தா மோ அன்பரசன் MLA
Visits:646 Total: 2674336
- தா. மோ. அன்பரசன் என்பவர் தமிழகத்தின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராவார். இவர் குன்றத்தூரில் திசம்பர் 11, 1959 இல் பிறந்தவர். இவர் பி. யூ. சி வரை படித்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டவராவார்.
அரசியல் வாழ்க்கை தொகு இவர் 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் திமுக சார்பில் போட்டியிட்டு, அ.தி.மு.க வைச் சேர்ந்த பா. வளர்மதி என்பவரை ஆலந்தூர் தொகுதியில் தோற்கடித்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தி.மு.கவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்.