Responsive Menu
Add more content here...

ராவ் பகதூர் தி.மா. ஜம்புலிங்கம் முதலியார்

Visits:309 Total: 2674504

செங்குந்தர் கைக்கோள முதலியார்

         ⚜️குலத் தோன்றல்⚜️
Rao bahadur தி. மா. ஜம்புலிங்கம் முதலியார் 
        (22.06.1890 – 28.10.1970)

⚜️ இன்று தென்னிந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் அதற்க்கு இவர் தான் காரணம். அனல் மின் நிலையத்திற்க்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி(lignite coal) எல்லாம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது.

⚜️ நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து, நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து,  நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த ஜம்புலிங்கம் முதலியார்.

பிறப்பு:

  •  மா. ஜம்புலிங்கம் முதலியார்  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் வசதிவாய்ந்த திருவதிகை சிற்றரசர் வம்சாவழியில் வந்த    “செங்குந்தர் கைக்கோள முதலியார்” குடும்பத்தில் பிறந்தார்.
  • இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தது
  • தகப்பனார் மிராசுதார். மாசிலாமணி முதலியார் – தாயார் சொர்ணத்தம்மாள். மூன்று குழந்தைகளில் இரண்டாம் குழந்தையாக பிறந்தவர். இவருக்கு ஒரு அண்ணன் ஒரு தங்கை உண்டு.
  • குழந்தைப் பருவத்தில் மிகச் சுட்டித்தனமானவர் தொடக்கக் கல்வி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கற்றார் பின்னர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயின்றுள்ளார்
  • பிறகு ஜம்புலிங்கம் முதலியார்  அவர்கள் விஜயலட்சுமி அம்மாளை திருமணம் செய்து கொண்டார் அவருக்கு ஐந்து பெண் குழந்தைகள் ஐந்து பேரையும் நல்ல கல்வியாளராக படிக்க வைத்தார்

இவர் செய்த மக்கள் பணிகள்:
1. கடலூர் மாவட்டத்தில் தாலுகா போர்டு மெம்பர் ஆக இருந்துள்ளார் ஒன்பது ஆண்டுகள்
2. கடலூர் மாவட்ட தாலுக்கா போர்டு தலைவராக 6 ஆண்டுகளும்
3. ஜில்லா போர்டு மெம்பர் ஆக மூன்று ஆண்டுகளும்
4. ஜில்லா போர்டு தலைவராக மூன்று ஆண்டுகளும் பதவி வகித்தார்
5. கடலூர் நகராட்சியில் நகர மன்ற உறுப்பினராக மூன்று ஆண்டுகளும்
நகர மன்ற தலைவராக மூன்று  ஆண்டுகளும்
6. நெல்லிக்குப்பத்தில் பேரூராட்சி தலைவராக 20 ஆண்டுகள் பணிபுரிந்தார் இவை அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகள்
7. இவரின் நேர்மையான மக்கள் பணியை பாராட்டும் வகையில் ஆங்கிலேய அரசு ராவ் பகதூர்(Rao Bagadhur) பட்டம் கொடுத்தது.

 இவர் செய்த சாதனைகள்:

⚜️ நெல்லிக்குப்பம் பேரூராட்சி தலைவராக இவர் பணியாற்றிய காலத்தில் தான் நெல்லிகுப்பம் சர்க்கரை ஆலை முழுமூச்சாக கொண்டு வந்து பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியது

 

நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனர் ஜம்புலின்க முதலியார்

 

⚜️ சேலம் மாவட்டத்திற்கும் கடலூர் மாவட்டத்திற்கு தொடர்வண்டி பாதை அமைக்க கோரிக்கை விடுத்தார். இவர் முயற்சியால் சேலம் to கடலூர் தொடர்வண்டி பாதை உருவானது. ஆனால் மத்திய தொடர்வண்டித்துறை குறைந்தது நூறு பேராவது நாளொன்றுக்கு இந்த பாதையில் பயணம் செய்ய வேண்டும் அப்போது தான் இந்த பாதை நிரந்திர பாதையாக அமைக்க முடியும் என கூறி விட்டது. ஏழை மக்கள் பயன்பாட்டிற்கு தேவை எனக் கூறி 100 பேர் தினமும் பயணிக்க வேண்டும் என்பதற்காக தனது பண்ணையில் வேலை பார்த்த ஆட்கள் 100 பேரை தனது சொந்த செலவில்  சம்பளத்துடன் தினமும் பயணச்சீட்டு எடுத்துக் கொடுத்து ரயிலில்  கடலூரில் இருந்து சேலம், சேலத்தில் இருந்து கடலூர்க்கு தினமும் போக வைத்தார்.

தொடர்ந்து முயன்று ஆண்டுகளாக இதையே செய்துவந்த நிலையில் பின்பு மக்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர் இப்படி கொண்டு வரப்பட்டதுதான் நிரந்திர சேலம் கடலூர் தொடர்வண்டிப் பாதை.

⚜️ புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட அரசிடம் கோரிக்கை வைத்தார். அரசு செவிசாய்க்கவில்லை. பின்பு தனது சொந்த செலவில் முழு முனைப்புடன் ஈடுபட்டு அரசிடம் அனுமதி பெற்று பொதுமக்களுக்காக பாலத்தை கட்டி கொடுத்தார் இன்றும் அந்தப் பாலம் இயக்கத்தில் உள்ளது

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) உருவான வரலாறு:

⚜️ இன்றைக்கு நெய்வேலி என்பது ஒரு நகரியம். ஆனால், முப்பதுகளில் அது ஒரு விவசாய கிராமம். இன்றைய நெய்வேலி நகரியம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தூரம் தெற்கில்தான் உண்மையான நெய்வேலி கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் உள்ள பெருமளவு விவசாய நிலங்களுக்கு அதிபர் ஜம்புலிங்க முதலியார் ஆவர்.

⚜️ விவசாயத்திலும், ஜவுளி துறையிலும் திறன் வாய்ந்த ஜம்புலிங்க முதலியார், தனக்குச் சொந்தமான நெய்வேலி கிராமத்து விவசாய நிலத்தில் தண்ணீருக்காகக் புதிய கிணறு தோண்டும்போது, கறுப்பு நிற திரவப்பொருள் தண்ணீரோடு கலந்து வந்தது. அதிசயப்பட்டுப்போனவர், அன்றைய ஆங்கிலேய அரசின் புவியியல்துறையின் கவனத்துக்கு அனுப்பிவைத்தார்(1932).
ஆனால் அரசு புவியியல்துறை மெற்கொண்ட ஆய்வுகளை மேற்கொல்லவில்லை.
மீண்டும் இவரே தன் சொந்த செலவில் ஆய்வுகளை மேற்கொண்டு நிலக்கரி இருப்பதை கண்டுப்பிடித்தான்.

⚜️ பின்பு சுய முயற்சியில் ஆய்வுக் கூடங்களுக்கு சென்று ஆய்வு செய்து நிலக்கரி தான் என உறுதி செய்துகொண்டார்

⚜️ அப்போதுதான், பழுப்பு நிலக்கரி இருப்பது அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டது. அன்றைய ஆங்கிலேயேர் ஆட்சி முடிவடையும் தறுவாயில் இருந்ததாலும், இந்தியா முழுக்க சுதந்திரப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததாலும் அவர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை. நாடு சுதந்திரம் அடைந்த நிலையில், அந்த காலத்தில் முதலமைச்சராக இருந்த இராஜாஜியிடம் அணுகி இந்த நிலக்கரி இருப்பதை பற்றி விளக்கினார் இருப்பினும் இராஜாஜி இதை கண்டுக்கொள்ளவில்லை. பின்பு காமராஜர் முதலமைச்சர் ஆனா பின்பு அவர்களை அணுகி அவரிடம் விளக்கிக் கூறியுள்ளார் பின்பு காமராஜர் மூலமாக அன்று பாரத பிரதமராக இருந்த நேருவை சந்தித்து அவரிடம் விளக்கத்தை தந்துள்ளார்.

⚜️ நிறுவனம் தொடங்க அன்று 150 கோடி ரூபாயை தேவைப்பட்டதால் மத்திய அரசு இதற்க்கு உதவி செய்ய முடியாது என்று கூறிவிட்டது. இதனை அறிந்த ஜம்புலிங்கம் முதலியார் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனம் உருவாக்த் தேவைப்படும் 620 ஏக்கர் நிலத்தை காமராஜர் தலைமையிலான மாநில அரசுக்கு தானமாக கொடுக்கிறேன் என்று அறிவித்தார்.
⚜️ நிறுவனத்துக்கு தேவைப்படும் நிலங்கள் ஜம்புலிங்கம் முதலியார் தானமாக வழங்கியதால் காமராஜர் தலைமையிலான மாநில அரசு, மத்திய அரசின் உதவி இல்லாமல் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை அமைத்தது.
இப்படி உருவானதுதான் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) இந்த நிறுவனத்திற்கு தானமாக ஜம்புலிங்கம் முதலியார் கொடுத்த 620 ஏக்கர் நிலத்தின் இன்றைய மதிப்பு 2,500 கோடி ரூபாய் ஆகும்.
⚜️ 1956இல் நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயாரிக்க என்.எல்.சி. நிறுவனத்தைத் தொடங்கியது இந்திய அரசு. ஜம்புலிங்கம் முதலியார், நிலக்கரி நிறுவனம் உருவானால் இந்த மக்களுக்குப் பயன்படுமே என்று தன் நிலத்தில் 620 ஏக்கரை தானமாகக் கொடுக்க, அந்த நெய்வேலி என்னும் கிராமத்தின் பெயரைத்தாங்கி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உருவானது.
⚜️ இன்றைக்கு தென்னிந்தியாவிற்கு தேவைப்படும் மின்சாரம் 90% சதவீதம் அனல்மின் நிலையத்தில் இருந்துதான் உருவாக்கப்படுகிறது. இந்த  தென்னிந்திய அனல்மின் நிலையங்களுக்கு தேவைப்படும் lignite Coal என்ற பழுப்பு நிலக்கரி அனைத்தும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து தான் அனுப்பப்படுகிறது.
⚜️ இந்த நெய்வேலி நிலக்கரி சுரங்கம் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து எடுக்கப்படும் நிலக்கரியின் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது.
ஐயாவின் சிலை

சிலை அமைந்துள்ள இடம்
Google map: Location link 

⚜️ தங்களுக்கு வாழ்வளித்த அந்த ஜம்புலிங்கத்துக்கு இரண்டாம் சுரங்கப்பாதையின் நுழைவு வாயிலில் தொழிலாளர்கள் ஒரு சிலை அமைக்க விரும்பி, அவர்களின் பணத்திலேயே சிலையும் அமைக்கப்பட்டது. அது, பின்னர் நாசமாகிப்போக நெய்வேலி இரட்டைப்பாலத்தின்மீது ஜம்புலிங்கத்துக்கு முழு உருவ வெண்கலச் சிலையை வைத்து அழகுபார்த்தனர் நெய்வேலி மக்கள்.

⚜️ அவரது வாழ்க்கையிலே மிகச் சிறந்த பணி என கருதப்படுவது கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு தனது சொந்தமான 620 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்தார்
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வருவதற்கு திரு ஜம்புலிங்கம் முதலியார்  அவர்கள் தான் காரணம்.

என்.எல்.சி நிறுவனத்தின் தலைவர் ஜம்புலிங்கம் முதலியாருக்கு மரியாதை செலுத்திய போது

விவசாயத்திற்கு ஆற்றிய தொண்டுகள்:
நெய்வேலியில் மந்தாரக்குப்பம் அருகில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் உவர் நிலமாக இருந்துள்ளது விவசாயத்திற்கு பயன்படாமல் இருந்துள்ளது, அவர் நிலம் மட்டுமல்லாது அனைத்து நிலங்களையும்  விவசாய நிலமாக மாற்றி விவசாயம் செய்துள்ளார்

ஆன்மீகத்தில் ஜம்புலிங்கம் செங்குந்தர்:
ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் உடையவர் கடலூர் மாவட்டம் புகழ்பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக இருந்துள்ளார் அந்த காலகட்டத்தில் கோயில் திருப்பணிகள் பல ஈடுபட்டுள்ளார்.

 ஜம்புலிங்கம் முதலியார் அவர்களின் அண்ணன் குடும்பம்
நெய்வேலி டவுன்சிப் இல் உள்ள கல்வெட்டு.
ஜம்புலிங்க முதலியார் வாரிசுகளின் பட்டியல்
ஜம்புலிங்க முதலியார் இறப்பு சான்றிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *