Visits:365 Total: 2674371
செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தோன்றல்
மக்கள் சேவகர், சுதந்திர போராட்ட வீரர், தமிழக வடக்கெல்லை போராட்டத்தை தீவிரப்படுத்தி திருத்தணி பள்ளிப்பட்டு தொகுதிகளை ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு மாற்ற காரணமானவர், திருத்தணி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
எகிரி சஞ்சீவி தியாகராஜ முதலியார்
(03.08.1928 – 02.07.1999 )
பிறப்பு
இன்றைய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு வட்டத்தில் பொதட்டூர்பேட்டை என்னும் ஊரில் பெரும் செல்வந்தர் பெருநிலக்கிழார் ஜவுளி வர்த்தக எகிரி சஞ்சீவி முதலியாருக்கு மகனாக 1928 இல் பிறந்தார் எஸ்எஸ்எல்சி வரை படித்த இவர் சிறுவயது முதலே சமூக சேவை அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் என ஆறு வாரிசுகள்.
வாழ்க்கை
25 ஆண்டுகள் பொதட்டூர் பேட்டை நகரப் பஞ்சாயத்தின் தலைவராக பதவி வகித்தவர்.
பல கூட்டுறவுச் சங்கங் களில் பணியாற்றியவர்.
1947-ம் ஆண்டு முதல்
6-3-1971 வரை, மாநில கைத்தறி நெசவாளர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்.
கைத்தறி கூட்டுறவு சங்க தலைவர், நூலக ஆணைய மாவட்ட தலைவர், ஆல் இந்தியா ஹண்ட்லூம் ஹவுஸ் இயக்குனர், பேரூராட்சி தலைவர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என்று பல பதவிகளை வகித்தார்.
தமிழக ஆந்திர எல்லை பிரிக்கும்போது பள்ளிப்பட்டு திருத்தணி தொகுதிகள் ஆந்திராகுல் சேர்க்கப்பட்டது மேலும் 1952ஆம் ஆண்டு ஆந்திர சட்டசபை தேர்தலில் திருத்தணி தொகுதியில் தமிழர்களை வேட்பாளராக நிறுத்தாமல் தெலுங்கர்களை வேட்பாளராக நிறுத்தியது ES. தியாகராஜன் முதலியார் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெறும் 3 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.
பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி தொகுதிகளை தமிழகத்திற்குள் இணைக்க வடக்கு எல்லைப் போராட்டம் என்று போராட்டங்களை ஆரம்பித்தது இவரின் தந்தை சஞ்சீவி முதலியார்
1962 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண தேர்தலில் திருத்தணி தொகுதியில் போட்டியிட்டு வெறும் ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.
1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருத்தணி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஏகாம்பர ரெட்டியை விட இரண்டு மடங்கு அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி வெற்றி பெற்றார்.
மேலும் இவர் குலதெய்வம், மபிறந்த தேதி, மறைந்த தேதி, செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.