Responsive Menu
Add more content here...

திருவண்ணாமலை சாமி முதலியார்

Visits:801 Total: 2674886

திருவண்ணாமலை செங்குந்தர் கைக்கோளர் முதலியார்களில்

200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த

திருவண்ணாமலை. சாமி முதலியார் குடும்பம் பற்றிய குறிப்பு

அக்காலத்தில் வெள்ளைக்காரன் வந்து பள்ளிக்கூடங்களைத் திறந்தான் ஆனால் அவன் கிறிஸ்தவ மெஷினரி (மதத்தையும் பரப்பும் விதமாக) பள்ளிக்கூடங்களை ஆரம்பித்தான்.

நம்முடையடைய ஆட்கள் வெள்ளைக்காரனிடம் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்தோம்.

மேலும் அக்காலத்தில் படிக்காமல் இருப்பது படிப்பதை காதில் கூட

கேட்க கூடாது என்று சொன்னது.

அதுவும் 200 ஆண்டுகளுக்கு முன்பு

தி.சாமிமுதலியார் காலத்தில் ஊரில் பள்ளிக்கூடங்கள் இருந்ததில்லை.

அப்படி ஓரிரு பள்ளிகள் இருந்தாலும் அவை திண்ணைப் பள்ளிக்கூடங்கள்

அதில் ஜமீன்தாரர் வீட்டுப் பிள்ளைகள்

பணக்காரர்  செல்வந்தர் பணம் கட்டிப் படிக்கும் பிள்ளைகள் மட்டுமே படித்தார்கள் படிக்க முடிந்தது.

ஆனால் பணக்கார் பணம் படைத்த

சாமி முதலியார் சாமான்யர்களும் படிக்க  “விக்டோரியா இந்துபள்ளி என்ற பள்ளிக் கூடத்தைத் திறந்தார்.

இன்றைக்கு 100 கோடிக்கான ரூபாய் மதிப்பு பெறும் அந்த பெரிய இடத்தையும் இந்த பள்ளிக்கு “தர்ம “மாக கொடுத்தார்.

இரண்டு தலைமுறைக்கு முன்னதாக  திருவண்ணாமலை நகரத்தைக் சேர்ந்த பெரும்பாலனவர்கள் “விக்டோரியா இந்து பள்ளியில்” படித்தவர்கள் தான்.

தி.சாமி முதலியாருக்கு மூன்று ஆண் பிள்ளைகள்

1. டி.எஸ். முத்துக்குமாரசாமிமுதலியார்

2. டி.எஸ். நாரயணசாமி முதலியார்

3. டி.எஸ். ராமு முதலியார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தை மாதம் மாட்டுப்பொங்கல் அன்று விடியற்காலை 5.30 மணியிலிருந்து 6 – 00 மணிக்கு

அண்ணாமலையாருக்கு நடைபெறும் முதல் ஆராதனை அபிஷேகம் முதல் மண்டகப்படி

தி.சாமி முதலியார் குடும்பத்து மண்டகப்படி தான்

ராஜ ( ராய ) கோபுரத்துக்கு வடக்கில் இருக்கும் திட்டு வாயிற்படியிலேயே இந்த முதல்மண்டகப்படி ஆராதனை மாட்டுப்பொங்கல் அன்று சூரிய உதயத்தில் நடக்கும்

அந்தக் குடும்பத்து அபிஷேக ஆராதனை நடந்த பிறகுதான்உற்சவ மூர்த்திகளே

திருவூடலுக்கு போகும்

அப்படி இந்த ஊரின் முதல் குடும்பம் பெரிய குடும்பம் அந்தக் குடும்பம்.

அந்தப் பெரிய குடும்பத்தின் மூத்த பிள்ளை தி.சாமிமுதலியாரின் முதல்மகன் டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார் என்பவர் திருவண்ணாமலை நகரமன்ற தலைவராக பதவி வகித்தவர்.

1929 முதல் 1939 வரை 10 ஆண்டு காலம் திருவண்ணாமலை நகரமன்ற தலைவராக சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்.

அண்ணாமலையார் திருக்கோயிலின் அறங்காவலராகவும்

அறங்காவல் குழுவின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

இன்றைக்கு வளர்ந்து விரிந்து பரந்து பெருநகராகவிளங்கும்

திருவண்ணாமலைக்கு சாத்தனூர் அணையிலிருந்து ராட்சத குழாய்களின் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது  வருகிறது.

ஆனால் 90 வருடங்களுக்கு முன் திருவண்ணாமலை மக்கள் கிணற்று நீரை மட்டுமே நம்பி கிணற்று

தண்ணீரை பயன்படுத்தி வந்த போது

திருவண்ணாமலைக்கு மேற்கே மூன்று மைல் தூரத்தில் இருக்கும் சமுத்திர ஏரிக்கு கீழே பிரமாண்ட கிணறுகளை வெட்டி அதிலிருந்து மோட்டார் வைத்து இறைத்து குழாய்கள் மூலமாக

திருவண்ணாமலை நகருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவர் டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார் தான்.

இப்பொழுது கூட திருவண்ணாமலை நகரில் மிச்ச மீதமிருக்கும் தெருக் குழாய்களை _ பழைய தெருக் குழாய்களை பார்த்தால்

அந்தத் தெருக் குழாய்களில் பெயர் கல்வெட்டுகள் இருக்கிறது.

அந்தக் குடிநீர்க்குழாய் கல்வெட்டுகளில் 90 சதவீதம் நகராட்சி தலைவர் என்று டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார்

பெயர்தான் பொறிக்கபட்டிருக்கும்

ஆணையாளர் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களின் பெயர் இருக்கிறது.

நண்பர்களே…

நான் 1960 களில் பள்ளிக்கு படிக்க வந்த காலத்தில் இப்போது இருப்பது போல் ஓட்டல்கள் டீ கடைகள் இல்லை

பாட்டல் வாட்டர்களும் இல்லை

தண்ணீர் தாகம் என்றால் என்னைப் போன்ற வெளியூர்க்காரர்கள் குழாய்த் தண்ணீரைத்தான்குடிப்போம்.

குழாயைத் திறந்துவிட்டு தண்ணீரை குடித்துவிட்டு முகம் கை கால்களையும் கழுவுவோம்.

முத்துக்குமாரசாமி முதலியார் குடும்பத்திற்கு திருவண்ணாமலைக்கு தெற்கே கீழ் அணைக்கரை  சாவல்பூண்டி சமுத்திரம் கிராமங்களில் ஏராளமான நஞ்சை புஞ்சை நிலங்கள் இருந்தது.அதுவும் சமுத்திர ஏரியின் தண்ணீர் பாயும் நிலங்கள்

அடிக்கடி நிலத்தை சாகுபடியை பார்க்க சமுத்திர ஏரிக்கு கீழே போகும் போது

அவருக்கு தோன்றி இருக்கிறது.

வளர்ந்துவரும் இந்த ஊருக்கு சமுத்திரம் ஏரிக்கு கீழே பிரமாண்ட கிணறுகளை வெட்டினால் தான் அதிலிருந்து வற்றாமல் தண்ணீர் கிடைக்கும் என்று திட்டமிட்டு கிணறுகளை வெட்டி

முதன்முதலாக திருவண்ணாமலைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்தவர் டி.எஸ். முத்துக்குமாரசாமி முதலியார்

இப்பொழுது நகரம் முழுதும் மின்சாரம் வந்து விட்டது. தெருவிளக்குகள் ஒளிர்கின்றது.

90 வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலையின் ஒவ்வொரு தெரு வின் முகப்பிலும்ஒரு பெரிய கல்தூண் நடப்பட்டிருக்கும்.

அந்த கல்தூணின் உச்சியில் மண்எண்ணெய்லாந்தர் – சிம்னி தான் இரவு நேரங்களில் பெயருக்கு “மினுக்” “மினுக்” என மின்மினிப் பூச்சி போல    தூரத்து நட்சத்திரம் போல் எரியும்.

டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார் திருவண்ணாமலை நகராட்சி தலைவராக வந்த போது தான்அவர் தான் அன்றைய திருவண்ணாமலை நகரம் முழுவதும் முதன்முதலாக மின்சார விளக்குகளை அமைத்தவர்.

அதேபோல நகரத்து குப்பைகளை அள்ளுவதற்கு அள்ளி அவைகளை வெளியே எடுத்துச் சென்று ஒரு இடத்தில் கொட்டி எருவாக்கி(இயற்கை உரம்) விவசாயிகளுக்கு வழங்குவதற்கு திட்டம் கொண்டு வந்தவர் டி.எஸ்..முத்துக்குமாரசாமி முதலியார்.

மாட்டு வண்டிகள் மூலமாக திருவண்ணாமலையிலிருந்து குப்பைகளை நகருக்கு வெளியே கொண்டு சென்று

அவருடைய நிலங்கள் இருக்கும் கீழ் அணைக்கரை கிராமத்திற்கு அருகில்மணலூர்பேட்டை சாலையில் நகராட்சி எருக்குழிகளை ஏற்படுத்தியவர்.

90 வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் ஆதிதிராவிடர்கள்  அண்ணாமலையார் கோயிலுக்கு போவதற்கு  தடை இருந்தது.

அதிகபட்சமாக கோபுரத்தில் நுழைந்து சின்ன நந்தி வரை கூட போக முடியாதகாலம்

அவர் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த போது தான் “ஹரிஜன ஆலயப் பிரவேசம் “நடந்தது

அவரே முன்னின்று ஆதிதிராவிடர்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார்.

அந்தக் காலத்தில் 1920 — 1930 –

1940 களில்

கவர்னர் கலெக்டர்

நீதிபதிகள் எல்லோரும் ஆங்கிலேயர்கள்

அவர்கள் திருவண்ணாமலை வந்தால்

தங்கினால் அவர்களுக்கு வரவேற்பு விருந்து என்று திருவண்ணாமலையில் கொடுத்த ஒரேகுடும்பம்

டி.எஸ்.முத்துக்குமரசாமி முதலியார் குடும்பம் தான்.

ஒரு பக்கம் கீழ் அணைக்கரை சாவல்பூண்டி சமுத்திரம் என மூன்று கிராமங்களிலும் 300 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் அந்த குடும்பத்திற்கு

சொந்தமாக இருந்தது.

விவசாயத்தோடு இன்னொரு பக்கம் ஜவுளி வியாபாரமும் செய்தார்கள்.

டாடா கம்பெனியின் அத்தனை பொருட்களுக்கும் இவர் ஏஜெண்ட்டாக

இருந்தார்

இந்துஸ்தான் லீவர் என்ற அந்த கம்பெனி தயாரித்த பொருட்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மொத்த ஏஜெண்ட்டாக இருந்தார்.

இந்தியன் டுபொக்கோ கம்பெனியின் . சிகரெட்டுகள்  சிசர்ஸ் பிளேயர்ஸ் வில்ஸ்

பாஸுங் ஷோ  வில்ஸ்   நேவி புளு

என ஏராள சிகரெட்டுகளுக்கு மாவட்ட அளவில் ஏஜெண்டாக இருந்தார்

பாரி கம்பெனியினுடைய

பாரி மிட்டாய் பாரி சாக்லெட்

பாரி உரம் போன்ற பாரிக்கம்பெனி தயாரிப்புகளுக்கு ஏஜென்டாக இருந்தார்.

டால்மியா சிமெண்ட்டுக்கு அவர்தான்

ஏஜண்ட்டாக இருந்தார்.

முன்னாள் திருவண்ணாமலை மாவட்ட செங்குந்தர் சங்க தலைவரும், மூன்றுமுறை MLA, ஒரு முறை lok shaba MP யாக இருந்த எஸ். முருகையன் முதலியார் இவரின் மருமகன் ஆவர்.

திருவண்ணாமலை. சாமி முதலியார் தானமாக கொடுத்த 100 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அரசியல் கட்சிக்காரர்கள் அபகரிக்கும் முயற்சி நடந்து வருகிறது.

 

 

One thought on “திருவண்ணாமலை சாமி முதலியார்

  • March 31, 2022 at 2:49 pm
    Permalink

    Thanks a lot for making a history for my family.
    I’m Govind the grandson of samikannuraj who is the son of narayanaswami.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *