Visits:1127 Total: 2674391
வீராணம் ஏரியை காப்பாற்றிய செங்குந்தர் பெரிய வேசம் மற்றும் வாய் பூட்டு திருவிழா
போர்மரபினரான செங்குந்தர் கைக்கோளர்கள், வீராணம் ஏரியில் இருந்த வல்லாலகண்டன் என்ற ஒரு அசுரனை அழித்த நிகழ்வை நினைவு கூறும் திருவிழா.
தமிழகத்திலேயே மிகப்பெரிய ஏரி என்றால் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி தான்
950 ஆண்டுகளுக்கு முன்பு வீராணம் ஏரியில் வல்லன என்ற அசுரன் கம்பம் நட்டு அதில் மாளிகை கட்டி வாழ்ந்து வந்தான் அவனின் இன்னல்கள் தாங்காமல் மக்கள் கஷ்டம் அடைந்தனர். இதனை சேரர் சோழர் பாண்டியர் ஒன்று சேர்ந்து இந்த அரக்கன் மீது போரிட்டனர் ஆனால் மூவேந்தர்களால் வெற்றிபெற முடிய வில்லை.
இதையடுத்து,
முருகபெருமானுக்கு துணையாக இருந்து சூரபத்மன் என்ற அரக்கனை அளித்த வீரவாகு உள்ளிட்ட நவவீரர்கள் வம்சத்தில் வந்த செங்குந்தர் கைக்கோளர் மரபினர்களுக்கு அசுரனை அளிக்கும் தெய்வ சக்தி இருப்பதால்
மூவேந்தர்கள் ஒன்று கூடி செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்திடம் உதவி கேட்டனர்.
இதற்க்கு சம்பத்தம் தெரிவித்த செங்குந்தர்கள்
10 பேர் சேர்ந்து நாங்கள் அவனை கொள்ளுவோம் என்று கூறி சென்றனர்.
வீராணம் ஏரி கரை சென்றனர் அங்கு தண்ணீர் அதிகமாக இருந்ததால் 2 செங்குந்தர்களை வெட்டி தெப்பம் செய்து அசுரனின் கோட்டை யை மீதமுள்ள 8 செங்குந்தர் வீரர்கள் அடைந்தனர்.
கோட்டை மதிலில் அசுரன் யாரும் ஏரா வண்ணம் எண்ணெயை ஊற்றி இருந்தான். மீதி இருந்த 8 பேரில் 2 பேரை வெட்டி இரத்த மணல் பிசைந்து சுவற்றில் அடித்து ஏறி உள்ளே சென்று 5 பெயரும் பதுங்கி இருந்தனர். அசுரனை பார்த்தவுடன் 5 நபரும் எழுந்து நின்று அசுரனை கொல்ல முயன்றனர் அப்பொழுது அசுரனின் மனைவி மடிபிச்சை கேட்டதால் அவனை விட்டுவிட்டு அவனது நாட்டை கைப்பற்றினர், அசுரனும் வேறு இடத்துக்கு சென்றுவிட்டான்.
அசுரனை விரட்டி வெற்றியடைந்த 5 செங்குந்தர் கைக்கோளர்கள் இந்த நிகழ்வை அரசன்நிடம் சொல்லும் பொழுது மூவேந்தர்களில் ஒருவர் நம்பவில்லை.
இதையடுத்து தாங்கள் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்க அந்த 5 செங்குந்தர் கைக்கோளர் வீரர்களும் காளியை வேண்டி நவகண்டம் செய்துக்கொண்டனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், உடையார்குடி துர்க்கையம்மன் கோவில் ஆடித்திருவிழாவில் இந்நிகழ்வு வருடம்தோறும் நடைபெறும்.
இந்த விழா வரலாற்றை பற்றி மேலும் தகவல் தெரிந்தவர்கள் comment யில் தெரிவிக்கவும் அல்லது 7826980901 என்ற எண்ணுக்கு what’s app செய்யவும்.
.