வி.வி.சி.ஆர். முருகோ முதலியார் மற்றும் அவரது உறவினர் எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் சேர்ந்து, ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகத்தை 24.12.1942ஆம் ஆண்டு பதிவு செய்தனர். அதன் நிர்வாகத்தின் கீழ் முதன் முதலில் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியை 1.6.1944 ஆம் ஆண்டு துவக்கினர் முருகேச முதலியார். அதன்பின் இந்த அறக்கட்டளையின் கீழே பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளும் இரண்டு பொறியியல் கல்லூரிகளும் கல்லூரிகளும் தொடங்கப்பட்டது.
ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகம் தோற்றுவிக்கப்பட்டபோது, 50,000 தங்க  பொற்காசுகளை வழங்கி, அவர் தோற்றுவித்த கல்வி நிறுவனம் இன்று 75 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது. நல்லார் செய்யும் உதவி கல்மேல் எழுத்தாக என்றும் நிலைத்திருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
இந்தக் கல்வி நிறுவனங்கள், ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
மேலும் பல கல்விப் பணிகளுக்காக  வழங்கி வள்ளல் இவர் ஆவார்.
மறைவு & நினைவுகள்
சமுதாயப்பணிக்காக தனது செல்வத்தை அள்ளித் தந்த வள்ளல் வி.வி.சி. ஆர். முருகேச முதலியார் 30.3.1968-ஆம் ஆண்டு முருகப்பெருமானின் இறையடி சேர்ந்தார்.
ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகத்தில் ஐயாவுக்கு முழு உருவ சிலை உள்ளது.
ஐயாவின் மறைவிற்குப் பின்பு ஈரோடு செங்குந்தர் கல்வி கழகம் VVCR முருகேசனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியை ஐயாவின் நினைவாக ஆரம்பித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஐய்யாவின் பெயரில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பழனி அறங்காவலர் குழு கல்வெட்டில் ஐயாவின் பெயர்
இவரின்
கூட்டம் பெயர்: புள்ளிக்காரர் கோத்திரம்
குலதெய்வம்: பழனி முருகன் மற்றும் பெரியாண்டவர் – புடவைக்காரி அம்மன் எளையம்பாளையம்,  திருச்செங்கோடு
ஐயாவின் குடும்பம் பற்றிய தினமலர் கட்டூரை:👇

 

 

எங்களுக்கு VVCR Murugesa Mudaliyar ஐயா பற்றி தெரிந்த தகவல்களை இங்கு பதிவிட்டுள்ளேம். இவரை பற்றிய வேறு சில தகவல்கள், நன்கொடைகள் மக்கள் சேவை பணிகள், போட்டோ  இருந்தால் போட்டோ இருந்தால் sengundharkaikolar@gmail.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும் அல்லது 7826980901 க்கு what’s app செய்யவும்.

One thought on “வி.வி.சி.ஆர். முருகேச முதலியார்

  • October 14, 2021 at 3:39 pm
    Permalink

    Today I got a new message about a philanthropist in our community Thank you verymuch God bless you to have good health and happiness in your life and your family to continue the service to our community

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *