அவிநாசித் திருப்பணிப் பட்டயம்
அவிநாசித் திருப்பணிப் பட்டயம்
காலம்: மைசூர் அரசு
செப்பேடு உள்ள இடம்: தமிழக தொல்லியல்துறை
செப்பேட்டின் சுருக்கமான விளக்கம்:
மைசூர் மன்னன் கண்டீரவரசன் காலத்தில் அமைச்சன் காரமுசாவுதீன்
கீழ் சேவூரில் இராமச்சந்திரன் அதிகாரம். செய்யும் காலத்தில் கொங்கு வேளாளரில் காடை குலப் பொன்னையன் மகன் தம்பணகவுண்டா
அவிநாசியிலும், திருமுருகன் பூண்டியிலும் நிர்வாகியாக இருந்தார்
அப்போது
சௌளவளம்பூண்டி மாரப்பன் ஆகியோர் அவிநாசிச் சிவாலயத்தில் முன்
கொடிக்கம்பத்தை நிறுவிய செய்தி பாடல் வடிவில் கூறப்பட்டுள்ளது
(1813) செங்குந்தர்களில் தேவணன் மாரப்பன
சுருள் வடிவத்தில் இந்தப் பட்டயம் உள்ளது
பேட்டியின் நகல் (மூலம்)
அவிநாசி லிங்கரும் பெருங்கருணையம்மனும் லட்சிக்கவும்
துகைபெற்ற கலியுகம் நாலா யிரத்துத்
தொளாயிரம் ஈரேழுமேல்
தோன்றுசீ முகவருஷம் மிதுனநல் திங்களில்
துய்யமா வொன்பதனில்
சோதிபெறும் உயர்தசமி பாலவா கரணமும்
சுத்தசுப தினமதனில்
வகைபெற்ற மயிகுூர் சமஸ்தானத் துக்கரசர்
வாள்வீர கண்டீரவன்
மன்னுகூ னம்பட்டியில் துரைசமுகன் மேற்பாதன்
வந்தகார முசாவுதீன்
மனமகிழ் பதாவேவை யூர்ராமச் சந்திரன்
மன்னவன் சுபதினத்தில்
செகமெச்சு முருகபுரி அவிநாசி நிலையரசு
செயவன்ன காடைகோத்திரம்
தீரனென வளர்பொன்னயன் ராசனருள் தம்பணன்
செங்கோல் செலுத்துநாளில்
செங்குந்த குலதேவ ணன்சித்திர மாரப்பன்
செவளை தரு மாரப்பனும்
மகமொற்ற புக்கொளிப் பதியீசர் சன்னதி
முன்வாய் துவசத்தம்பம்
வளருமுயர் கம்பமு நாட்டியே அவிநாசி நாதரையும் அர்ச்சித்தபின்
மலைமகள் பெருங்கருணை அம்மனிரு தாளையும்
வணங்கமிக வாழ்கவென்றே
சிவமயம்
காரமுசாவுதீன் அறிவேன்
சேவையூர் இராமச்சந்திரன் அறிவேன்
காடைகோத்திரம் தம்பணகவுண்டன் அறிவேன்
செங்குந்த கோத்திரம் தேவணன்முதலி அறிவேன்
மாரப்பமுதலி அறிவேன்
மாரப்பமுதலி அறிவேன்
–——————-