புதுச்சேரி டாக்டர் ந. கோவிந்தசாமி முதலியார்
Visits:691 Total: 2674961
‘டாக்டர் ந. கோவிந்தசாமி செங்குந்தர் அவர்களைப் பற்றி….
பிறந்தநாள் 18-01-1919
மறைவு: 06.09.2019
பெற்றோர் : தெய்வத்திரு.நடராஜ முதலியார்-உண்ணாமுலை அம்மாள் அறிந்த மொழிகள் தமிழ். ஆங்கிலம், தெலுங்கு
குடும்பம் : துணைவியார்: திருமதி பட்டம்மாள்
மகள் : திருமதி.சரோஜா
மருமகன்: டாக்டர்.ப.திருநாவுக்கரசு, மேலாண் இயக்குநர் – ஆனந்தா நிறுவனங்கள், பேரன்: திரு.தி.இராஜ ராஜன் பொறியாளர், திருமதி. துர்கா இராஜராஜன், பேரன் : திரு தி.அருள்குமரன் சமையற்கலை, ஹோட்டல் நிர்வாகம் கொள்ளு பேத்தி: மீரா, பேரன்:கண்பத். வகிக்கும் பதவிகள்
தென்னிந்திய செங்குந்த மகாசன சங்கத்தின் புரவலர் புதுவைச் செங்குந்தர் கல்வி, நலச் சங்கத்தின் சிறப்புத் தலைவர், புதுச்சேரி மாநிலச் செங்குந்தர் சங்கத்தின் தலைவர், கம்பன் கழகத் தலைவர், ஆனந்தா நிறுவனங்களின் தலைவர். வகித்த பதவிகள் வணிக அவைத் தலைவர் ரோட்டரி சங்கத்தின் தலைவர். (சார்டெட் உறுப்பினர்) புதுவை மாநிலக் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர், புதுவை மாநிலக் கூட்டுறவு வங்கியின் தலைவர். புதுவை கூட்டுறவுத் துறை அச்சகத்தின் தலைவர், புதுவை தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு தலைவர், அகில இந்திய வானொலி குரல் தேர்வுக் குழு உறுப்பினர், புதுவை மைய பல்கலைக் கழகத்தின் லோசனைக்குழு உறுப்பினர், புதுச்சேரி தொழுநோய் நிவாரண குழுத் தலைவர், புதுவை மாநில ஓவியக்கலைஞர் நிறுவனப் புரவலர், புதுச்சேரி மாநில திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர், Pondicherry Special Police Officer, புதுவை கூட்டுறவுத் துறை நிறுவனங்களின் ஆ லோசனைக் குழு உறுப்பினர், பிரெஞ்சு இந்திய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர்.
சிறப்புப் பட்டங்கள்
தமிழ்மாமணி, பல்கலைச்செல்வர், சேவா ரத்னா, பொதுப்பணிச்செல்வர், கம்பன் காவலர், கம்பன் கவிரத்னா, கம்ப பாவாணர், கர்ம யோக சிரோன் மணி. தமிழறிஞர், சித்த மருத்துவர், பல்கலைத்திலகம், பாவேந்தருடன் இருந்த சான்றோர் விருது
சென்ற அயல்நாடுகள் லண்டன், பெல்ஜியம், ஹாலந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இலங்கை, நார்வே, சுவீடன், டென்மார்க், ஜெனிவா , வெனீஸ், இத்தாலி, நேபிள்ஸ், சுவிட்சர்லாந்து