Responsive Menu
Add more content here...

சிவன்- பார்வதி திருக்கல்யாணமும்“செங்குந்தர்கைக்கோள முதலியார்”. சமூகத்துக்கும் உள்ள வரலாறு:

Visits:1373 Total: 2100841

ஆந்திர காலாஹஸ்தி கோவில் சிவன்- பார்வதி திருக்கல்யாணமும்“செங்குந்தர்கைக்கோள முதலியார்”. சமூகத்துக்கும் உள்ள வரலாறு:

 

உலகத்திலேயே வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சிவன் கோயில். சோழர்களின் புகழ்பெற்ற மன்னர் இராசேந்திர சோழனால் கட்டிமுடிக்கப்பட்ட கோவிலாகும்.மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் இதுவும் ஒன்று

சங்கத் தமிழ் இலக்கியங்களில் இக் கோயில் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக் கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன.

இக்கோவிலில் உள்ள மூலவர்: ஞானப்பூங்கோதை (எ) ஞானபிரசுனாம்பிகை தேவி (பார்வதி) உடனுறை காளகத்தீசுவரர்(சிவன்

பல ஆயிரம் ஆண்டுகளுகு முன்பு நம் செங்குந்தர்கைக்கோள முதலியார் சமூகத்தில் உள்ள வெள்ளாத்தூரார் கோத்திரத்தில் மனித ரூபத்தில் பிறந்து, பின்பு கடவுளாக மாறியவர் “ஞானப்பூங்கோதை(எ) ஞானபிரசுனாம்பிகை தேவி (பார்வதி)” ஆகும்.

கடவுள் காளத்தீஸ்வரர்(சிவன்) சுவாமிக்கும் (பார்வதி) ஞானபிரசுனாம்பிகை தேவி அம்மனுக்கும் காளாஹஸ்தி கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இதனால் வருடம் தேறும் சிவராத்திரி நாளன்று திருகல்யாணத் திருவிழா நம் சமூகத்தார் சார்பில் நடைபெறும்.

ஆந்திர மாநிலம், காளஹஸ்தி கோவிலில்  சிவராத்திரி நாளன்று ஞானபூங்கோதை அம்மனுக்கு வாயுலிங்கேஸ்வரர் கோவிலில் நடக்கும் திருக்கல்யாணத்தில், செங்குந்தர் சமூக வெள்ளாத்தூர் கோத்திர பங்காளிகளின்  சார்பில் பெண் வீட்டு சீதனம்( மலர்மாலை, ஆடை மாங்கல்யம், சீர்வரிசை) ஆகியவை காலாஹஸ்தி சிவன் கோவிலுக்கு(புகுந்த வீடு) கொண்டு சென்று சமர்ப்பிப்பது வழக்கம். 

காளாஸ்திரி சிவன் பார்வதி திருக்கல்யாணம் பத்திரிக்கை
காளகஸ்தி சிவன் பார்வதி திருக்கல்யாண பத்திரிக்கை

இதன் மூலம்
சிவனுக்கு பெண் கொடுத்த வம்சம்
செங்குந்தர்கைக்கோள முதலியார் வம்சம் என்று தெரிகிறது.

 

 

 

 

 

 

 

வாழ்க செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *