Responsive Menu
Add more content here...

சேவூர்த் தலைப்பலிச் செப்பேடு

Visits:961 Total: 2407871

சேவூர்த் தலைப்பலிச் செப்பேடு


செப்பேடு உள்ள இடம்: 
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் சேவூரில் முத்துக்குமாரசுவாமி கோயில் காணியாளரான கொளப்பலூர் அருணாசல முதலியாரிடம் இ்ச் செப்பேடு உள்ளது.

செப்பேட்டின் சுருக்கமான விளக்கம்:
ஆம் ஆண்டு கச்சி அண்ணாமலை முதலியார் மகன் முத்துக்குமாரநயினார் திருப்பரண் ஏறிக் கழுத்தலகு பாச்சிச் சிவலோகம் ஏகிய
செய்தியைக் கூறுகிறது. கல்வெட்டுகள் கூறும் இதனை நவகண்டம் என்று பண்டைய முதற்கண் செங்குந்த முதலியார்களின் பெருமைகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

உள்ளிட்ட சமூகப் கொண்ட முத்துக்குமாரநயினார் தன் மகன் குப்பமுத்துவுக்கு ராஜாதிபதி
மண்டலாதிபதி மடாதிபதி என்று பட்டம் சூட்டினார். கொங்கு 24 நாட்டுச் சமயமுதலிப் பட்டக்காரர்கள்.செங்குந்தர்கள் மடாதிபதிக்குக் கொடுக்கவேண்டிய வரிகள் பல
கூறப்படுகின்றன.அதுவும்
கூறப்பட்டுள்ளது. முத்துக்குமாரநயினார் மீது பிள்ளைத்தமிழ் இலக்கியம்
பாடப்பட்டுள்ளது.

செப்பேட்டின் நகல் (மூலம்)
பூவுலகத்திலே கலியுக சகாப்தம் 4842ல் துந்துபி வருஷம் மார்கழி
மாசம் 3 தேதி கக்கிரவாரமும் திரிதிகை புணர்பூச நட்சத்திரத்தில் கச்சி
அண்ணாமலை முதலி மகன் முத்துக்கு மாரநயினார் திருப்பரணேரிக்
கழுத்தலகு பாச்சிச் சிவலோக மேகினார்
சொற்ஸ்ரீமன் மஹாமண்டலேஸ்வரன் அரிகர விபாடன் பாசைக்குத்
கண்டன் தப்புவராத கண்டன்
மூவராய கண்டநாடு கொண்டு
கொண்டநாடு கொடாதான் துலுக்கர்தள விபாடன் துலுக்கர்மோகந் தவிர்த்தோன் ஒட்டியர் துலுக்கரை ஓட்டி வென்றவன் அஷ்டகிரி மட்டும் அரசாளுமன்னன் கோஷ்டம் பதினெட்டும் கொண்ட கிருபாகரன் துஷ்டானுக்கிரகன் சிஷ்டபரிபாலன் தன்னுயிர் போல மன்னுயிர்க்கிரங்கும் மகாராஜன் அறிவுக்கு அகத்தியன் பொறுமைக்குப் பூமாதேவி குளிர்ச்சிக்குச் சந்திரன் நிதிக்குக் குபேரன் வில்லுக்கு விசையன்
சொல்லுக்குத் தருமன் மல்லுக்கு பீமன் கொடைக்கு கர்ணன் ராஜாதிராஜன்
ராஜபரமேஸ்வரன், ராஜமார்த்தாண்டன், ராஜகெம்பீரன், ராஜரணசூரன் தேசமைம்பத்தாறிலும் ஜெயங்கொண்டவராகிய விசையமாநகரில் ரத்தினச்
சிங்காசனத்திற்குக் காரணகர்த்தராகிய நரசிங்கராயர், வீரவசந்திரராயா விருப்பாச்சிராயர், பிரபுடதேவராயர், மகாதேவராயர், மல்லிகார்ச்சுனராயர் கிருஷ்ணராயர், அச்சுதராயர், சதாசிவராயர், வெங்கிடபதிராயர், சீரங்கராயர் ஆனை குந்திராயர்

மனுநீதி விபரமும் ஆறிலொரு கடமை கொண்டு ஒரு குடைக்குகீழ்
ராச்சிய பரிபாலனம் பண்ணியருளிய மகாராஜனவர் களின் காரியப்
பிரதானராகிய மைசூரில் சாமராசு உடையார், கொண்டி வீரராச உடையார்
தேவரா சுடையார
கொங்கு தேவராசுடையார் செங்கோல்
மகாராஜனவர்கள் செலுத்துகின்ற சாலிவாகனன் கலியுகம் 4842 ல் துந்துபி வருடம் கணுவாயிக்கிங்கீழ் வசிக்காநின்ற சீமை முகாசி ஆறுநாடு சேவூரில் ஸ்ரீ வெங்கராயனார் அரசில் குமார சோழியாண்டாக் கவுண்டர் நீதி செலுத்துகிற நாளில் தாராபுரம்
சுப்பிரமணிய மூர்த்திக்குத் துணைவராகிய 

வீரவாகு, 

வீரகேசரி,
வீரமயேந்திரன்,

வீரமார்த்தாண்டர், 

வீரராந்தகர், 

வீரதீரர் நவவீரராகிய சிவன்மைந்தர்

திருமேனி காவலர் என்ன விலங்கிலும் நா விலங்காதவர், பட்டமானம்
பழுதறக் காத்தவர், இட்ட பரணேரி யிறங்காதவர், வல்லானை வென்ற வாசி
வேளைக்காரர் கந்தனனுசரர், காமாட்சி வரபுத்திரர், பஞ்சாட்சரம் பஞ்சவர்ன விருது மஞ்சள் பாவாடையுடைவர், ருத்திராட்ச மாலிகாபரணர், அரிபூசை குருபூசை மயேஷ்வர பூசையுள் ளவர், லவண்டை மல்லாரி முதல் 32 வாத்தியம்
பெற்றவர், இரத்தப் பஞ்சவர்ணக்கு டை பகல்வத்தியுடையவர், அர்த்தனாரிக் குஞ்சமும் ஆயுதம் பெற்றலர், ஆவடி சேவடி திருவடிபெற்றவர், காஞ்சிபுரத்தில்
கருமாரி நிலை கொண்டவர், சற்சன சுத்த சிவாச்சாரியார் அசுரர்குல காலர்
செருமுனை கண்டு பின்னடையாதவர், சென்றதிசை முழுதும் வென்ற
தீர், செங்கை வடிவேலினர், சீர்பாதசேகரர், என்றும் மனுநீதி கெடாதவர்
செம்பியன் மனமெச்சும் செங்குந்த வீரர், தம்பியை மனமொத்த
சாதியையொழிப்பர், ஈரேழுலகத்திலும் வீராதிவீரர், துஷ்ட நிக்கிரகர் சிஷ்ட
பரிபாலனர் வீரமயேஸ்வரர்
வீரபுரந்தரர் வீரராக்கதர் பொய்த்தலைக்கு மெய்த்தலை
கொடுத்தவர் பாவா டை சந்திராகாந்திப்
பாவா டையும் பல்லோர் புகழ்ந்திடப் பட்டணங் காத்தவர், சோணாடு கார்த்த சுகுணதீர், வீணாள்
சிகண்டியுடையவர், வரம்பிலாவமரர் சிறைமீட்டவர், கடம்பமாலை
கமழுமார்பினர், மந்தாரமாலை வாகுடன் பூண்டவர், நமச்சிவாயன்
தேவியராகிய நவமாதர் ஈன்ற 100009 பதின்மரின்றுணைவர், கைலை
காவலர், கைலாயத்தில் பார்வதி பரமேஸ்வரர் ஆடையா பரணமும்
கைலாயங்கிரி மகமேரு மலையையும் பார்வதி தேவியார் தனது மகனாகிய

செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள்
கைக்கொள் ளுங்களென்று திருவாக்கருளித் தமது திருக்கரத்தால்
பெற்றவர், இரவி பரவிட இல்லசையாதவர், புரவலர் புகழும் போர்முகவீரர்,
வீரவாகு முதல் 100009 வீரரிடத்தில் ஒப்புவித்து இதுகளயெல்லாம்
திருநீறிடப்பெற்றது முதல் கைக்கோள முதலிமாரென்று திருநாமம்
பஞ்சாட்சரப் பரிபூரணர், வீரசிங்காசன மேவி வீற்றிருப்பவர்
ஒஓட்டக்கூத்தரின் ஒப்பிலாத் தமிழுக்குச் சிரசிங்காசன மீந்தவர்
வணங்கா முடியினர், சித்திரப் புலிக்கொடி சீராய்ப் பெற்றவர், வாசியும்
விருதும் வன்மையுமுடியத் தேச மதிக்கச் செத்துப் பிறந்தவர்
வாஞ்சையுடனே மகாதேவரைக் கண்டு காஞ்சிபுரத்திற் கருமாரி பாய்ந்தவா்,
தீர்,
கைத்தாளம் பிடுங்கினோர்
சென்ற நான்முகனைச் சிகையைப் பிடித்தவர், கண்டுவருங்காளிதன்
நாரணன்றனது நந்மருகர் என சீரனி தாரனி செப்பிடப் பெற்றவர்
மன்மதனிருந்த மந்திரபுரியை வினயமுடன் புகுந்து வெட்டியழித்தவர்
இறப்பதற்கென்றும் ஏங்காத
மான குருமொழியை மறவாத செங்குந்தர் கோத்திரம் நீடூழி காலம் வாதி
கருமாரி கண்ட கைக்கோள முதலிமாராகிய கந்தனருள் பெற்றவ்.
அகாங்கு 24 நாட்டுச் சமயமுதலி பட்டக்கார், நாட்டாண்மைக்காரி
உறவீன்முறையார், எழுகரை நாட்டுச் சமயமுதலி பட்டக்காரா்
நாட்டாண்மைக்காரர்
எல்லோருங் கூடி கலியுக சகாப்தம் 4842 ல் துந்துபி வருடம் மார்கழி மாசம்
நே தேதி குருவாரமும் புனர்பூச நச்செத்திரமும் சுபநாம யோகமுங் கூடிய
சு.தினத்தில் செம்பியன் கிழாநாட்டுச் சேர்ந்த சேவூர் ஆறு நாட்டில் கூடி
முத்துக்குமாரசாமியாரவர்கள் மஞ்சள் நீர் குடித்து வளர்த்தின மகன்
குப்பமுத்துமுதலிக்கு முத்துக்குமாரநயினாரவர்கள் தமது சிவபூசை
முஸ்தேதி யெல்லாம் ஒப்புவித்துக்கொடுத்து தமது மகனாக நாட்டிலே
சுத்தி வருகிறபடிக்கு நாடு கூட்டி குப்பமுத்துமுதலிக்கு ராஜாதிபதி
மண்டலாதிபதி மடாதிபதியென்று விளங்கிய வைராபதிப் பட்டமும்
கொடுத்து நாட்டிலே வரி நடந்து வருகிறபடிக்கு எழுதிக்கொடுத்த சாசனம்
நம்ம இடங்கையர், மேற்படி கம்பளத்தார
தேவபூசை நடக்கும்படிக்கு பேரூருக்கும் சித்தூருக்கும் உள்ளபடி வைராபதிவரி மக்கத்துக்கு 1¼ பணம் ஒரு பூட்டு நூலும் வந்த
ஆள்களுக்குப் பரிசாரகமும் இந்தப்படி சம்மதித்து கொங்கு 24 நாட்டார்களும் எழுகரை நாட்டார்களும் நம்ம இடங்கை வகைராக்களும்
கூடி முத்துக்குமார நயினார் முன்பாகத் தீர்த்து சந்திரசூரியருள்ளவரைக்கும் நடந்துவரும்படியாக சேவூர் திருக்கபாலீசுவரர் சன்னதியில் எழுதியது ஏறுக்கு ¼, தூக்குக்கு ¼, பட்டரைக்கு ¼. சந்திரசூரியருள்ளவரைக்கும் வருவோமாகவும் இந்த தர்மத்தை சகலரும் நடத்தி மேலே கண்ட சகலரும் நடத்தி பருவமாகும்

இந்த தர்மத்திற்கு யாதாமொருத்தர் விகாதம் பண்ணின பேர்கள்
காசிக்கெங்கையிலே கோதாவரியிலே கன்னியாகுமரியிலே
பாவநாசத்திலும் திருக்குற்றாலத்திலும் பிராமணரையும் யோகீசுபரரையும்
குருக்களையும் தாய் தந்தையரையும் காராம்பசுவையும் கொன்ற
தோஷத்துலே போகக்கடவார்கள். இந்தத் தர்மத்தைப் பரிபாலனம்
பண்ணின பேர்களுக்கு அஷ்ட ஐஸ்வரியமும் ஆயுராரோக்கியமும் சந்தான
சமுரத்தையும் தெய்வப் பிரசாதமும் குரு பிரசாதமும் ராஜப் பிரதாபமும்
மென்மேலுண்டாகத் தக்கதாக காமாட்சிதேவியும் சுப்பிரமண்ணியசாமியும்
முத்துக்குமாரசுவாமியும் கிருபைசெய்து ரட்சிப்பார். சுபம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *