Responsive Menu
Add more content here...

திருப்பத்தூர் கா.அ. சண்முக முதலியார் exMLA

Visits:341 Total: 2674596

திருப்பத்தூர் சீர்மிகு திருவாளர்

செங்குந்தர் கைக்கோள முதலியார்
                       ⚜️குலத்தோன்றல்⚜️
கா. அ. சண்முக முதலியார் exMLA


             (2-11- 1885 – 17.7.1978)

 

பிறப்பு

வேலூர் மாவட்டம் நூல் மற்றும் கைத்தறித் துணி வாணிகத்தில் சிறந்து விளங்கிய திருப்பத்தூர் அருணாசல முதலியாருக்கும். துணைவியார் முத்துவேடியம்மாள் ஆகியோருக்கும் பார்த்திப வருஷம் ஐப்பசி மாதம் 18ந் தேதியில் 2-11- 1885ல் சண்முக முதலியார் தோன்றினார். இவருக்கு ஆண் குழந்தைகள் இருவர். பெண் குழந்தை ஒருவர் என மூன்று குழந்தைகள் உள்ளனர். 
 
இளமையில் கல்வி: சண்முகருக்கு 5 ஆண்டுகள் நிறைந்த பின்னர் அவரை திருப்பத்தூர் ஆஞ்சநேயர் கோவில் நாகப்ப நாயுடு திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்தனர். அங்கு சில காலம் பயின்றார், மாரியம்மன் கோவில் பள்ளியில் சில ஆண்டுகள் படித்தார், பின்னர் சாமி செட்டித் தெருவில் உள்ள கல்யாணராமய்யர் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து பல ஆண்டுகள் படித்தார். 
 
பொதுத்தொண்டு
1915ம் ஆண்டில் திருப்பத்தூரில் முதன்முதலாக பெஞ்ச் மாஜிஸ்திரேட் கோர்ட் அமைந்த போது. திரு.சண்முகனார் அவர்கள் கௌரவ மாஜிஸ்ட்ரேட் ஆக நியமிக்கப்பட்டார். 5 ஆண்டுகள் அப்பணியாற்றிய பிறகு, 1920ல் முதல் வகுப்பு பெஞ்ச் மாஜிஸ்ட்ரேட் ஆக நியமனம் பெற்றார். 
 
ஜில்லா போர்டு – நகர் மன்றம்
 1924ல் அப்பதிவியிலிருந்து விலகி. ஜில்லா போர்டு உறுப்பினர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். 1927ல் திருப்பத்தூர் நகர மன்றத்துக்கு ஓர் உறுப்பினராக நியமிக்கப் பெற்றார். அந்த ஆண்டிலேயே நகர் மன்றத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப் பட்டார். 1930ல் திருப்பத்தூரில் “பிளேக்” என்னும் கடும் நோய் ஏற்பட்டு, மக்கள் எல்லோரும் வெளியூர் சென்று விட்டனர். தலைவர் என்ற முறையில் இவர் நோய் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எல்லாம் சென்று தேவையான உதவிகளைச் செய்தார். 1933ல் மீண்டும் நகர் மன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.
 
தாலுகா போர்டு 
1930ம் முதல் திருப்பத்தூர் தாலுகா போர்டில் அங்கம் வகித்து வந்தார். 1933ல் தாலுகா போர்டுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். 1933ல் ஜில்லா போர்டு தேர்தலிலும் நின்று வெற்றி பெற்றார். 1936ம் ஆண்டுடன் ஜில்லா போர்டு பதவி முடிவடைந்தது.
 
காந்தீயக் கொள்கையில் பற்று 
சண்முகர் தமது மணி விழா நினைவாக காந்தி கட்டிட நிர்மாண அறக்கட்டளை நிறுவி, அதற்கு ரயில்வே ரோட்டில் உள்ள தனது 0.80 செண்ட் நிலத்தை நன்கொடையாகக் கொடுத்தார். காந்தியடிகளின் கொள்கைகளைப் பரப்ப கால்கோள் செய்யு முகத்தான், இலவச திருமணம், நூல் நூற்பு வேள்வி, இந்த கலாசாரப் பிரச்சாரம் போன்றவை நிகழச் செய்தார். அன்று அவர் கொடுத்த 0.80 செண்ட் நிலம் இன்று ஒரு கோடி ரூபாய் மதிப்பு பெறும்.
 
 சட்டமன்றம் 
1937ஆம் ஆண்டில் சென்னை மாநிலச் சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக சண்முகனார் அவர்கள் வேட்பாளராக நிறுத்தப் பட்டார். நீதிக்கட்சி சார்பாகவும் மக்கள் கட்சி சார்பாகவும் இரு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மும்முனைப் போட்டி. மூன்று மாதங்கள் தேர்தல் வேலைகள் நடைபெற்றன. பெருவாரி யான வாக்குகள் பெற்று சண்முகனார் வெற்றி பெற்றார். காந்தியடிகளின் அறப்போராட்டம் காரணமாக நாட்டில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதனால் 1941ல் சட்டப் பேரவை அரசால் கலைக்கப்பட்டது. 
 
நூற்பு ஆலைகளில் – பங்கேற்பு 
20ஆம் நூற்றாண்டில் முற்பகுதி யில் கோயம்புத்தூரில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. 1924ம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்ட ஸ்ரீரங்கவிலாஸ் மில்லில் சண்முகனார் பங்குதாரராகச் சேர்ந்து டைரக்டரா கவும் ஆனார். பின்னர் பயனீர் மில்லிலும் பங்குதாரர் ஆகி டைரக்டர் பதவி வகித்தார். திருப்பூரில் ஆலை அமைக்க ஆவண செய்தார். அந்த மில்லில் பல ஆண்டுகள் டைரக்டரா கவும் இருந்தார். நூற்பு ஆலைகளின் தொடர்பு இருந்ததால், நூல் வியாபாரத்தை குடியேற்றத்தில் தொடங்கினார். அவ்வூர் செங்குந்தர்கள் பலரோடு சேர்ந்து “கலைமகள் பருத்தி அரைவை ஆலை” தொடங்கினார். 
 
திருமகள் நூற்பு ஆலை – நிர்வாகத் திறமை  வேலூர் குடியாத்தம் ஒருநூற்பு ஆலை தொடங்கினால் நல்ல இலாபம் வரும் என் று அறிந்த சண்முக முதலியார் ஏராளமான செங்குந்த பிரமுகர்க ளோடு தொடர்பு கொண்டு திருவாரூர் வள்ளல் சபாபதி முதலியார், காஞ்சி நாகலிங்க முனிவர் முதலியவர்களோடு தொடர்பு கொண்டு சுமார் 7 லட்சம் ரூபாய் திரட்டி “திருமகள் நூற்பாலை” ஒன்றை நிறுவி 1937 முதல் 1965 வரை சிறப்பாக நிர்வகித்தார். 
 
செங்குந்த சமுதாயப் பணி
 திரு , கா.அ.சண்முக முதலியார் அவர்கள் திருப்பத்தூரில் தோன்றிய செங்குந்த குல மக்களின் முன்னேற்றத்தில் இளமை முதல் ஆர்வம் காட்டி வந்தார். 1934ல் திருவாரூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டில், வர்த்தக மாநாட்டுத் திறப்பாளராகவும் 1937ல் மதுரையில் கூடிய செங்குந்தர் மாநாட்டுத் தலைவராகவும் 1956ல் திருச்செங்கோட்டில் கூடிய செங் குந்தர் மாநாட்டில் சமூக மாநாட்டுத் தலைவராகவும் சண்முகனார் அவர்கள் பங்கேற்றார். சண்முகனார் அவர்கள் 1955ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய தாம் மாணவ செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். 25-12-1976 வரை தொடர்ந்து 21 ஆண்டுகள் தலைவராக இருந்து பெரும் பணியாற்றினார். அப்போது கட்டுமானப் பணியில் இருந்த வள்ளலார் இல்லத்துக்கு ரூ.5.000/- நன்கொடை அளித்ததோடு, கட்டிட நிதிக்குப் பெரும் பொருள் ஈட்டித் தந்தார், திருக்கோயில்கள் பணிக்காகவும். கல்வி நலத்திற்காகவும் இவர் அளித்த நன்கொடைகள் ஏராளம்; ஏராளம். 
 
கவிஞராகத் தமிழ்ப்பணி  திரு.கா.அ.சண்முகனார் அவர்கள் ஒரு சிறந்த கவிஞராகவும் இருந்தார். இவருடைய தமிழறிவு வியக்கத் தக்கது, இயல்பாக கவியாற்றும் இவரது திறமையை கண்டு தமிழறிஞர் பலரும் போற்றியுள்ளனர். இவர் இயற்றிய கவிதை நூல்கள் விபரம்:- நளாயினி வெண்பா, திருமால் போற்றி அகவல், இராமன் புகழ் அறுபது, திருமால் அவதாரம், திருவேங்கடமாலை, நூற்றியெட்டு திருப்பதி போற்றி அகவல், திருமால் வெண்பா மாலை, இராகவன் புகழ் மாலை, திருவேங்கடப்பெருமாள் திருப்பள்ளியெழுச்சி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, திருமால் அருச்சனை ஈடுபாடு, காங்கிரஸ் பேரியக்கத்தில் பணி, கல்விப் பணி, வேதாந்த பாட சாலைப் பணி, கோயில் திருப்பணிகள், , நூல், புத்தாண்டு வாழ்த்துக்கள், இவருடைய பொது வாழ்க்கை தேச விடுதலை இயக்கத்தின் செங்குந்த சமுதாயப்பணி, தமிழ் பணி கவிதைகள் இயற்றும் பணி இவை யெல்லாம் இவருடைய பெருமை களைப் பேசிக் கொண்டேயிருக்கும். செங்குந்த செம்மல், திருப்பத்தூர் தீபம் கா.அ.சண்முக முதலியார் அவர்களது மாபெரும் வாழ்வு 1978ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் நாள் (காளயுக்தி ஆண்டு ஆடிமாதம் முதல் நாள்) திங்கட்கிழமையன்று 93வது வயதில் இறைவனடி சேர்ந்தார். வாழ்க அவரது புகழ்! வளர்க அவர் தொண்டு! க்க்
 
 
⚜️இப்பெரியவர் விட்டுச்சென்ற சமுதாய பணியினை இவரது மூன்று தலைமுறையாக வாரிசுகளும் மக்கள் சேவை செய்து வருகின்றனர். திருவாளர். பி.மணவாளன் எம்எல்ஏ வாக தேர்வாகி சிறப்பு செய்தவர் பரம்பரை பரம்பரையாக சமுதாய சேவையில் முன்னணியில்
உள்ளார் என்பது மிகச்சிறப்பாக ஆகும்.
சமுதாய தொண்டினை செய்து வருபவரை வணங்கி வாழ்த்துவோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *