Responsive Menu
Add more content here...

மோரூர்க் காங்கேயர் செப்பேடு

Visits:911 Total: 2674553

மோரூர்க் காங்கேயர் செப்பேடு

காலம்: 15ஆம் நூற்றாண்டு

செப்பேட்டின் சுருக்கமான செய்தி

மோரூரில் கொங்கு வேளாளரில் கண்ண குலத்தைச் சேர்ந்த காங்கேயர் என்பவர் வாழ்ந்து வந்தார், எழுகரை நாட்டுக்கு அவர் தலைவர் அவருக்குக் கன்னிவாடிக் காங்கேயர் என்றும் பெயர் உண்டு. அவருடன்

வாழ்ந்து வருபவர் 60 கரண காங்கேயன் என்னும் இடங்கை செங்குந்தா குலத்தைச் சேர்ந்த நல்லய்யன் மகன் நல்லய்யன் என்பவர். தம்முடைய தலைவராகிய காங்கேயருக்குப் பிள்ளையில்லை என்று

‘அந்தணரைக் கொண்டு நடை பெறும் வேள்வியில் சொங்குந்த குல நல்லய் யன்’

முன்னிலையில் தன் தலையை இருதுண்டாக வெட்டிக் கொண்டான். அவன் வீரத்தைப் பாராட்டி அவன் வழியினர்க்குக் கன்னிவாடியில்

இருக்கும் இடங்கை உரிமைகள் யாவும் மோரூரிலும் வழங்கப்பட்டன. மோரூர் நல்லபுள்ளியம்மன் கோயிலில் அம்மன் செங்குந்தர்கட்கு அர்த்தநாரீசுவரன் முன்னிலையில் நியாயம் பேசும் உரிமை வழங்கப்படுகிறது. அவருக்கு கொடுக்கும் கொடைகள்

பற்றியும் இறுதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

நல்லஇராமசாமிப்பத்தர் நாடுபற்றிய செய்திகட்கு குறிப்புக்கள்

எழுகரை கொடுக்கப்பட்டுள்ளன செப்பேட்டை வெட்டியுள்ளார் என்பவர் செங்குந்த நல்லய்யன் தன் தலையை நிலையில் ஒரு சன்னதி மோரூர் கொங்கு வேளாளரில் கண்ணகுலக்கா ணிக்கோயில் நல்லபுள்ளியம்மன் கோயிலில் உள்ளது. செங்குந்த

முதலியார்கள் முத்துக்குமாரசுவாமி கோயில் என்று அழைக்கப்பெறுகிறது. அக்கோயிலே தன் தலையை வெட்டிக்கொண்ட நல்லய்யனின் பள்ளிப்படைக்

காயிலாகும். செங்குந்தர்கள் திருச்செங்கோட்டில் நல்லபுள்ளியம்மன் கோயில் ஒன்று கட்டியுள்ளனர். வெட்டிக்கொள்ளும் மட்டுமே அத்தெய்வத்தை வணங்குகின்றனர் தமிழ் ஆண்டு துந்துபி ஆவணி 25ஆம் தேதி திங்கட்கிழமை எப்படிழுதப்பட்டது என்று குறிப்பு உள்ளது.

இந்த நெல்லையன் வம்சத்தில் வந்தவர்களை இன்று செங்கோட்டுவேல் கோத்திரம் பங்காளிகள், தாடிக்கொம்பன் கோத்திரம் பங்காளிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

செப்பேட்டன் நகல்(முலம்)

ஸ்ரீமத் நந்திகேசுபரசுவாமியார் அனுக்கிரகத்தாலே திருவாய் மொழிந்த

படிக்கு அநேகம் சதுர்யுகம் பூசை கொண்டருளிய தேவாதிதேவன்

தேவுத்தமன்

திருபொஷ்கரனி முக்கணீசுவரன் நின்றகோல மழகிய நிமலன் நேரமொரு

பஞ்சவர்ணப்

திராவிடதேசத்தில் தொண்டைமண்டலத்தில்

திருக்கம்பையாற்றில் பார்வதி தேவியம்மன் அர்த்தபாகம் பெறவேண்டி

அரியதபசு பண்ணுகையில் வாம்பாகம் பெத்தருளிய அம்மன் வீரபாகுவைப்

பார்த்து நீங்கள் ஆறுபேரும் தேவர் சேனையை மீட்டபடியினாலே

உங்களுக்கு

கொங்கனென்றும் பேருமிட்டு பட்டாபிஷேகம் சூட்டுகிறேனென்று

அம்மன் கட்டளையிட்டபடிக்கு கொங்குமண்டலத்திலே தெட்சின

கைலாசமாகிய அரவகிரியைச் சூழ்ந்த எழுகரை நாடெனும் காவேரி பவானி

திருமனிமுத்தாநதி அழகுமுரிச்சான் தொப்பை ஆம்பிராநதி நொய்யல் ஆக

சத்த நதியாகிய எழுகரை நாட்டிலுள்ள சிவசந்நதிகளும்

பக்திப்பிரியன் பத்தவத்சலன் பார்வதிமணாளன் பிரகாசன்

தெண்டாயுத அஸ்தன் செம்புத்தீவில் காஞ்சி மாநகரில் அரவகிரியைச் சூழ்ந்த எழுகரை நாட்டுக்கும்

பூந்துறைநாடு, பூவானிநாடு, வஞ்சிநாடு, சேலநாடு, இராசிபுரநாடு

பருத்திப்பள்ளிநாடு

மற்றுமுண்டான சிவசந்நிதிநாடு உறவின் முறையாரும் குடிபிரிதி சிட்ட

பரியா லனம் பன்னி அருளாநின்ற திருவுளம் வீரலட்சுமி விசயலட்சுமி

வாசரா கிய களம் வம்முசபரிபாலராகிய ஆதி கன்னிவாடி அறுபது

காங்கேயரோட அறுபது கரணகாங்கேயன் என்னும் இடங்கை பட்டமுத்து

நல்லய்யன் குமாரந் நல்லய்யன் மோரூருக்கானி துந்துபி வருஷம் ஆவணி

மாதம் இருபத்தைந்தாந்தியதி திங்கட்கிழமை சப்தமி திருவோண

நட்சத்திரத்தில் அறுபது காங்கேயனுக்கு பெகுநாளாய் பிள்ளையில்லாமல்

அறுபது கருண காங்கையனென்று வந்த நல்லய்யன் குமாரன் நல்லையன்

அறுபது காங்கையனுக்குப் பிள்ளை வரம் வேண்டி நல்ல புள்ளியம்மன்

சந்நதி முன்பாக பச்சைப் பார்ப்பான் னெரிவி செய்து வைராக்கியம் செய்து

தன் செரசினை இருதுண்டாக வெட்ட செயங்கொண்ட குமாரன்

நல்லய்யன் பேரிலே சந்தோசமாகி பின்பு அறுபது காங்கேயனுக்கு என்ன

வேண்டுமென்று

இடங்கைக்குட்பட்டது நடந்த மேரைக்கு வடக்கிலேயும் நடப்பிக்க

வேணும் தேவரீர்” என்று கேட்க

அப்படியே தருகிறோமென்கையில் கீழ்கரைப் பூந்துறை நாட்டில் அரவகிரியில் அறுபது கரண காங்கயரும் செங்குந்த கோத்திர உறவின்முறையாரும் இடங்கை முதலான உறவின் முறையாரும் ருத்ரோத்காரிவ ருஷம் புரட்டாசி மாதம் சனிக்கிழமை பதினைந்தாந் தியதி சனிக்கிழமை ஏழூர்நாடு வாழவந்திநாடு அரையநாடு கேட்க தேவரீர் நமக்குக் கன்னிவாடியில் நல்லய்யன் பேரிலே சந்தோசமாகி பின்பு அறுபது காங்கேயனுக்கு என்ன வேண்டுமென்று இடங்கைக்குட் பட்டது நடந்த மேரைக்கு வடக்கிலேயும் நடப்பிக்க வேணும் தேவரீர்” என்று கேட்க கேட்க தேவரீர் நமக்குக்

கன்னிவாடியில் அப்படியே தருகிறோமென்கையில் கீழ்கரைப் பூந்துறை நாட்டில் அரவகிரியில் அறுபது கரண காங்கயரும் செங்குந்த கோத்திர உறவின் முறையாரும் இடங்கை முதலான உறவின் முறையாரும் ருத்ரோத்காரி வருஷம் புரட்டாசி மாதம் சனிக்கிழமை பதினைந்தாந் தியதி சனிக்கிழமை

உத் தரநட்சத்திரம் இந்தச் சுபதினத்தில் கூடி

மாளிகைபிச்சம் முருகாவுடையார் சந்நிதி இந்திர விமானத்தேர் முன்பாக இருப்புமுக்காலி வைத்து ஆசாரஞ் செய்து பன்னிரண்டு சுமைபோட் அக்கினி எரியவிட்டு அதின்மேலே இருத்தி ஆண்டவர் காங் கய னை

அறுபது சிட்டந்தரித்து பட்டம் வைத்தும் குருக்கள்மார் ஆறுபேரும் கும்பாபிஷேகம் பண்ணி அட்சதை தாம்பூலம் குடுத்து கரண

இனிமேல் செங்குந்த கோத்திரத்திற்கு நடக்க வேண்டிய சாதி ஞாயம் அர்த்தபாகம் முன்பாக கட்டளை இட்டோம். சொன்ன விபரமாவதுவி சாரிக்கும் போது அடிக்கரை பணம் ஆறு வைத்து மேல் ஞாயம் பேசவும்

செங்குந்தர் குத்தத்துக்கு அவுதாரம் பணம் பண்ணிரண்டு வாங்கக் கட்டளையிட்டார் செங்குந்த சாதிகள் மக்கத்துக்கு வராகன் கால், தேவடியாளுக்கு மக்குத்திக்குப் பணம் மூன்று. கண்ணாளர் அரசுக்குச் சாதிக்குத லைக்கட்டுக்குப் பணம் ஒன்று வன்னியகுலத்தார் மேழிக்குப் பணம் ஒன்று, சிவப் பிராமணர் அரிசிப் படிச்செலவு விசாரிக்கும் விபரம். நகரத்துச் செட்டிக்குக் குடிப்பணம் ஒன்று. பகடை பட்டரைக்குப் பணம் இரண்டு இந்தப் பிரகாரம் கட்டளையிட்டு எழுகரை நாடும் கூடி செப்பேடு சாசனப் பட்டயம் எழுதிக் கொடுத்த பிரகாரம் சகலமான பேரும் தெரியப் பல்லக்கு மேலே வைத்து குதிரை தீவட்டி சூரியப்பாணு பதினெட்டு விருது கொடுத்து வீதி மெரவனை பண்ணிவைத்து மேள வாத்தியத்துடனே மண்டபத்திலே வச்சு இந்த அர்த்தபாகம் அறிய ஆறும் பன்னிரண்டும் உன்னுதென்று அனைவரும் திருவாக்குக் கொடுத்து அடிபணிந்தார்கள் அர்த்தபாகம் சந்திர சூரியர் நல்லபுள்ளியம்மன் பாதம் அறிய இதுக்கு ரொருவன் அனாத்தியம் பண்ணினவர்கள் வம்சமும் அழிஞ்சி போகும் காராளர் கானிக்கை ஏருக்கு கால் பொன்னும்

ஆ கெங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ன தோஷத்தில் போவானாக மாதா பிதாவைக் கொன்ன தோஷத்தில் போகக் கடவாராக. அரிபூசை சிவபூசை குருபூசை மகேசுவரபூசை தடுத்தவர்கள் போற நரகத்தில் போகக்கடவாராக போகக்கடவாராக யுகங்களுக்கும் இந்த பட்டயத்துக்கு இரண்டகம் பண்ணப் பட்டவர்கள் வம்சமும் போகக் கடவது ஸ்ரீவதை சிசுவதை பண்ணின தோஷத்தில் இனிமேல் வரப்பட்ட காலா காலங்களுக்கும் சிவமயம். அர்த்தபாகம் துணை. 

நல்லபுள்ளியம்மன் துணை சுப்ரமணியர் துணை காமாட்சியம்மன் துணை காரி விநாயகர் துணையிருந்து ரட்சிப்பார். அனைவர் சொல்படிக்கு எழுதிய எடப்பாடி ராமசாமிப் பத்தன் செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *