Responsive Menu
Add more content here...

அரியலூர் முனைவர் சண்முகம் முதலியார்

Visits:311 Total: 2674045

 

 

 

பிறப்பு

அரியலூர் மாவட்டம் உடையார் கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த செங்குந்தபுரம் எனும் சிறிய கிராமத்தில் வைத்திலிங்க செங்குந்தர் அமிர்தம்மாள் ஆகியோரின் மகனாக பிறந்த சண்முகம்
வாழ்கை
இவர் 1955-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலை கழகத்தில் தமிழில் B.A., (Hons) பட்டம் பெற்றார். அப்போது மு.வ. அவர்களால் முதல் மாணவராக (First Rank) தேர்வு செய்யப்பட்டார். சிறிது காலம் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் பணிபுரிந்துவிட்டு, அண்ணாமலை பல்கலை கழக தமிழ் மொழி துறையில் விரிவுரையாளராக சேர்ந்தார். பின்னர் மொழியியல் துறைக்கு மாறினார். M.Litt மற்றும் Ph.D., பட்டங்கள் பெற்றார். பல மொழி பட்டயங்களும் பெற்றுள் ளார். படிப்படியாக உயர்ந்து அதன் இயக்குனராக ஓய்வுபெற்றார். பணிக்காலத்தில் பல நாடுகள் சென்று வந்த அனுபவம் உண்டு.
இந்தோனிஷிய பல்கலைகழகத்தில் 3 ஆண்டும், இங்கிலாந்து ரெட்டிங் பல்கலைக் கழகத்தில் 1 ஆண்டும், கோலாலம்பூர் மலேஷியப் பல்கலைக் கழகத்தில் 1 ஆண்டும் பணிபுரிந்தார். மேலும் அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடு களுக்கும் சென்று வந்துள்ளார். மொழியியல் சம்பந்தமாக 31 புத்தகங்கள் எழுதியுள்ளார். அவற்றில் தொல்காப்பியம் சம்பந்தமான 11 புத்தகங்களும் அடங்கும். மலையாளத் தில் 2 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். 200க்கும் மேலான ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரின் வழிகாட்டுதலில் 12 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். ஒப்பிலக்கணம், மொழியியல் திறனாய்வு, இலக்கிய சமூகவியல், இலக்கியம், மொழி வளர்ச்சி ஆகியவற்றில் ஆய்வு செய்துள்ளார். அன்னாரின் கல்வி சேவையை பாராட்டி பல விருதுகள் வழங்கப் பட்டுள்ளன. அவை அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை வழங்கும் அண்ணாமலை செட்டியார்” ருது, S.R.M. பல்கலைகழகம் வழங்கும் “பரிதிமார் கலைஞர்” து, மத்திய அரசு வழங்கும் தொல்காப்பியர் ஆகியவையாகும். 14.05.2015 அன்று மேன்மைமிகு குடியரசு தலைவர் அவர்களால் “தொல்காப்பியர்” விருது வழங்கப் பட்டது. மாநில அரசும் அவருக்கு “கம்பர்” விருது அறிவித்துள்ளது. சண்முகம் தனலட்சுமி தம்பதி யரின் பிள்ளைகள் உமா மற்றும் வேலா யுதம் இருவரும் பொறியாளர்கள். ஒரு சிற்றூரில் பிறந்து அயராத உழைப்பினால் உயர்ந்த முனைவர் சண்முகம் அவர்களின் சாதனை பாராட்டுக்குரியது. ருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *