செங்குந்தர் வெற்றிப் பட்டயம்
செப்ப்பேடு உள்ள இடம்: ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகத்தில் இந்த பட்டயம் உள்ளது.
செப்ப்பேட்டின் சுறும்கமான விளக்கம்:
கொங்கு நாட்டு விசயமங்கலப் பகுதியில் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் மக்கள் வந்துள்ளனர். செங்குந்த முதலியார், படையாட்சிக் கவுண்டர், ஆசாரிகள்
ஆகிய பஞ்சகம்மாளர், நகரத்தார், பள்ளர், மாதாரிகள் ஆகியோார் இடங்கைச் சாதியாகவும், கவரைச் செட்டிகள், தேவாங்கர், சாணார் ஆகியோர் வலங்கைச் சாதியாகவும் தம்மை அழைத்துக் கொண்டனா இடங்கை வலங்கைப் பிரிவுகளாக இயங்கி விசயமங்கலம் மாரியம்மன் திருவிழா வில் இடங்கைக்குரிய சில/சிறப்புக்களை வலங்கையார் அணிந்து கொண்டர். ஆட்சேபம் தெரிவிக்க ஒரு வருடம் இந்தத் தகராறு நீடித்தது. அங்கு வந்த அசரத் திப்பு சுல்தானின் அந்தியூர் திவான் கிரிமிரே சாயபு பாட்சாவிடம் முறையிட அவர் ‘பூர்வம் தீர்ந்த பட்டயங்கள்’ வாங்கிக் கொண்டு ஆதாரங்களுடன் அவர்களைத் திருப்பூருக்கு வரச்சொன்னார் திருப்பூரில் விசாரித்த பின் வலங்கையார்க்கு இடங்கையார்க்குப் பூர்வீகம் முதல் என்னென்ன உரிமைகள் உண்டு என்று நிர்ணயம் செய்தார். வெற்றி பெற்ற இடங்கையார் வெற்றிக் காணிக்கையாக இடங்கையார் வழக்குத் தொடுத்த பொன் அபராதம் விதித்து வலங்கை தவறாக ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த விசாரணை 5.2.1797 இல் நடைபெற்றுள்ளது. திப்புவின் ஆட்சிக்காலத்தில் கொங்கு நாட்டுக் கிராமங்களில் அமுலுதார், சேனபாகம், சிரஸ்தார் ஆகிய மூன்று அதிகாரிகள் இருந்தனர் அமுலுதார் பெரும்பாலும் இசுலாமியராகவே இருந்தனர். மற்றவர் பெரும்பாலும் அந்தணராக இருந்தனர் விசயமங்கலம், அறச்சலூர், துடுப்பதி, ஊத்துக்குளி அதிகாரிகள் பெயர்கள் குறிக்கப் பெறுகின்றன திப்புவின் நிர்வாகம் பற்றி அறிய இப்பட்டயம் மிகவும் உதவுகிறது. இடங்கையர்க்குச் செங்குந்தர் தலைமை தாங்கியதால் இந்த ஓலைப்பட்டயம் செங்குந்தர் வெற்றிப்பட்டயம் என அழைக்கப்படுகிறது. பல ஊர்க் கவுண்டர்கள் முன்னிலையில் இவ்வழக்கு தீர்க்கப்பட்டுள்ளது.
செப்பேட்டின் நகல் (மூலம்)
ஸ்ரீ சாலியவாகன சகார்த்தம் 1718 க்கு மேல் கலியுக சகார்த்தம் க்கு மேல் செல்லாநின்ற நழ வருடம் தை மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அவிட்ட நட்சத்திரம் பரிநாம யோகமும் வால்வாகரணமும் யிப்படியாகக் கொற்ற சுபதினத்தில் ருமது றாசாதிராசன் றாசமாத்தாண்டன் றாசகெம்பீரன் பிரவுடறாய பிரதா பறாயர் நறபதிறாயர் நரசிங்கறாயர் தேவப்பறாயர் வுடையா வீரசமமந் தறாயர் சிக்கிந்ததேவருடையர் கிஷ்ட்டினறாயாவுடையர் இவர்கள் முதலான அநேக றாயர் பட்டங் காணங்கர் மயிகுூர்ச்சமஷ்ததானம் சாமறாயர்வுடையார் உடபைய காவேரி மத்திஷ்ஷமான சீரங்கப்பட்டணத்தில் ரற்றின சிம்மாசனருடராய் ருக்கும்போது பிருதுவிராச்சியம் பண்ணிக் கொண்டி யிவர்கள் காரியத்திற்குக் கருத்தராயிய நவாப்பு அசுரது அயிதாலிக்கான் சாயிவு அவர் கள் குமாரர் நவாப் அசறது டீப்புச் சுலுத்தான் பாச்சா சாய்பு அவர்கட்கு றாச்சியம் பரிபாலினம் பண்ணுகிறபோ துயிவாகள் காரியத்திற்கு முக்கிஷ்த்தராயிய அசூர் கச்சேரி மகாறாயர் றாயேஷ்த்திரி மீருசாயவு பாட்சா அவர்கள் விசாரணை பண்ணும்போது கொங்குமண்டலத்துக்குச் சேர்ந்த அந்தியூர்க்கச்சேரி ஸ்ரீ திவான் கிரிமிரே சாயிவு பாட்சா அவர்கள், சிரஷ்த்தார் றாமறாயர் அவர்கள் அமுதலிச்சாயிவு பாட்சா அவர்கள், கொங்கு மண்டலம் குறிப்பு நாட்டில் விசையாபுரத்துக்கு அமுலுதரர் மம்முதல்லி சாயிவு அவர்கள், சேனபாகன் அன்னயன் அவர்கள் சிரசதார் வெங்கிட்டயன் அவர் கள், அரச்சலூர் சுபா னுக்கான் சாயிபு அவர் கள் கிஷ்ட்டினய்யனவர்கள், சிரஷ்த்தார் கல்லய்யன் அவர் கள், துடுப்பதி அமுலு தார் மீராண்சாயிபு அவர்கள், சேனபாகச் சின்னப்பன் அவர்கள் சிரஷ்த்தார் வீரறாகுவய்யன் அவர்கள், ஊத்துக்குளி அமுலுதார் சாலிீ சாயிபு
அவர்கள், சிரஷ்த்தார் சேசகிரி அய்யர் அவர்கள், சேனபாக சுப்பய்யன் அமுலுதாரர் சேனபாக கோபால அவர்கள் குறிப்பு நாட்டுக் கவுண்டர்களில் அந்தியூர் காழியண கவுண்டன் அனுமந்த கவுண்டன்,பொன்னைய கவுண்டன், நெட்டரங்க கவுண்டன் துடுப்பதி வாரணவா சிக் கவுண்டன், அரசப்ப கவுண்டன், நாகய்ய கவுண்டன், பொன்னய கவுண்டன், ராமய கவுண்டன், சின்னத்தம்பிக் ராமய கவுண்டன், ஊத்துக்குளி சற்பண சுவுண்டன் கவுண்டன் பெரியதம்பிக் கவுண்டன் முத்துக் கவுண்டன், செல்லப்ப கவுண்டன், திருப்பூரு பொன்னய கவுண்டன், முதலிபாளையம் முத்துக் கவுண்டன் குன்னத்தூரு சீரங்க கவுண்டன், அறியூரு முத்துவேலப்ப கவுண்டன், ஆவுடையாக் கவுண்டன், கருப்ப கவுண்டன், திங் களூரு குள்ள கவுண்டன் மேற்படியார்கள் முதல் இருபத்துநாலு நாட்டுக் கவுண்டர்கள் முட்டத்து ராமகவுண்டன், செவியூறு ஈஸ்வரமூர்த்திக் கொண்ட மேற்படி ஆட்கள் முதல் 24 நாட்டு கவுண்டர்கள்
யிடங்கயிலாகிய இருபத்திநாலு நாட்டு
நாங்களெல்லா ருங்கூடி எழுதிக்கொடுத்த பூந் துறைநாடு
மபுரிநாடு முத்துக்காளியப்ப கவண்டர், காஞ்சி ஒடுபங்கநாு முதலபட்டக்கார கவுண்டர் அவர்கள், அருநாட்டு முதலி பட்டக்காப அவர்கள், பொன்குலுக்கி நாடு முதலி பட்டக்காரா அவர்கள்
பக்கநாடு சமையப்பட்டக்காரக் கவண்டரவர்கள், குரிப்பு நாகு
பட்டக்காரக் கவுண்டரவர்கள், காங்கயநாடு சமையப்பட்டக்காரக
சபையில் தேவண கவுண்டர் பட்டக்காரர் வேங்கல நாடு சமையம்பட்டக்காரக் கவுண்டரவாக ள்
ஒடுவங்கம் கவுண்டரவர்கள் தேன்கரைநாடு சமையப்பட்டக்காரக் கவுண்டரவாகள் கயைப்பட்டக்காரக் கவுண்டரவர்கள் அரையநாடு சமையம்பட்டக்கா கவுண்டரவர்கள்
எழுகரைநாடு சமயம்பட்டக்காரக் கவுண்டர், படையாச்சிக் கவுண்டன்
சின்னாயிக் கவுண்டன்
நாடு படையாச்சிக் கவுண்டன், கருப்ப
எவுண்டன், காஞ்சி ஒடுவங்கம் சமையம்பட்டக்காரர், பச்சைமுத்தாக
அண்டன், பூந்துறை நாடு பச்சா கவுண்டன், வடகரைநாடு படையாசசிக
கவுண்டன், திருமலை மணியகாரன், சத்திமங்கலம் ஒடுபங்கம் முத்துக
கவுண்டன், ஆசாரிகள் சின்னத் தட்டான், திருவேங்கிடக்கொல்லன்
கதித் தமலை ரங்க த் தச்சன் ஆனிமுத்து ஆசாரி, பொம்மத்தச்சன்
முத்துக்கொல்லன், நகரத்தான் தொப்பைசெட்டி, முத்தஞ்செட்டி, குள்ள
சேர்வைக்காரன் முத்துரங்கம், வெங்கிட்டநாயக்கன், பழ்ழர் வகையில்
வீரபத்திரப்பண்ணாடி
சோணப்பண்ணாடி, மாதாரி வகைகள் குப்பமாதாரி, ரங்கமாதாரி
சின்னமா தாரி இருபத்து நாலு நாட்டிலுள் ள யிடங்கையாருக்கு செங்குந்தமுதலிமார் படையாச்சிக்கவுண்டர் அவர்கள் பஞ்சாள த்தார் பள்ளர் மாதாரிகள்
யிடங்கையோருகளும் வெற்றிப்பட்டையம் கொடுத்த விவரம்
விசயமாநகரத்தில் மாரியம்மன் திருநாளிலே யிடங்கையாருக்கும்
வலங்கையாருக்கும் யித்தணடத்தாருக்கும் தண்டம் வந்து வலங்கைக் கவரைச் செட்டியாகிறவன் இடங்கையாருக்குள் ள சிகப்புக் க த் தியும் விருதும் நமக்குச் செல்லுமென்று சொல்லிக்கெண்டு யித்தண்டத்தாரும்
வழக்காடி ஆறு மாதம் ஒருவருசக காலமாய் யித்தண்டத்தாரும் சாதியும் கொண்டு வழக்காயிருந்த யிடத்தில் மகாறாயர் றாயஸ்த்திரி திவான் ரே சாயபு அவர்கள் சி மை விசாரணைக்கு விசயமங்கலத்திற்கு
குட்டிப்பண்ணாடிப்யிருளப்பப்பண்ணா மாதாரி யிவர்கள் முதலாகிய
வந்திருந்தயிடத்தில் வலங்கை
சேடச்செட்டி, தேவாங்கச்செட்டி, சாணார் முதலான வலங்கைச்சனமும்
தேசம் பெத்திசெட்டி தேட சிட்டி தேவாங்க செட்டியார் முதலான வலங்கை சனமும். யிடங்கைக்குச் சேர்ந்த முதலிமார், படையாச்சிக் கவுண்டர்கள்
ஆசாரியள் யித்தண்டத்தாரும் வந்து வழக்குச் சொன்னபடியினாலே
யித்தண்டத்தாரை பூருவந் தீர்ந்த பட்டையங்கள் வாங்கிக்கொண்டு
திருப்பூருக்கு வரச்சொல்லிப்போட்டுப் போனபடியினாலே அதே மேரைக்கு
யித்தண்டத்தாரும் திருப்பூருக்கு வந்து பட்டையங்கள் வாசித்துப்
பார்த்தயிடத்தில் யிடங்கையார் பட்டையத்தில் பூருவம் காஞ்சிபுரத்தில்
தீர்ந்த பிரகாரத்துக்கு கத்தியும் பஞ்சவர்ண விருதும் அத்தநாரிக் குஞ்சமும்
பகல்த் தீவட்டியும் பஞ்சவர்ண பாவாடையும் தெருமேல் மிரவணையும்
அன்னமேல் மிரவணையும் குதிரைமேல் மிரவணையும் பல்லக்கின்மேல்
மிரவணையும் செல்லுமென்று யிருந்தது
வலங்கை கவரைச்செட்டியள் கொண்டுவந்த பட்டையத்தில்
வெள்ளை வெண்சாமரம்
சனத்துக்குச்
செல்லுமென்று யிருந்தது. வலங்கைய்யர் கொண்டுவந்த பட்டையத்தில்
யிடங்கையார்க்குச் செல்லும் விருது பஞ்சவர்ண விருதும் பஞ்சவர்ணக்
கொண்டுவந்த
செட்டி
வாலிசெட்டி வீரிசெட்டி முதலான பலபட்டறையார் முன்பாகத் தீர்ந்து
கொண்டுவந்த பட்டையத்திலே
யிடங்கையாருக்குச் சகல விருதும் செல்லுமென்று யிருக்கிறபோது நீ
யிருக்கக்
காரணமென்னவென்று வலங்கைக் கவரைத் தேசம் பெத்திசெட்டியைப்
பிடித்து அங்கை செய்து விலங்குபோட்டு அரமணைக்கு ரண்டாயிரத்து
நானூறு பொன்னு அவுதாரம் வாங்கி வச்சார்கள். யிடங்கையார் கிட்ட
வெற்றிக்காணிக்கி ஆயிசத்தி அயினாறு ரூபா வாங்கி வச்சார்கள். வெற்றிப்
பட்டையமுங் குடுத்தார்கள். மிரவணையும் பண்ணி வச்சார்கள். இதெ
கொடுத்த
இதெ வெற்றிப்பட்டையமாக கட்டிக் கொள்ளவும்
வலங்கை சனத்துக்கு வெள்ளைக்கு டை
வெள்ளை வெட்டுப்
பாவாடையும்ன்வலங்கைச் பகல்த்தீவட்டியும் பட்டையத்தில் யிருந்தபடியாகவே பஞ்சாயத்தாரு கவரைச்செட் டி
வலங்கையான் யில்லாது குமார்க்கம் சண்டை பண்ணிக்கொண்டு
வெற்றிப்பட்டையமாக வெற்றிப்பட்டையம் அனைவரும்
எழுதிக் எழுதினவர் விசயாபுரிக்கெடியில சிரஷ்த்தார் வெங்கிட்டயன்
அவர்கள் எழுதினது. காமாச்சியமமன் துணை. அந்தியூர்க்கச்சேரி ராஜஸ்ரீ
திவான் கிரிமீரே சாயிபு அவர்கள், கச்சேரி சிரஷ்த்தார் இராமறாயர் அவர்கள்
அமுதல்லிக்கான் சாயிபு அவர்கள், விசயாபுரித் துக்கிடியில் அமலுதாரா
மம்முதல்லி சாயபு அவர்கள், சேனபாக அன்னய்யன் அவர்கள், சிரஷ்த்தார
வெங்கிட்டயன் அவர்கள், அரச்சலூரு அமுலுதார் ராயசம் சு பானுகான,
சா யபு அவர்கள், சிரஷ்த்தார் கல்லய்யன் அவர்கள், சேனபாகக.
கோபாலகிஷ்ட்டப்பயன் அவர்கள். துடுப்பூதி அமுலுதாரர் மீரான் சாயிபு
அவர்கள், சிரஷ்த்தார் வீரராகவய்யன் அவர்கள், சேனபாகச் சின்னப்பன
அவர்கள், ஊத்துக்குளி அமுலுதார் சாலீ சாயேபு அவர்கள், குரிப்பு நாட்டுக்
கவுண்டர்கள் அனுமந்த கவுண்டன், பொன்னைய கவுண்டன், அரசப்பக்
கவுண்டன், குப்பண கவுண்டன், பட்டக்காரக் கவுண்டன், நாகப்பக்
கவுண்டன், பொன்னைய கவுண்டன், றாமைய கவுண்டன், துடுப்பூதி
வாரணவாசிக் கவுண்டன், சின்னத்தம்பிக் கவுண்டன், ராமைய கவுண்டன் ஊத்துக்குளி சரபண கவுண்டன், பெரியதம்பிக் கவுண்டன், முத்துக்
கவுண்டன், செல்லைய கவுனண்டன், திருப்பூரு பொன்னைய கவுண்டன்
முதலிபாளையம் முத்துக் கவுண்டன், அந்தியூர் காளியண கவுண்டன்
குன்னத்தூரு சீரங்கக் கவுண்டன்
முத்துவேலப்பக் கவுண்டன், ஆவுடையாக்கவுண்டன், கருப்ப கவுண்டன் திங்களூரு குள்ள கவுண்டன், செவியூரு ஈஸ்வரமூர்த்திக் கவுண்டன்
ஆயசிம் கவுண்டன், ஆதியூரு
முத்துவேல் அப்பா கவுண்டர் 1600 கருக்கானியில் உள்ள கவுண்டரில் செவியூர் ஈஸ்வரமூர்த்தி கவுண்டன்.
நாங்களெல்லோருங் கூடி பிடங்கய் யாருக்கு வெற்றிப்பட்டையம்