Responsive Menu
Add more content here...

குடியாத்தம் ஏ.ஜே. அருணாச்சலம் முதலியார். exMLA, exMLC

Visits:442 Total: 2674498

செங்குந்தர் கைக்கோள முதலியார் 

     ⚜️குலத்தோன்றல்⚜️
இந்திய சுதந்திர போராட்ட வீரர், இரண்டு முறை MLA வாக, ஒருமுறை MLC யாகவும் பணியாற்றிய நேர்மையான அரசியல்வாதி, நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்காக பாடுபட்டவர் , கிங் மேக்கர் காமராஜர் முதல்வராக காரணமாக இருந்தவர்
ஏ.ஜே. அருணாச்சலம் முதலியார். exMLA, exMLC
 
                
                  (?.?.1910 – 09.03.1993)
 
பிறப்பு 
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் பிரபல நூல் வியாபாரம் திரு.A.ஜெகநாத முதலியாருக்கும் திருமதி. பழனியம்மாளுக்கும், இரண்டாவது மகனாக பிறந்த திரு.A.J.அருணாசலம் நகரில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் SSLC படிப்பை முடித்தார். பின்பு இண்டர்மீடியட் படிப்பை வேலூர் நகரில் உள்ள புகழ் பெற்ற ஊரிஸ் கல்லூரியில் முடித்து பி.ஏ.பட்ட படிப்புக்கு சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதே நாட்டு பற்று கொண்டவராக விளங்கினார். 
 
வாக்கை & சுதந்திரப்போராட்டம் 
தன் சொந்த ஊரான குடியாத்தம் நகரில் சண்முகர் கம்பெனி என்கின்ற நூல் வியாபாரத்தை துவக்கினார். வெளியேறு போராட்டங்களில் கலந்து வேலூர் நகருக்கு வரும் தேசிய தலைவர்களின் கூட்டங்களுக்கு 1941 ஆம் ஆண்டுகளில், கள்ளுக்கடை, 1939 வெள்ளையடே ன கொண்டு வேலூர் மத்திய சிறை சாலையில் 10 மாதங்கள் கைதியாக இருந்தார். 
 
1935 ஆம் ஆண்டு தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம் துவக்கப்பட்டபோது கோவை திவான் பகதூர் C.ரத்தினசபாபதி முதலியார், ஆந்திரா பேராசிரியர் N.G. ரங்கா மற்றும் திரு. M.சோமப்பா ஆகியோ ருடன் நட்பு கொண்டார். 
 
பின்பு சங்கம் த துவக்கப்பட்டதும் மூவருக்கும் துணை தலைவராக பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டு தலைவராக தேர்வு பெற்ற திரு.M.P நாச்சிமுத்து த அவர்களுக்கு துணை தலைவராக 1967ஆண்டு வரையில் மொத்தம் முப்பது ஆண்டுகள் துணை தலைவராக பணி ஆற்றிய பெருமை திரு.A.J.A. அவர்களுக்கு உண்டு. 
 
1949 ஆம் ஆண்டு குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்று M.L.A ஆனார். அப்போது முதல்வராக இருந்த திரு. P.S.குமாரசாமிராஜா அவர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமானார். 
 
1952 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
 
 
காமராஜரை முதல்வர் ஆக்கியது 
இந்த 1952 தேர்தலில் இராஜாஜி முதலமைச்சர் ஆனார். பிறகு இராஜாஜி செய்த ஒருசில தேவையில்லாத செயல்களால் இராஜாஜி முதலமைச்சர் பிதவியை இராஜினாமா செய்ய நேர்ந்தது. அப்போது தமிழக முதியவர் முதலமைச்சராக வரவேண்டிய தகுதி காமராசர்க்கு இருந்தது. ஆனாள் காமராசர் எம்.எல்.ஏ வாக இல்லாதனால் முதலமைச்சர் ஆவதில் சிக்கல் இருந்தது. 
 
பிறகு 1954ஆம் ஆண்டில் A.J. அருணாச்சலம் முதலியார் அவர்கள் தன் தலைவர் காமராசர் முதல்வராக தொடர தன் MLA பதவியை தானாக முன்வந்து ராஜினமா செய்தார். பின்பு தன் தலைவர் K.காமராஜ் நாடார் அவர்களை (செங்குந்த முதலியார் அதிகம் உள்ள) குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற செய்தார் A.J. அருணாச்சலம் முதலியார் இதனால் காமராஜர் முதல்வர் பதவியை தொடர்ந்தார்.
 
  A.J. அருணாச்சலம் முதலியார் MLC யாக வெற்றிப்பெற்றார் (1956 முதல் 1962) 
 
 செய்த மக்கள் பணிகள் 
A.J. அருணாச்சலம் முதலியார் MLA மற்றும் M.L.C ஆக இருந்த காலத்தில் குடியாத்தம் நகருக்கு பெரிய பாலம் கட்டித்தந்தார். 
  • கூட்டுறவு நகர பேங்க் உருவாக்கப் பட்டது. 
  • பாலிடெக்னிக் கல்லூரியை கொண்டு வந்தார். 
  • அரசினர் கலைக்கல்லூரி அமைத்துத் தந்தார். 
  • அரசினர் மருத்துவமனை விரிவுப்படுத்தப்பட்டது. 
  • டவுன் பஸ்கள் விட ஏற்பாடு செய்தார். 
  • பல கிராமங்களில் துவக்கப்பள்ளி உயர் நிலைப்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. 
 
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் தலைவராக திரு. M.P.நாச்சிமுத்து அவர்களும் துணை தலைவராக A.J. அருணாச்சலம் முதலியார் அவர்கள் இருந்த போது கோ ஆப்டெக்ஸ் தலைமையிடத்தில் வருடம்தோறும் கைத்தறி கண்காட்சி நடத்தப்பட்டது. கைத்தறி துணிகளின் விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 18 கூட்டுறவு நூற்பு ஆலைகள் துவங்கப்பட்டது. முதல் நூற்பாலை திருநெல்வேலி, பேட்டை மற்றும் வேலூர் அரியூரில் துவக்கப்பட்டது. A.J. அருணாச்சலம் முதலியார் எல்லா நூற்பு ஆலைக ளிலும் இயக்குனராக பணி ஆற்றினார். நெசவாளர்கள் பிரச்சினைகள் பற்றி பலமுறை சட்டமன்றத்திலும், சட்ட மேலவையிலும் பேசி உள்ளார். Handloom அருணாசலம் என்றும் அழைக்கப்பட்டார் காங்கிரஸ் கட்சியில் மாவட்ட துணை தலைவர், நகர தலைவர் போன்ற பல பொறுப்புகள் வகித்து உள்ளார். திரு.A.J.A. அவர்களின் சேவையை போற்றும் வகையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் (பாலசுந்தரம் பில்டிங்) 1960 ஆம் ஆண்டு 6 1/2 அடி உயரம் 3 1/2 அடி அகலம் கொண்ட பெரிய போட்டோ முதல்வர் மு.காமராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதே போன்று குடியாத்தம் நகரில் நசவாளர்களின் குடியிருப்புக்கு அருணாசல நகர் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. தேசபக்தியும், தெய்வபக்தியும் உடைய திரு.A.J.A. அவர்கள் தமது மகன்களுக்கு குமரன், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் என்று தேசிய தலைவர் கள் பெயர் இட்டார். மேலும் நமது பொருளாதார தொண்டு மன்றம் (SES) சென்னையில் திரு. D.A.S.பிரகாசம் அவர்களுடன் இணைந்து திரு. A.J.A.அவர்களின் முத்த மகன் திருத் தணி வழக்கறிஞர் திரு.A.J.A.குமரன் அவர்கள் துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகி திரு.A.J.A. அவர்கள் தமது 86 ஆம் வயதில் (09-03-1993) இயற்கை எய்தினார்.
 
 
 
 
 
இவர் பிறந்த தேதி, செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

One thought on “குடியாத்தம் ஏ.ஜே. அருணாச்சலம் முதலியார். exMLA, exMLC

  • December 2, 2020 at 5:26 am
    Permalink

    செங்குந்தர் muthaliya

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *