Visits:312 Total: 2674740
குடியேற்றத்துக் கல்வி வள்ளல், மத நல்லிணக்கநாயகர், கல்விக் காவலர், குடியேற்றம் நகர் தன்னில் கல்வி குடியேற வைத்திட்ட கல்வி முதல்வர், தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி ஆராய்ச்சிப் படிப்பு வரை தொதடங்கி ஆயிரமாயிரம் மாணவர்களின் குடும்பத்தில் அறிவொளி வழங்கிய தியாகதீபம், தெய்வத்திரு. கு.மா.கோவிந்தராசனார் அவர்கள். கல்விப்பணிக்காகவே அவதரித்தவர் தெய்வத்திரு குஞ்சாமாணிக்கனார் இலட்சுமி அம்மையாரின் தலைமகனாய் 26.07.1919 அன்று அவதரித்தவர் இவர் என்றாலும், அவதரித்த நோக்கம் கல்விப் பணிக்காகவே தன்னை அர்பணித்தார் என்பது உண்மை.
அன்னவை யாவினும் புண்ணியங் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று பாடிய பைந்தமிழ்ப் புலவன் பாரதியின் கனவு வரிகளுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தவர். கீதா பிக்சர்ஸ் என்னும் திரைப்படத் தயாரிப்பு விநியோகம் மற்றும் நிதி உதவி தொழில் நிறுவன பங்குதாரர்.
குடியேற்றம் நகரமன்றத் தலைவராக 5 ஆண்டுகள் (1964- 1969) பணியாற்றியவர். சமயங் களிடையே சமரசம் காண பள்ளியின் நுழைவாயிலில் திருக்கோயில் கோபுரம், மாதாகோயில், பள்ளிவாசல் அமைத்தவர் இல்லறம் என்னும் நல்லறம் அன்னை கௌசல்யா அம்மை யாரின் திருக்கரம் பற்றி நான்கு நன்மக்களை ஈந்தவர். திரு. கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், திரு.கே.எம்.ஜி. சுந்தரவதனம், திரு. கே.எம். ஜி. இராஜேந்திரன், திரு. கே.எம்.ஜி. முத்துக்குமார் அவர்தம் மருமகள்கள் திருமதி. மீனாட்சி பாலசுப்ரமணியம், திருமதி. உஷாராணி சுந்தரவதனம், திருமதி. திலகவதி இராஜேந்திரன், திருமதி. மணிமேகலை முத்துக்குமார் ஆவர்.
மொழிப் பற்றும், நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும், நாட்டுப் பற்றும் தமது இரு கண்களாக கருதியவர். திருவள்ளுவரின் திருப்பெயரால் பள்ளிகளை அமைத்தர். இளமைக் காலத்தில் கள்ளுக்கடை மறியலின்பே பாது இந்திய தேசியக் கொடியைக் கையிலேயந்தி, துர்காபாய் தேஷ்முக் தலைமையில் வந்தே மாதரம் பாடலைப் பாடிப் பரிசு பெற்றவர்.
பள்ளியின் வரலாறு கேடில் விழுச் செல்வம் கல்வி என்ற வள்ளுவர் காட்டும் பெருஞ் செல்வத்தினைக் குடியேற்றம் மக்களுக்கு வழங்க 1952-ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளியைத் தொடங்கினார். 1954-இல் நடுநிலைப் பள்ளியாக உயர்ந்தது. 1960-ஆம் பூண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், மேலும், 1978 ஆ ம் ண்டு நகரிலேயே முதல் மேனிலைப் பள்ளியாக இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி ஆசிரியப் பெருமக்களின் கடுமையான ஒத்துழைப்பாலும், பொதுமக்களின் ஆதரவாலும், இன்று 10,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலை பயிலும் கலைக்கூடமாக கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்கள் வளர்ந்துள்ளது. 2000-ஆவது ஆண்டு முதல் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளுவர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கே.எம். ஜி. கல்வியியல் கல்லூரி ஆ கி அனைத்துக் கல்வி நிறுவனங் களையும் நிறுவி, அடிப்படை கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை ஏழைக் குழந்தைகள் படிக்க வழிவகை செய்தவர்.
கனவை நனவாக்கும் கல்வி நிறுவனங்கள் இப்பள்ளியில் படித்தவர்கள் பள்ளிப் பெருமையினை செல்லுமிடமெல்லாம் பரவச்செய்து வருகின்றனர். குறிப்பாகக் கனரா வங்கியின் தலைவராக இப்பள்ளியின் முன்னாள் பர் மாணவ பத்மஸ்ரீ டி.என்.மனோகரன் இரண்டாவது நாள் கைத்தறி வளர்ச்சி பணியாற்றி வருகிறார் என்பது அவாகள் இப்பள்ளியில் திருமிகு சுந்தரவதனம் அவர்கள் ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, தற்போது திருநெல்வேலி மாநகரில் பணியாற்றி வருகிறார் என்பதை மகிழ்வுடன் இங்கு பதிவு செய்வதில் மட்டற்ற நூற்றாண்டு விழாவில் நனவாகி வருகிறது. இவரின் தொடக்கப்பள்ளி பகுதியில் வந்து அடைந்தது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் சமுதாய வளர்ச்சி மாநாடாகவும், குறிப்பிடத்தக்கது.
படித்த முன்னாள் மாணவன் மகிழ்ச்சியடைகிறோம். ஐயாவின் கனவு அவர் மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப்பு ள்ளியாகக் கல்வித்துறையால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளது. 1962-ஆம் ஆண்டு குடியேற்றத்தில் பள்ளி சீரமைப்பு மாநாட்டை கல்வித்துறை நடத்தியது. அம்மாநாட்டிற்கு வரவேற்புகுழு தலைவராகப் பணியாற்றியவர். சமுதாயப்பணி : ஒன்றுப்பட்ட வேலூர் மாவட்ட செங்குந்தர் தலைவராகப் பணியாற்றியவர். 1993 ஆம் ஆண்டு அகில உலக செங்குந்தர் சமுதாய மாபெரும் மாநாடு இரண்டு நாட்கள் குடியேற்றம் மாநகரில் தன்னுடைய கல்வி நிறுவன வளாகத்திலேயே தெய்வத்திரு .ஜெ.சுத்தானந்தன் அவர்கள் தலைமையில் நடத்திக் காட்டினார்.
அம்மாநாட்டின் சிறப்பாக முதல் நாள் மாபெரும் ஊர்வலம் காலை 08.00 மணிக்கு தொடங்கப் பெற்று மாலை 05.00 மணி வரை யிலும் 9 மணிநேரம் மிகச்சிறப்பாக நடைபெற்று மாநாட்டின் நிறைவு மாநாடாகவும் நடைபெற்றது. மாநாடு நடந்த 2 நாட்களில் குடியேற்றம் நகரில் அனைத்து பகுதிகளிலும் சமுதாய மக்களுக்கும் உணவு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இம்மாநாட்டில் ஏறக்குறைய 6 இலட்சம் சமுதாய மக்கள் தமிழகம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
1996ஆம் ஆண்டு நடைபெற்ற குடியேற்ற நகரமன்ற தேர்தலில் பொது வாக்கெடுப்பின் மூலம் தனது மருமகள் திருமதி. திலவகதி இராஜேந்திரன் அவர்களை வெற்றி பெற செய்துச் தமிழகத்தின் மிகச்சிறந்த நகரமன்றத் என்ற விரு தினை தலைவர் பெறுவதற்கு வழி காட்டினார். நிறைவுரை மண்ணுலகில் எவ்வளவோ பேர் பிறக்கிறார்கள், அவருள் சிலர் மட்டுமே காலத்தை வென்று காவிய மாய் மக்கள் நெஞ்சில் நிலைத்து வாழ்கிறார்கள். அத்தகையவருள் குடியேற்றத்து கல்வி வள்ளலாம், கு.மா. கோவிந்தராசனாரின் புகழ் ஆண்டுகள் பல கடந்தாலும், இக்கல்வி நிறுவனங்கள் என்றென்றும் அவர் புகழைப் பாடிக்கொண்டே இருக்கும்.