1.கோட்டையண்ணன் முதலியார்
கோட்டையண்ணன் முதலியார் என்பவர் கிபி 14ஆம் நூற்றாண்டில் மத்திய கொங்கு நாட்டை ஆண்ட சிற்றரசன்.
இவர் பரமத்தி வேலூர், நாமக்கல், திருச்செங்கோடு, சிவகிரி, கொடுமுடி பகுதிகளை உள்ளடக்கிய மத்திய கொங்கு நாட்டின் சிற்றரசராக வாழ்ந்தவர்.
சோழர்கால “தெரிஞ்ச கைக்கோளப்படையினரில் (கானாசாரி கோத்திரம்) வம்சாவளியில் வந்தவர் கோட்டையண்ணன் முதலியார் என்று அறியப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி என்ற ஊரில் 200 ஏக்கர் பரப்பளவில் இவர் மண் கோட்டை கட்டினார்
இன்னமும் இவர் கட்டிய மண் கோட்டை நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் 200ஏக்கர் பரப்பளவில் சிதைந்த நிலையில் உள்ளது.
14 ஆம் நூற்றாண்டில் அன்னிய முஸ்லிகள்(கில்ஜி, துக்ளக் வம்சம்) தென் இந்தியா மீீது படையெடுத்தனர். இந்த முஸ்லிம படை நாமக்கல் பகுதிக்கு வரும்போது அவர்கலை எதிர்த்து பேரிட்டு நம் நாட்டு மக்களைை காத்தவர் இந்த கோட்டையண்ணன் முதலியார்.
படையெடுப்பை எல்லாம் எதிர்கொண்டு வென்றபேது காலச் சுழற்சியில் அவர் ஒரு போரில் வீர மரணம் எய்தினார்.
அவர் நினைவாக நடுகல் ஒன்றும் பரமத்தி ஊர் கோட்டைக்கோயில் பகுதியில் சுமார் 1 கி.மீ.தொலைவில் வடபுறத்தில் உள்ளது. இதைத் தொல்லியல் துறையினர் அகழ்வு ஆய்வு செய்தால் ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும்.
இவர் வழந்த காலத்தில் இவர் மற்றும் இவர் பங்காளிகள் பரமத்தி அங்காளம்மனை குலதெய்வமாக வணங்கினார்கள்.
கோட்டையண்ணனின் சந்ததியர் மற்றும் இவரின் பங்காளிகளை இன்று “கானாசாரி கோட்டையண்ணன் கோத்திரம்/கூட்டம் பங்காளிகள்” என்று அழைக்கப்பட்டுகிறார்கள்.
கெட்டி முதலியார் வம்சம்
இவர்கள் 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் வடக்கு கொங்கு (மேட்டூர் முதல் தலைவாசல் வரை) ஆண்டனர். இவர்களின் தலைநகரம் சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் மற்றும் அமரகுந்தி ஆகும்
1.மும்முடி கெட்டி முதலியார்
2.சிலாய கெட்டி முதலியார்
3.இம்முடி கட்டி முதலியார்
4வணங்காமுடி முதலியார்.
கெட்டி முதலியார் வம்சத்தைச் சேர்ந்த நான்கு இந்த தலைமுறை மன்னர்கள் விஜயநகர பேரரசுடன் பீஜாப்பூர் சுல்தான் படையெடுப்பை எதிர்த்தனர்.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் பவானி சங்கமேஸ்வரர் கோயில் ஆகிய கோவில்கள் கெட்டி முதலியார் குடும்பத்தால் முழுமையான கட்டிமுடிக்கப்பட்டது. ஆத்தூர் கோட்டையும் இவர்களால் கட்டப்பட்டது.
வடக்கு கொங்கு மண்டலமான சேலம் வட்டாரத்தில் ஜவுளி சார்ந்த தொழில்கள் இவர்கள் ஆட்சியில் தான் அதிக வளர்ச்சி அடைந்தது துணி உற்பத்தியில் நெசவாளர்கள் அதிகாலையில் தேவைப்பட்டதால் மைசூரிலிருந்து தேவாங்கர் சமூகத்தவர் சேலம் வட்டாரத்தில் இவர்களால் குடியமர்த்தப்பட்டனர்.
காலப்போக்கில் பாலக்காடு வழியாக பீஜப்பூர் சுல்தான் முஸ்லிம்கள் கெட்டி முதலியார் அரசின் மீது படையெடுத்து கெட்டி முதலியார் வம்சத்தை அழித்துவிட்டார்கள்.அக்காலத்தில் இவர்கள் ஜவுளித்துறையில் அதிகம் கவனம் செலுத்தியதால் தான் இன்றுவரை சேலம் வட்டாரத்தில் ஜவுளித் தொழிலை முக்கிய தொழிலாக காணப்படுகிறது.