Responsive Menu
Add more content here...

திருநெல்வேலி வி.எஸ். சங்கரசுப்ரமணிய முதலியார் exMLA

Visits:683 Total: 2674624

செங்குந்தர் கைக்கோள முதலியார்                குலத்தோன்றல்

சுதந்திர போராட்ட வீரர், திருநெல்வேலி முன்னாள நகர்மன்ற தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர்.

திருநெல்வேலி வி.எஸ். சங்கரசுப்ரமணிய முதலியார் exMLA

 

                                (04.10.1902 – 08.09.1976)
பிறப்பு

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 4.10.1902ல் திரு. சுப்பிரமணிய முதலியாருக்கும் திருமதி முத்தமாளுக்கும் திருமகனாகப் பிறந்து வளர்ந்து வீரவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரையிலும் நெல்லை சி.எம்.சி, சாப்டர் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு முடித்தும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1925ல் பி.ஏ பட்டமும், 1928ல் சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றவர்.

வாழ்க்கை & இந்திய சுதந்திர போராட்டம் 
வான சாஸ்திரம், சோதிடம் போன்ற கலைகளையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றவர். கல்லூரியில் படித்த காலத்தில் இராணுவப் பயிற்சி பெற்றும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.பள்ளி மாணவராக இருக்கும் போதே தேசிய பற்றோடு திலகரின் விடுதலை நிதி திரட்டியும், 1921ல் திரு. டி.ஆர், மகாதேவ அய்யருக்கு உறுதுணையாக இருந்து அம்பை வட்டாரத்தில் பெருமளவில் உறுப்பினர்களைச் சேர்த்தவர், நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றிய ஆரம்பத்திலேயே (1930) இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
காந்தி மகானின் கவனத்துக்கு நெசவாளர்களின் பிரச்சனைகளை கொண்டு சென்ற குழுவின் மூன்று உறுப்பினர்களில் 28 வயதே நிரம்பிய திரு VSS அவர்களும் ஒருவர் தனது 15 ஆவது வயதிலேயே ல் வீரவநல்லூரில் செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தை தோற்றுவித்து, திரு.M.K.ஆறுமுக முதலியார் அவர்களை தலைவராகவும் தான் உட்பட 22 செங்குந்தர்களை
உறுப்பினர்களாக்கி சங்கத்தை 1923ல் பதிவு செய்திருக்கிறார். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் தோற்றுவித்த காலத்திலும், 08.12,1938ல் சங்கத்தை பதிவு செய்தபோது அதன் செயற்குகுழு உறுப்பினர்களில் இவரும் ஒருவராகவும், சென்னை மயிலாப்பூரில் நடந்த மூன்றாவது செங்குந்தர் வாலிபர் மாநாட்டின் உறுப்பினராகவும் குறிஞ்சிப்பாடி செங்குந்தர் வாலிபர் 10ஆவது மாநில மாநாட்டின் தலைவராகவும், அம்பையில் நடைபெற்ற செங்குந்தர் வாலிபர் மாநாட்டின் வரவேற்புக் குழுத்தலைவராகவும் இருந்து திறம்பட செயல்பட்டுள்ளார்.
1932ம் ஆண்டு சுதந்திர போராட் டத்தில் நேரடியாகப் பங்கேற்றதோடு அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு, கள்ளுகடை மறியல் போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டார், 1933 முதல் வரை சுதேசி பொருட்காட்சியை ஸ்ரீ நெல்லையப்பர் ஆனி தேரோட்டத் திருவிழாவின்போது நடத்தியுள்ளார்.
1937-1938ல் நடைபெற்ற நகர் மன்றத் தேர்தலில் நெல்லை, மேலைப்பாளையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட நெல்லை நகரசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்நெல்லை நகர காங்கிரஸ் குழுவின் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் குழுவிலும் பணியாற்றியுள்ளார். சுதேசி நற்சான்றுக் குழுவின் செயலாளராகவும் 1936 முதல் 1942 வரை நெல்லை மாவட்ட போக்குவரத்துக் குழுவில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
திரு.VSS அவர்கள் நகர் மன்ற தலைவராக பணிசெய்த காலத்தில் அவர் செய்த முக்கிய பணிகள்:
1. தற்போது இயங்கும் நெல்லை நகர் மத்திய பேருந்து நிலையம் அமைத்தது.
2. நெல்லை புகைவண்டி நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்குச் செல்லும் சுற்றுப்பாதைக்கு மாற்றாக தனது நண்பர் த.மு.சாகிப் அவர்களிடமிருந்து நகராட்சிக்கு இலவசமாக இடத்தைப் பெற்று த.மு. சாலை என நேர் பாதையினை அமைத்தது.
3.நகரின் வீதிகளை விரிவுபடுத்தியது.
4. நகரில் கழிவு நீரோடைகள் அமைத்தது.
5. முதன் முதலாக சிமெண்ட் சாலை அமைத்தது.
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது கைதாகி 21.02.1942 முதல் 01.04.1945 வரை இரண்டாண்டுகளுக்கு மேல் வேலூர் தஞ்சை சிறையில் அடைபட்டு இடர் நிரம்பிய வாழ்வை அனுபவித்துள்ளார்.
1945ல் மெட்ராஸ்  மாகாண சட்டமள்றத் தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் திரு.VSS அவர்கள் போட்யிட்டு எம்.எல்.ஏ வாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய ஜவுளிக் கட்டுப்பாடு வாரியத்தின் தமிழகப் பிரதிநிதியாகவும், 1946 சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும், 1949ல் கைத்தறித் தொழில் பாதுகாப்பு மாநாட்டில் தலைமை தாங்கி தொழில் முன்னேற் றத்திற்கான பல திட்டங்களைத் தெரிவித்துள்ளார்கள்.
1952 தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில்
1958ல் திருநெல்வேலிபேட்டை நகரில் முதல் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை அமைய அப்போதைய கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.M. P. நாச்சிமுத்து செங்குந்தர் அவர்களுக்குத் துணையாக நின்றும் நூற்பாலை இயக்குநராகவும் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்கள்.
கைத்தறி நெசவாளர்கள் நூற்பாலையில் வேலை பெறுவதற்கு மிகுந்த உதவியாக இருந்துள்ளார்கள். இந்த நூற்பாலையைத் தொடர்ந்து தமிழகத்தில் 18 கூட்டுறவு நூற்பாலைகள் தொடங்கபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆன்மீகப் பணியில் ஈடுபட்ட சில ஆண்டுக்குப் பின்னர் கிருபானந்த வாரியார் அவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றார். திரு.வி.எஸ்.எஸ் அவர்கள் தமது 74ஆவது வயதில் 08.09.1976 அன்று இறைவனடி சேர்ந்தார்கள்.
மேலும் இவரின் இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், போட்டோ, இவரின் குலதெய்வம் பற்றிய தகவல் இருந்தால் sengundharkaikolar@gmail.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *