Responsive Menu
Add more content here...

வீரநாராயண விஜயம் வல்லான் காவியம் செங்குந்தர் சிற்றரசர்கள் வரலாறு

Visits:1193 Total: 2407470

தலை ஈந்த தறுகணாளர் செங்குந்தர்

வல்லவன் என்பவன், வடநாட்டிலே நல்லூர் என்னும் நகரத்திலிருந்த *போகன்’ என்னும் இரட்டனுக்கு புத்திரனாகப் பிறந்தவன். சிவபெருமானை நோக்கிப் பெருந்தவம் கிடந்து பல அரிய வரங்களைப் பெற்றான், ஊரூராகச் சென்று அங்கங்கே பலநாள் வசித்துக் கடைசியாகத் தென்னாட்டிலே கடம்பூர் வந்து சேர்ந்தவன். ஆழ்ந்து அகன்ற அகழின் மத்தியில் இருப்புத்தம்பம் நாட்டி அதன்மேல் கட்டிய கோட்டையில் வசித்துவந்தவன்: அரசர்களுக்கும் குடிகளுக்கும் மற்றைய உயிர்களுக்கும் துன்பமே செய்துவந்தவன், தஞ்சை வேம்பனை மந்திரியாகக் கொண்டு சோழ நாட்டை யாண்டுவந்தடாராந்தகச் சோழன் ஆட்சிக்கு அஞ்சாத நெஞ்சமுடையவன் ‘அனங்க வல்லி’ என்னும் கற்புக்கரசியின் மணவாளன். இவன் நாளும் செய்துவரும் அநீதங்களைப் பாராந்தகச் சோழன் கேட்டுணர்ந்தான்.

உடனே வீரர் வீரனாகிய பழுவை வீரன் முதலிய பன்னி ருவர்களால் அவனுடைய இறுமாப்பை அடக்கப் பாராந்தகன் முயன்று வந்தான். பழுவூர் வீரன் முதலிய பன்னிருவரும் பாராந்தகச்சோழன் விருப் பப்படி ஒன்று கூடித்தாங்கள் வல்லானை வென்றுவருவதாக அச்சோழன் சபையில் சபதஞ் செய்து கொடுத்தனர். அப்போதே அவ் வீரர்கள் பன்னிரு வரும் படைக்கோலத்துடன் வல்லான் இருக்குமிடஞ்செல்லப் பிரயாண மாயினர். அவர்கள், அப்பொழுது நமக்குள்ளே யாரேனும் ஒருவர் இறந்து படின் மற்றையரும் உயிர்வாழ்வதில்லை என்று கட்டுப்பாடு செய்துகொண் டனர். செப்பன் பாக்க பின்னர்; இப்பன்னிருவருள் கச்சித்தனியன் துாகாதேவிக்கும், ஒன்றி யூரான் காளிதேவிக்கும் பலியாயினர். முதுகுன்றமணியனும் கோளந்தகனும் தாமே உயிர் நீங்கி அகழியைக் கடக்கும் தெப்பக் கருவியாயினர். புள்ளிடங் கொன்டான் செந்நாய்களுக்கும், களந்தையான் புலிக்கூட்டங்களுக்கும், புலியூர்ப் பள்ளிகொண்டான் சிங்கங்களுக்கும், பசிப்பிணி யொழியத் துணிந்து ஆகாரமாயினர். பிவைன் தன்னுயிரைவிட்டு அக்கினியாற்றை மற்றவர் கடந்து செல்ல தெப்பமாயினான்.

கண்டியூரன் ஏரியிலுள்ள முதல்கட்குத் தனது மாமிசம் உணவாயும், அவ்வேரியை கடந்து செல்லத் தோல் துருத்தி யாகவும் உபயோகப்பட உயிர் துறந்தான். தஞ்சை வேம்பன் வழவழப்பான கொடுத்தான். எஞ்சிய பழுவை வீரன் நாராயணன் என்னும் இருவரும் அத் தம்பத்தில் மணலும் இரத்தமும் பூசி மற்றிருவர் ஏறிச்செல்ல துணிந்துயிரைக் தம்பத்தின் மேலேறி சென்று வல்லான் மார்பை யிடமாகக் கொண்டார் அப்போது அவன் செயலற்றிருந்தான்; இப்பால், அதுகண்ட வல்லான் மனைவியாகிய அனங்கவல்வி அம்மை யார், தனது கணவானக் கொல்லும்படி அவன் மார்பிலே ஏறித் தங்கியிருந்த வீரரைப் பார்த்து, “மாங்கல்யப் பிச்சை வேண்டும்” என்று முந்தானையை கையிற்கொண்டு நின்றனள். உடனே வீராாராயணர் இருவரும் அவள் விரும்பியபடியே மாங்கலியப் பிச்சை கொடுத்தருளி, வல்லானுக்கு வேண்டி நல்லறிவு புகட்டி, அவனை அவன் பிறந்த ஊருக்குப் போகும் படி கட்டளயும் கொடுத்தனர்.

பிறகு வல்லானும் அவன் மனைவியும் அவ்வீரர்கள் இருவரை யும் வணங்கிச் சந்தோஷத்துடன் தங்களூரைப்போய்ச் சேர்ந்திருந்தார்கள். ஜெயங்கொண்ட வீரநாராயனர் இருவரும் வல்லான் கோட்டையை அக்கினிக் கிரையாக்கி அங்கிருந்து புறப்பட்டுப் பாராந்தகச் சோழன் நீதிமன்றம் வந்து சேர்ந்தனர். டிய அப்போது பாராந்தகச்சோழன் அவ் வீரநாராயணரைப் பார்த்து “என் பகைவனாகிய விக்கலன் தலையை எவ்வாறு கொய்தீர்கள்” என்று கேட்டான், உடனே அவ்வீரர் இருவரும் ” இவ்வாறு தான் வெட்டினோம்’ என்று தங்கள் தலைகளை வெட்டி வீழ்த்தினர். அதுகண்ட பாராந்தகச் சோழன் ‘இப்பழி நம்மையே சாரும். ஆதலால் நாம் உயிரைப் போக்கிக் கொள்வதே நீதியாம்’ என்று உடைவாளைக் கையிலே எடுத்தான் அத்தருணத் திலே முருகக்கடவுள் எழுந்தருளிவந்து அவன் கையைப் பிடித்துக்கொண்டு “மன்னவனே உன்னாற் சரீரம் நீங்கி உயிர்விட்டவர்கள் பிழைப்பார்கள். நீசிறிதும் அச்சமுறாதே” என்று திருவாய் மலர்ந்து பரவெளியில் மறைக் தருளினார் அப்போது மெய்த்தலைக் கொடுத்த வீரர்கள் பதின்மரும் உயிர் பெற்றெழுந்தார்கள், பின்னர்ப் பாரந்தகச் சோழன் அவ்வீரர்களுக் கெல்லாம் தனித்தனியே வரிசைகள் பல வழங்கி, அவரவர்கள் ஊருக் கெழுந்தருளும்படி செய்வித்துத் தான் தஞ்சையில் வாழ்ந்திருந்தான் வல்லான் என்னும் இரட்டனை வென்ற பன்னிரு வீரர்களும், முருகச்கடவுள் திருவருட்டிறத்தினை வாழ்த்தி வணங்கித் தங்கள் தங்கள் சென்றடைந் திருந்தார்கள். ஆதாரம் : செங்குந்தர் பிரபந்தத்திரட்டு வீரன் – நாராயணரின் பெருமை புலவர் நா. திருநாவுக்கரசு MA, B.Ed.. சீர்காழி. செங்குந்தர் வரலாறு மீட்பு குழு 78269 80901 எல்லாம் வல்ல முருகப்பெருமானின் அருள் வழி நின்ற வீரவாகு மரபில் வந்த நம் முன்னோர்கள் அரசர்களாகவும், அமைச்சர்களாகவும், புலவர்களாகவும், அருந்திறல் மிக்க வீரர்களாகவும் விளங்கினார்கள் என்பதற்குப் பல சான்றுகள் நம்மிடம் உள்ளன.

குலோத்துங்க சோழன் அவையை அலங்கரித்த கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர் அவர்கள் நாம் பெருமை கொள்ளும் வகையில் நம் குலத்து உதித்த எழுஞாயிறு ஆவார். அவர் தாம் பாடிய ஈட்டி எழுபது என்னும் நூலில் ‘வல்லான் மனைவிக்கு மங்கிலியப் பிச்சை இட்டது’ என்னும் செய்தியைக் குறிப்பிடுகின்றார். திருசேய்ஞலூர் ஞானப்பிரகாச வள்ளலார் அவர்கள் தாம் பாடிய ‘வீர நாராயண விசயம்’ என்னும் நூலில் அச்செய்தியை விரிவான வரலாறாகப் பாடியுள்ளார்கள், வீரன், நாராயணன் என்னும் இரு செங்குந்தர் குல வீரர்களின் வீர வரலாற்றை இந்நூல் விளக்கு கின்றது. சைவ சமயக் குரவர் மூவராலும் பாடப்பெற்ற பெருமையுடைய தலம் பழுவூர் (ஆலந்துறை) ஆகும். அவ்வூரை ஆட்சி செய்த சிற்றரசன் செங்குந்தர் மரபில் தோன்றிய கோமதி என்பவன் ஆவான், மகப்பேறின்றித் தவித்த அவன் நீண்ட நாள் தவங்கிடந்து சிவன் அருளால் இவ்வரலாற்று நாயகர்களாகிய வீரன், நாராயணன் இருவரையும் அரும் பெறற் புதல்வர்களாகப் பெற்று மகிழ்ந்தனன். அவ்விருவரும் உரிய வயதில் அரிய கலைகளைக்கற்றும், வில், வாள், குந்தம் போன்ற ஆயுதங்களில் பயிற்சியும், யானைஏற்றம் குதிரையேற்றம் போன்றனவற்றைக் கற்றும் தேர்ந்தனர்; அனைத்து நலங்களும் சிறந்து விளங்கினர். தஞ்சையை ஆண்ட பராந்தக சோழனின் அமைச்சரும் செங்குந்தர் மரபினரு மாகிய வேம்பன் என்பாரின் அறிமுகத்தினால் அரசனின் வேண்டுகோள்படி தக்க சமயத்தில் இருவரும் சேனைத் தலைவர்களாக அரசர்க்கு உதவி செய்ய அவர்முன் உறுதி கூறினர்.

அந்நாளில் சாலவ தேயத்தை ஆண்டு வந்த இரட்டர் குலத்தலைவன் போகன் என்பவனுக்கு விக்கலன் என்னும் வல்லான் மகனாகப் பிறந்தான்; கல்வி கற்றுப் போர்ப் பயிற்சியும் பெற்றான். ஒரு முனிவரின் அருளால் பஞ்சாட்சரத்தைத் தியானித்துச் சிவ பெருமானிடம் அழியாத கவசம், வச்சிர வாள், மந்திர தந்திரங்களைச் செய்யும் ஆற்றல், மாயத்தேர், மாயக்குதிரை போன்றவற்றை வரங்களாகப் பெற்றான். தீய நோக்கத்தோடு கேட்கப் பட்ட வரங்களை எண்ணிய இறைவன் வல்லானை நோக்கி ‘இவ்வரங்கள் நடுவில் நழுவும்’ என்றனர். வல்லான் சிவபெருமானை வணங்கி, வரங்கள் நடுவில் அகன்றாலும் உயிருக்கு இடர் வராமல் அருள்க! என்றான்.

பரமன் ‘அவ்வண்ணமே ஆகுக’ என்றார். மாயக்குதிரையில் வான் வழியே வந்த வல்லான் வளம்மிக்க சோழநாட்டில் கடம்பூர் அருகே இருந்த ஆழமும் அகலமும் மிக்க பெரிய ஏரியின் நடுவே எட்டு இரும்புத் தூண்களை நாட்டி அதன் மீது மிக உயரத்தில் அழகான கோட்டை, மதில், நந்தவனம், தாமரைக் குளங்கள் போன்றவற்றையும் அமைச்சர் முதலாயினோர் தங்குவதற்கு ஏற்ற மாளிகை களையும் அமைத்தான், பின் தன் நாடு சென்று அனங்கவல்லி’ என்னும் மங்கை நல்லாளைத் திருமணம் செய்து கொண்டு தாய், தந்தை, உற்றார் உறவினருடன் திரும்பவும் கடம்பூர் வந்து தான் அமைத்த அற்புதங்கள் நிறைந்த கோட்டையில் தங்கினான், அங்கே தன் தந்தையைக் கொண்டு மகுடம் புனைந்து கொண்டான். கோட்டையின் உச்சியில் பன்றிக் கொடியைப் பறக்கவிட்டான். இறைவனிடம் பெற்ற வரங்களினால் சேர சோழ பாண்டிய நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் இரவில் மாயத்தேர் மூலம் சென்று கொலைகள், கொள்ளைகள் போன்றவற்றைச் செய்து ஆணவத்துடன் கொக்கரித்தான். மங்கையர்க்கும் தீங்கு செய்யத் தவறவில்லை. மாயத்தால் இரவோடிரவாக இவன் செய்யும் தீங்குகளைத் தடுக்க முடியாமல் மக்கள் அல்லற்பட்டு அழுது புலம்பினர். அரசர்களுக்கும் வல்லான் ஒரு வலிய அழிக்க முடியாத பகையாகவே விளங்கினான்.

பல அரசர்கள் வல்லானுக்கு அடிபணிந்து கப்பங் கட்டி வரலாயினர். பராந்தக சோழன் கப்பம் கட்ட மறுக்கவே சோழர் படைக்கும், வல்லான் படைக்கும் கடும்போர் நடந்தது. பகல் முழுவதும் போராடி சோழன் படைகள் சலிப்படைந்து ஊர் திரும்பினர். கோபம் கொண்ட அரசனிடம் அமைச்சன் வேம்பன், “வீர, நாராயணர் இருவரிடமும் வல்லானை அழிக்கும் பணியை ஒப்படைப்போம்” என்றனன். வீரர் இருவரும் தஞ்சைக்கு வந்தனர். அரசரின் வேண்டுகோளை ஏற்றனர். அன்றிரவும் வல்லான் தஞ்சையில் புகுந்து மக்களை வதைத்துப் பெருங் கொள்ளைகளைச் செய்தான். வீர நாராயணர் இருவரும் வல்லானைத் தேடிக் கண்டுபிடித்து அவனோடு பெரும் போர் புரிந்தனர் வச்சிரவாளும், கவசமும் இறைவன் அருளால் வல்லான் பெற்றிருந்தமையால் அவனைக் கொல்ல முடியவில்லை. அயர்வடைந்து அவன் தப்ப முயன்றபோது நாராயணன் வல்லானின் குடுமியைப் பிடித்து ஆகாயத்தில் வீசினான், மாயக்கு திரை அவனைத் தாங்கிக் கொண்டமையால் தப்பிப் பிழைத்து ஓடிவிட்டான், கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் திரும்பக் கிடைத்தன.

அரசன் மனக்குழப்பத்தில் இருந்தான். வீர நாராயணர் அரசர் முன் ‘ஐந்தாம் நாள் வல்லான் தலையை அறுப்பதாக’ உறுதி கூறினர். அரசனின் படையை வேண்டாம் என மறுத்து வேம்பன் கச்சித்தனியன், ஒற்றி ஊரன், புற்றிடங் கொண்டான், கோளாந்தகன், பள்ளி கொண்டான், கடம்பை நகர் பிணவன் கண்டியூரன், முதுகுன்ற மணியன், களத்தூரரசன் ஆகிய பதின் மரும் நாங்கள் இருவரும் ஆகப் பன்னிரு செங்குந்தர்களுமே வல்லானை அழிக்கப் போதுமான ஆற்றல் மிக்கவர்கள் என விளக்கினான், ஏனைய ஒன்பதின்மருக்கும் முடங்கல் அனுப்பும்படி கேட்டனர். முடங்கல் படி அனைவரும் வந்தனர். முரசு முழங்க, பறையறைந்து உமாதேவியின் அருளால் குத்தப்படை பெற்ற நம் குல வீரர்கள் வல்லான் தலையறுக்கப் புறப்பட்டனர். வள்ளுவன் கடம்பூர் ஏரி அணையின் மீது நின்று பறைமுழக்கினன். தீயகனவு கண்ட வல்லானும், அவன் மனைவியும் அது பற்றிச் சிந்தித்தனர். அவனுடைய அமைச்சர்களும் சோழப் பேரரசின் படைபலத்தைக் கூறி ஆராய்ந்து முடிவெடுக்கும்படி வல்லானிடம் வேண்டினர். ஒற்றர்களும் செங்குந்தர் வீரர்களின் பெருமைகளை அவனுக்கு விளக்கினர்; எச்சரித்தனர். வல்லான் சிவபெருமானின் வரங்கள் துணை நிற்கும் என நம்பினான். ஆயினும் ஐந்து நாள்களும் கவனமாயிருக்க முடிவெடுத்துத் தன் கோட்டையின் மீது நூறடி உயரமுள்ள உருக்குத் தூணை நிறுத்தி அதன்மீது தன் மனைவியுடன் தங்குவதற்கு ஏற்ற கட்டடம் அமைத்து அதில் தங்கினான். உருக்குத் தூணின் மீது யாரும் பகைவர்கள் ஏறிவர முடியாதபடி மீன்கொழுப்பு, ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றைத் தூணின் மீது தடவும் படி செய்தான்.

அரசன் மக்கள் அனைவரும் ஆசி கூறி, வழியனுப்பி வைக்கப்பட்ட செங்குந்த வீரர் பன்னிருவரும் ஆலந்துறையையடைந்து வட மூலநாதரை வணங்கி மூன்று தினம் நோன்பிருந்தனர் ‘தம்மில் யாரேனும் போரில் இறந்தாலும் ஏனையோர் வருந்தாமல் முன் நிற்க உறுதி பூண்டனர். இறைவனும் முருகனும் அவர்முன் தோன்றவும் கரங்குவித்து வணங்கி வல்லானை வெல்ல வரம் வேண்டினர். இதற்குள் மூன்றரைநாட்கள் கழிந்தன. வீரர்கள் வல்லான் கோட்டையை அடைந்த போது அங்குள்ள துர்க்கையின் காவல் பூதம் இவர்களைக் கொல்ல வந்தது. வீரன் அதன் கைகளைத் துண்டித்தான். துர்க்கை இரத்தப்பலியின்றி வழிவிடாது என எண்ணிய கச்சித்தணியன் தன் சிரத்தைத் தன் கையால் வெட்டித் துர்க்கை முன் வைத்தான், துர்க்கை மகிழ்ந்து வழிவிட்டாள். வழியில் இருந்த காளியை மகிழ்விக்க ஒற்றயூரன் தன் தலையை அறுத்து அதன் முன்வைத்து வேண்ட வல்லானை வெல்லக் காளி வரம் தந்தாள். வழியில் இருந்த அகழியைத் தாண்டுதற்குக் கோளாந்தகன் முதுகுன்றமணியன் இருவரும் தம்தம் தலையை வெட்டிக் கொண்டு மிதவையாய் ஏனைய எண்மரும் கடக்க உதவி செய்தனர். எட்டுத் தூண்களின் மீதுள்ள கோட்டையை எண்மரும் அடைந்து அதனைக் கண்டு வியந்தனர். அவர்களைக் கண்டு சீறிவந்த செந்நாய்களுக்குப் புற்றிடங் கொண்டான் தன் உடலைத் தானே வெட்டிக்கொண்டு அவற்றிற்கு இரையானான், அடுத்த வாயிலில் அவர் களைச் சினந்து வந்த புலிகளுக்குக் களந்தை மன்னன் தன் உடலை மாய்த்து அவைகளுக்கு இரையானான். அதுபோலச் சிங்கங்களுக்குப் பள்ளி கொண்டானும், முதலைகளுக்குக் கண்டியூரனும் இரையாயினர். பிணவன் நெருப்பாற்றைக் கடப்பதற்குத் தான் பிண மானான் எஞ்சி நின்றோர் வேம்பன், வீரன், நாராயணன் ஆகிய மூவரே, வழுக்கும் தூண் மீது ஏறுதற்கு வேம்பன் தன் உடலை மாய்த்து உதிரத்தை வழங்கினான். அதனுடன் மணலைக் கலந்து தூணின் மீது பூசி மற்ற இருவரும் ஐந்தாம் நாள் விடியும்போது கோட்டையை அடைந்தனர். அங்கே வல்லான் உறங்கி கொண்டிருந்தான், அவன் விழித்த போது வீரர் இருவரும் அவன்மீது பாய்ந்து அவனை அமுக்கிப்பிடித்தனர், வல்லான் சிறித்திமிறியும் இரு வீரர்களின் முன் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

வீரன் அப்போது வல்லான் தலையை வெட்டக் கைவாளை ஓங்கினான். அப்போது வல்லான் மனைவி அண்ணா என வீரர்களை அழைத்துக் குறுக்கே விழுந்து மாங்கலியப் பிச்சைக் கேட்கவும் வீரனின் மனம் கரைந்துவிட்டது. நாராயணன் வல்லானின் ஆயுதங்களைப் பறித்து அவனுக்கு விலங்கு பூட்டினான். அப்போது வல்லான் தன் ஆணவம் அழிந்தது என கூறித் தன் செயல்களுக்குக் கழிவிரக்கப்பட்டான், ‘எல்லாக் காலத்திலும் ஒன்று ஏற்பவருக்கு இல்லை எனும் சொல்லானது கற்றும் சொல்லறியார் ஏந்து குந்தம் வல்லானைக் கொல்லாமல் மனைவிக்கு மங்கலியம் (ஈட்டி எழுபது 59) உல்லாசத்துடன் அளிக்கும் உதவியது ஒன்று அறிந்தேமால்’ என்ற கவிப்பேரரசர் ஒட்டக்கூத்தரின் பாடல் இதை விளக்குகிறது. வீரர்கள் அவனை விடுவித்துத் தன் நாடு செல்லப் பணித்துவிட்டுச் சோழ மன்னர் முன் வல்லானின் பொய்த்தலையுடன் வந்து சேர்ந்தனர். சோழனும் அவர்களைப் பாராட்டி ‘வல்லானின் தலையை எப்படி வெட்டினீர்’ என்றான். அது கேட்ட வீரர்கள் முருகனைத் துதித்து ‘அரசே’ பாரும்! இப்படித்தான் என முழங்கித் தம் தலைகளை அறுத்து அவன் முன் வைத்தனர்.

அது கண்ட அனைவரும் வருந்த அரசனும் வருந்தித் தன் தவறுக்குப் பிராயச்சித்தமாகத் தன் தலையை வெட்டிக் கொள்ள வாளை உயர்த்தினான். அப்போது பேரொளியாய் முருகப் பெருமான் தோன்றி அரசனைத் தடுத்து வீரநாராயணர் முதலிய பன்னிருவரும் மீண்டும் தோன்றும்படி அருள் செய்தனர். அனைவரும் முருகப் பெருமானை வணங்கி நல்லருள் பெற்றனர். பின்னர் வீர நாராயணர் இருவரும் துறவறம் மேற்கொண்டு சிவ சிந்தனையில் வாழ்ந்து பரிபூரணம் அடைந்தனர். அம்மேலோர் சமாதி செய்யப்பட்ட இடத்தில் அரசன் கோயில் எழுப்பி ஒரு நகரம் உண்டாக்கி அதற்கு வீரநாராயணபுரம் எனப் பெயர் வழங்கிச் சிறப்பித்தான். வல்லான் இருந்த ஏரிக்கும் ஏரிக்கும் வீரநாராயண ஏரி எனப் பெயரிட்டான். இவ்வாறு நம் வீரர்கள் பலர் தன்னலம் கருதாது நாட்டிற்கு நல்ல தொண்டுகளைச் செய்து நல்ல குறிக்கோளுடன் வாழ்ந்து குடிக்கும், குலத்திற்கும் பெருமை சேர்த்துப் பெரு வாழ்வு வாழ்ந்தனர் என்பதை எண்ணி நாமும் நம் வாழ்வை அவர் தம் வழியில் அமைத்துக் கொள்ள நாளும் முயல்வோம்!. கோட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *