பி.ஏ. பெருமாள் முதலியார் (சிவாஜி கணேசனை சினிமாத்துறைக்கு அறிமுகப்படுத்தியவர்)
(10.05.1916 – 07.12.1978)
தயாரிப்பாளர் விநியோகஸ்தர் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் அவர்கள் நேஷனல் தியேட்டர் திரையரங்கம், நேஷனல் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பு விநியோகம் செய்து வந்தார்.
பிறப்பு
அன்றைய வடக்கு வட ஆற்காடு மாவட்டத்தில் வேலூர் வட்டம் சத்துவாச்சாரி அருகிலுள்ள பூட்டுத்தாக்கு என்ற கிராமத்தில் செங்குந்தர் குலத்தை சேர்ந்த ஜவுளி தொழில் அதிபர் அருணாசல முதலியார் சிந்தாமணி அம்மாள் தம்பதியருக்கு ஒரே மகனாக மே 10 1919 ஆம் ஆண்டு பிறந்தார் பெருமாள் முதலியார்.
வாழ்க்கை
தனது பள்ளிப்படிப்பை வேலூரில் முடித்தார் பின்பு லுங்கி ஏற்றுமதியாளராக தொழில் செய்தார் மீனாட்சி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
சிறுவயதிலேயே பெரியார் அண்ணா ஆகியோரிடம் ஈர்ப்பு கொண்டு அவர்களுடன் நெருக்கமாக பழகி வந்தார்.
பெருமாள் முதலியார், திராவிடக் கட்சி பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஆர் ராதா,
கே.வீரமணி, கண்ணதாசன், ஏஎல்எஸ்., சுந்தர்லால், டிஎஸ் துரைராசு, சுப்பையா செட்டியார், பட்சி ராஜா அதிபர் முதலியவர்களிடம் இவருக்குத் தொடர்பு உண்டு.
அக்காலத்தில் மூட நம்பிக்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்த தந்தை பெரியார் ரயில் மூலம் ஒவ்வொரு ஊருக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவருக்கு முதன்முதலில் கார் வாங்கிக் கொடுத்தவர் பெருமாள் முதலியார் ஆவார்.
கலைத்துறையில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர் தனது குலத் தொழிலான ஜவுளித்துறையில் சம்பாதித்ததை வைத்து 1948ல் வேலூரில் நேஷனல் தியேட்டர் என்ற திரையரங்கத்தை கட்டினார்
மிகுந்த கலை ஆர்வம் கொண்டவர் வேலூரில் சக்தி நாடக சபாவில் ரோஜாநாடகம் நடைபெற்றபோது அதில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகம் ஏற்பட்டு தேவி நாடக மன்றம் நடத்திய பராசக்தி நாடகத்தில் நடிக்க திரைப்படமாக தயாரிக்கும் எண்ணம் கொண்டார் பெரிய பெருமாள் பெரிய பல திரைப்படங்களை பராசக்தி படத்தை ஏவிஎம் கூட்டாக சேர்ந்து திரைப்பட முயற்சியில் ஈடுபட்டார்
வசனம் கலைஞர் கருணாநிதி அவர்கள் இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு என முடிவானது. சிவாஜி கணேசனுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துள்ளார்கள் சிவாஜி கணேசன் அவர்கள் சக்சஸ் கண்ட வசனத்தில் சட்டென்று பேசியுள்ளதாக சவுண்ட் என்ஜினியர் கூறியுள்ளார் முகம் சரியில்லை எனவும் சிலர் கூறியுள்ளனர் வேறு யாரையாவது வைத்து படத்தை முடியுங்கள் என்று பேசியுள்ளனர்.
மனம் தளராத திருப்பி இதில் மாணவர்கள் சிவாஜியை வேறு ஒரு ஊருக்கு அழைத்து வந்து உடல் தேற்றி சிலம்பம் போன்ற பயிற்சிகளை அளித்து மீண்டும் சென்னை வரவழைத்து உத்வேகத்துடன் படத்தைத் தயாரித்தார் 1952 திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
பிறகு பெற்ற மணம், ரத்தக்கண்ணீர் போன்ற படத்தையும் தயாரித்து வெளியிட்டார்
பெருமாள் முதலியார் நிலம் 9 ஏக்கரை தமிழக அரசு எடுத்துக் கொண்டது. அதையும் அவர் மனப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார். பூட்டுதாக்கு கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைக்க இடம் கொடுத்தார். அவரை அய்யா என்றுதான் பூட்டுதாக்கு கிராமத்தில் அழைப்பார்கள். அன்னதானம் நிறைய செய்வார்.
சிவாஜி குடும்பத்துடன் பெருமாள் முதலியார் வீட்டுக்கு வந்து செல்வார். அவர் சைவம்தான். கதர் ஆடைதான் அணிவார்.
ஏழை பள்ளி மாணவர்களுக்கு நிறைய உதவி செய்வார். அவரால் படித்த மாணவர்கள் இன்று அரசு வேலையில் உள்ளார்கள். நேஷனல் தியேட்டர் வேலூர் பெருமாள் முதலியாருக்குச் சொந்தமானது. வரி ஏய்ப்பு செய்யாமல் தொழில் நடத்த வேண்டும் என்று பெருமாள் முதலியார் கண்டிப்பாக
இருப்பார். 60 சதவீதம் விநியோகஸ்தர்க்கு கொடுத்து விடுவார். 40 சதவீதம் தான் தியேட்டருக்கு வந்து சேரும். எதிலும் நேர்மையாக இருப்பார். தொழிலாளர்
விஷயத்திலும் தாராளமாகத்தான்
நடந்து கொள்வார்.
அவர் தியேட்டரில் தொழிலாளர்கள் நின்றது கிடையாது. 20 வருஷம், 30 வருஷம் வேலை செய்த தொழிலாளர்கள் இருந்தார்கள். சென்னை மயிலாப்பூர் கிளப் சென்று வருவார். மாலை 6 மணிக்குச் சென்று 9 மணிக்கு
வந்து விடுவார். மயிலாப்பூர் ஜில்லானி டாக்டர் ரொம்ப நண்பர். அவரிடம் சென்று உடல் நலம் பார்த்துக் கொள்வார்.
தனது பால்ய பருவத்திலேயே பெரியாரின் அணுக்கத் தொண்டரான பி.ஏ.பி. “கடவுள் இல்லை’ என்ற பெரியாரின் சித்தாந்தத்தின் அடியெ நடைபயின்றவர். தனது இல்லத்திலும் காலண்டரில் கூட சாமி படங்கள் இருந்தால் மாட்ட மாட்டார். பேச்சிலும், செயலிலும் அதனைக் கடைப்பிடித்தார். தூய கதராடை பக்தரான இவர், வாழ்நாள்
முழுவதும் கதராடையையே அணிந்தவர். பெருஞ்செல்வந்தராய் மிளிர்ந்தபோதிலும்
தனது ஆரம்பக்கால நெசவுத் துறையில், “கைலி’ வியாபாரத்தில் பணியாற்றும்
ஊழியர்களிடத்தில் அன்பு பாராட்டி பல உதவிகள் புரிந்தார். தனது குடும்பத் தொழிலான நெசவுத் தொழிலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் பால்ய பருவத்திலேயே கலையின் மீது நாட்டம் கொண்டு தன்னை முழுநேரக் கலைஞனாகவே
ஆக்கிக் கொண்டவர்.
“நாம் இருவர்’ விநியோகஸ்தர் உரிமையைப் பெற்று தமிழ்நாடெங்கும் திரையரங்குகளில் வெளியிட்டு அக்கால சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
இவரது இந்த முயற்சி ஜெமினி ஸ்டுடியோ அதிபர் வாசனுக்கு வியப்பைத் தந்தது. தொடர்ந்து வெளிவந்த, “வேதாள உலகம்’, தொடங்கி 200-க்கும் மேற்பட்ட திரைப்பட விநியோக உரிமைகளைப் பெற்று வெளியிட்டதோடு அத்திரைப்படங்களின் இயக்குநர்களோடும், தயாரிப்பாளர்களோடும், கலைஞர்களோடும் நட்பு பாராட்டினார்.
பெரியாருடன் கொண்ட தோழமையால் அக்காலத்து திரைப்படத்தில் கோலோச்சிய என்.எஸ்.கிருஷ்ணன், அண்ணா, கலைஞர், திருவாரூர் தங்கராசு ஆகியோர்களுடன் நட்பு கொண்டதுடன் திரை உலகின் அனைத்து தொழில் நுட்பங்களையும் கற்று அறிந்திருந்தாலும் தன்னை ஒரு தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் மட்டுமே அடையாளம் காட்டிக் கொண்டார்.
“ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்குமே’ என்ற குறளுக்கொப்ப பெரியோர்களுடைய நட்பு ஒரு நாள் பழகினாலும் பெரிய மரமான (ஆலமரம்) பெரும் நிலத்தைப் பாறையும் பிளவும் படும் படியாக மிக ஆழமாகச் செல்வதும் என்பதுபோல் இவரது நட்பு அனைவரிடத்திலும் வேர்ஊன்றியது.
இவரது முதல் தயாரிப்பான, “பராசக்தி’ தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் சினிமா ரசிகர்களால் ஆகர்ஷிக்கப்பட்டு சுதந்திரத்துக்குப் பின் 50 ஆண்டு கால திராவிட சித்தாந்தங்கள் தமிழ்நாட்டில் வேரூன்ற காரணமாயின. அத்திரைப்படத்தில் என் தந்தை பீம்சிங் எடிட்டராகவும், கிருஷ்ணன் பஞ்சு இயக்குநராகவும், கலைஞர் மு. கருணாநிதி வசன கர்த்தாராகவும், பாரதிதாசன் பாடலாசிரியராகவும் திரையுலகில் அடியெடுத்து வைக்கவும், புகழ் பெறவும் காரணமானார். முழுக்க, முழுக்க திராவிட இயக்கத்தின் கொள்கைகள் இத்திரைப்படத்தில்
எதிரொலித்தன. இதன் மூலம் தி.மு.க. மக்களிடத்தில் பெரும் செல்வாக்கினைப் பெறத் துவங்கியது.
இதன் வெற்றியின் அடையாளமாய் தந்தை பெரியாருக்கு பிரசார வேன் ஒன்றும் வாங்கித் தந்தார். மேலும் இவரது குணாதிசயங்களில், ஒன்று ஆங்கிலேயர்கள் சொல்லாடலான “ஸார்’ என்ற வார்த்தையை ஓர் அடிமைத்தனத்தின் வெளிப்பாட்டுச் சொல்லாகவே கருதினார்.
அதனால் யாரையும் “ஸார்’ என்று அவர் அழைத்ததில்லை. “ஐயா’ என்னும் உரிமையுடன், “வாடா’ என்றே செல்லமாக அழைப்பார். அவர்கள் என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா முதல் தனது ஊழியர்கள் அனைவரையும் திரை உலகத்தினரையும் அவ்வாறே அழைப்பார்.
பெருமாள் முதலியார் விநியோகம் செய்த படங்கள்
200க்கும் மேற்பட்ட படங்களில் உரிமையைப் பெற்று விநியோகம் செய்தார் அதில் பிரபலமான படங்களில் சில
- பதிபக்தி,
- விடிவெள்ளி,
- நாமிருவர்,
- வேதாள உலகம்,
- ரங்கோன் ராதா,
- சாரதா,
- கிழக்கே போகும் ரயில்,
- சில நேரங்களில் சில மனிதர்கள்(1974),
- அன்னை இல்லம்(1964) ,
- பாசமலர் போன்ற பல படங்களுக்கு விநியோகஸ்தர் உரிமம் பெற்று விநியோகம் செய்தார்.
- 16 வயதினிலே
- கமல் நடித்த சிகப்பு ரோஜாக்கள்
- சட்டம் என் கையில்
- இளமை ஊஞ்சலாடுகிறது
பெருமாள் முதலியார் தயாரித்த படங்கள்
பராசக்தி (1952) – சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்த முதல் படம். படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்
ரத்தக்கண்ணீர் (1954) – எம் ஆர் ராதா கதாநாயகனாக நடித்த முதல் படம் இப்படத்தின் பிரமாண்ட வெற்றியால் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார்
பெற்றமனம் (1960) – சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்த படம்
தங்கதுரை (1972) – “தங்கதுரை’ படத்தைத் தயாரித்தார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. விநியோகஸ்தர்களுக்கும் ரொம்ப நஷ்டம் ஏற்பட்டது. விநியோகஸ்தர் நஷ்டம் அடையக் கூடாது என்ற நினைப்பில் சில விநியோகஸ்தர்களும் பணத்தைத் திருப்பிக் கொடுத்த பெருமை, பெருமாள் முதலியாருக்கு உண்டு.
1974-க்குப் பிறகு படம் தயாரிக்கவில்லை. மறுபடியும் சேலம் ஏரியாவுக்கு பாரதிராஜா படங்களை விநியோகம் செய்தார். கமலஹாசன் நடித்த படங்களை சேலம் ஏரியாவுக்கு வாங்கினார். “16 வயதினிலே’, “கிழக்கே போகும் ரயில்’, கமல் நடித்த “சிகப்பு ரோஜாக்கள்’, “சட்டம் என் கையில்’, “இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தை வாங்கி நல்லபடியாக தொழில் நடந்து வந்தார்.
மறைவு
தொடர்ந்து வெற்றிகரமாக படம் விநியோகம் செய்து வந்த நிலையில் அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு சிறிது காலம் படங்கள் வாங்கவில்லை. 1978 டிசம்பர் 7-ஆம் தேதி இறையருள் அடைந்தார். அவர் மறைவுக்கு எல்லா சினிமா கலைஞர்களும் கலந்து கொண்டார்கள். சிவாஜி கணேசன் கடைசி நிகழ்ச்சி வரையிலும் கலந்து கொண்டது எல்லோர் மனதிலும் நின்றது.
பெருமாள் முதலியார் மனைவி பி. மீனாட்சி அம்மாள் 9.4.2014-இல் மறைந்து விட்டார்கள்.
சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகரை உருவாக்கியவர் பி.ஏ.பெருமாள் முதலியார்
![]() |
பராசக்தி படத்தை இருக்குமபோது சிவாஜி கணேசனுக்கு நடிக்க சொல்லிக்கொடுத்த பெருமாள் முதலியார் |
![]() |
பெருமாள் முதலியார் உடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் |
இவரின் குலதெய்வம் திருத்தணி முருகன் மற்றும் வாழைப்பந்தல் பச்சையம்மன்
மேலும் இவர் பிறந்த தேதி இறந்த தேதி, வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.