பி.ஏ. சாமிநாதன் முதலியார். exMP
(15.01.1932 – 21.01.2012)
பிறப்பு:
தற்போது உள்ள திருப்பூர் மாவட்டத்தில் பு.புளியம்பட்டி என்ற ஊரில் செங்குந்தர் காமாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள ராஜா முதலியார் தெருவில் ஓர் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகம் பூசன் கோத்திரம் பங்காளிகள் குடும்பத்தில் ஆறுமுக முதலியார்க்கு 15.01.1932 அன்று மகனாக பிறந்தார்.
வாழ்க்கை:
இவர் கோவை செயின்ட் மைக்கேல் பள்ளியில் கல்வி பயின்றார். சிறுவயதில் இருந்து ஜவுளி துறையில் ஆர்வம் ஏற்பட்டு தொழில் செய்து வந்தார்.
பி.ஏ.சாமிநாதனுக்கு, மனைவி சம்பூர்ணம், ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். பேரறிஞர் அண்ணாதுரை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தார். திமுக மாவட்டச் செயலர், பு.புளியம்பட்டி பேரூராட்சித் தலைவர் மற்றும் திமுகவில் பல்வேறு பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். மிசா காலத்தில் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு லோக் சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பவானி சாகர் அணை தண்ணீரை திருப்பூர் மாவட்டத்துக்கு கொண்டு வந்து மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்த்தார்.