Responsive Menu
Add more content here...

ராஜா Sir சவலை இராமசாமி முதலியார்

Visits:504 Total: 2674233

செங்குந்தர் கைக்கோள முதலியார்

குலத் தோன்றல்

ராவ்பகதூர் ராஜா சார் சவலை இராமசாமி முதலியார் CIE

18ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் பெரும் செல்வந்தர் & வணிகர், துபாசி, அரசியல்வாதி மற்றும் கொடைவள்ளல் ஆவார்.

இந்திய தேசிய காங்கிரசின் நிறுவிய ஆரம்பகால தலைவர்களில் ஒருவராகவும்,அதற்கு செயல்வடிவம் கொடுத்துவரும் ஆவார்.

(13 அக்டோபர் 1840 – 6 மார்ச் 1911)

ஆரம்ப கால வாழ்க்கை
சவலை ராமசாமி முதலியார் 1840 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரியில் காஞ்சிபுரம் மானாம்பதி என்ற ஊரை பூர்வீகமாக கொண்ட செங்குந்த கைக்கோளர் குலத்தில் கட்டிட ஒப்பந்தக்காரருக்கு மகனாக பிறந்தார்.
இவருக்கு தையல் நாயகி அம்மாள் மற்றும் லேடி ஜானகி அம்மாள் என்று இரண்டு மனைவிகள். இவர் டைம்ஸ் அண்டு கோ(Time’s & Co) நிறுவனத்துடன் இணைந்து தொழில் செய்து பின்பு துபாஷி ஆக உயர்ந்தார்.

வகித்த முக்கிய பதவிகள்:

நகராட்சி ஆணையர், மெட்ராஸ் – 1877

துணைத் தலைவர், மெட்ராஸ் மகாஜன சபா

மெட்ராஸின் ஷெரிப் – 1886, 1887, 1905

சுகுனா விலாஸ் சபாவின் முதல் ஜனாதிபதி

இந்திய பஞ்ச தொண்டு நிவாரண நிதியத்தின் குழு உறுப்பினர் – 1897

மக்கள் சேவை

1870 களில் சவலை ராமசாமி முதலியார் பிரிட்டிஷ் ஆட்சி மெட்ராஸ் மாகாணத்தில் மக்களுக்கு உதவியாக இருக்கும் அறப் பணியின் நடவடிக்கைகளுக்காக அறியப்பட்டவர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பார்க் டவுனிலும், திருக்கழுக்குன்றத்தில் சத்திரம் கட்டினார், அதில் வெளியூரிலிருந்து  வருபவர்களுக்கு தேவையான அனைத்தும் இலவசமாக செய்து கொடுத்தார்.

இந்திய நாடு  பிரிட்டிஷ்காரர்கள் இடம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் அடிப்படை சுகாதார நிலையம் வசதி கூட இல்லாமல் இருந்த நிலையில் தனது சொந்தத் தொலைவில் இவரது முதல் மனைவி ராணி தையல் நாயகி அம்மாள் நிறைவாக மெட்ராஸ் ராயபுரம் திருப்பரங்குன்றம், கடலூர் மற்றும் காஞ்சிபுரம் என பல ஊர்களில் மருத்துவமனை கட்டி கொடுத்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில்  படிப்பறிவு இல்லாத மக்களுக்கு படிப்பு அறிவை வளர்க்க மெட்ராஸில் ஒரு பெரிய நூலகம் கட்டிக் கொடுத்தார்.

பிறகு இவர் கடலூரில் குழந்தைகள்  சிறப்பு பராமரிப்பு மருத்துவமனை ஒன்றை மக்களுக்காக கட்டிக் கொடுத்தார்.இவர் கட்டி கொடுத்த அனைத்து மருத்துவமனைகளும் இன்று அந்தந்த ஊர் நகராட்சி அமைப்புகளால் இயக்கப்படுகிறது.

1884 ஆம் ஆண்டில் ராமசாமி முதலியார் அவர்களால் மெட்ராஸ் சென்ட்ரல் ரயில்நிலையம் அருகில் ஒரு பெரிய சத்திரம் கட்டப்பட்டது. இந்த சத்திரம் 1967 ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட்டது. அதன்பின் மெட்ராஸ் உயர்நீதி மன்றம் ஏ ஜி மற்றும் ஓடி அமைப்புகளால் எடுக்கப்பட்டு தற்போது வரை சில மக்கள் சேவைகளை செய்து வருகிறது.

1902 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் மன்னர் எட்வர்ட் VII மற்றும் ராணி அலெக்ஸாண்ட்ரா ஆகியோரின் முடிசூட்டு விழாவில் மெட்ராஸ் நகரத்தை பிரதிநிதியாக ராமசாமி முதலியார்  தேர்வு செய்யப்பட்டு லண்டன் மாநகருக்கு அழைப்பு விடுத்தனர். மன்னர் நோய்வாய்ப்பட்டபோது முடிசூட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது, பின்னர்  அங்கிருந்து ஜூலை மாதம் இராமசாமி முதலியார் இந்தியாவுக்குத் திரும்பினார், அடுத்த மாதம் மீண்டும் திட்டமிட்டபடி முடிசூட்டு விழாவை நடைபெற்றது மீண்டும் விழாவில் ராமசாமி முதலியார் லண்டன் சென்று கலந்து கொண்டார்.

இந்திய சுதந்திர இயக்கத்தில  சவலை ராமசாமி முதலியார்

பிற்காலத்தில் காங்கிரஸ் கட்சி உருவாக காரணமாக இருந்த மெட்ராஸ் மகாஜன சபை என்ற அமைப்பு உருவாக காரணமாக இருந்தது. அதற்கு நிதி உதவியும் அளித்து, சபாவின் முதல் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர் சவலை இராமசாமி முதலியார்

இராமசாமி முதலியார் இந்திய தேசிய ஒன்றியத்துடன் தொடர்புடையவர், மேலும் 1885 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக இந்திய தேசிய காங்கிரஸ் இந்தக் காட்சியை 72 நபர்கள் கொண்ட குழு இங்கிலாந்து சென்று ஆரம்பித்தனர் அந்த 72 நபர்களில் சவலை ராமசாமி முதலியாரும் ஒருவர்.

இராமசாமி முதலியார் 1887 இல் மெட்ராஸில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது அமர்வு குழு கூட்டத்தில் பங்கேற்றார்.அவர் காங்கிரஸ் வரவேற்புக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். பிரிட்டிஷ் கால இந்தியாவில் அரசு நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்காமல் இருந்த பிரிட்டிஷ் அரசை கண்டித்து இந்த கூட்டத்தில் அரசு நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் கோரி ஒரு தீர்மானம் போடப்பட்டது. ராமசாமி முதலியார் தீர்மானத்தை ஆதரித்து பேசினார். அவர் பேசிய வார்த்தைகள்👇

Gentleman, while we are humbly praying out Government to grant us some small representative element in the Government, we have actually got full-blown representative institutions flourishing in this country under our very noses. I do not know whether you are aware how they are flourishing in Pondicherry and other places which are subject to the French government. England will not as yet allow us the smallest modicum of representative institutions, but in Pondicherry every man has a right to elect his representative. He enjoys manhood suffrage!

மெட்ராஸ் காங்கிரஸ் அமர்வின் மூன்றாம் நாளில், சவலை ராமசாமி முதலியார் ஒரு பொது சேவை ஆணையத்தை நிறுவுவதற்கான கேள்வி அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று ஒரு திருத்தத்தை முன்வைத்தார். 1889 இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் ஐந்தாவது அமர்விலும் ராமசாமி முதலியார் பங்கேற்றார். இந்திய தேசிய காங்கிரசின் அடுத்த அடுத்த அமர்வுகளிலும் அவர் பங்கேற்றார். 1894 காங்கிரசில், அவர் காங்கிரஸின் ஜனாதிபதி பதவிக்கு ஆல்பிரட் வெப்பை முன்மொழிந்தார்.

அவர் முன்மொழிந்தவரே ஜனாதிபதியாகவும் மற்ற நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இறப்பு

செவலை ராமசாமி முதலியார் 1911 இல் தனது 71 வயதில் இறந்தார், சென்னை கீழ்ப்பாக்கம் கிலாபுக் கார்டன் ரோடு உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது சிலை அவரது நண்பர்களால் சவலை இராமசாமி முதலியார் சத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இவரின் பெருமைகள்

பிரிட்டிஷ் அரசால் ராஜா பட்டம் பெற்ற இந்தியர்கள் இருவர் மட்டுமே.

ஒருவர் செட்டிநாட்டு ஜமீன்தார், மற்றொருவர் நமது ராஜா பட்டம் பெற்ற ராமசாமி முதலியார் Kt.CIE க்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

ராமசாமி முதலியார் 1885 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இந்தியப் பேரரசின் தோழர் (CIE) பதவியில் சேர்க்கப்பட்டார். இவர் இந்திய மக்களின் முன்னேற்றத்துக்கு அதிக சொத்துக்களை தானம் செய்ததால் அவருக்கு “ராவ் பகதூர்” என்ற உயரிய பட்டங்களும் வழங்கப்பட்டன.

1886 ஆம் ஆண்டில், அவர் மெட்ராஸின் 158 வது ஷெரிப் ஆனார், இந்த பதவியை வகித்த முதல் இந்தியர் இவரே ஆவர்.

இவர் பிப்ரவரி 14, 1887 அன்று குயின்ஸ் கோல்டன் ஜூபிலி Honours பட்டியலில் Sir & Knighted என்ற பட்டம் பெற்றார்.

“பட்டத்து ராஜா ‘ என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது தனிப்பட்ட வேறுபாட்டை அவர்,

ஜனவரி 1, 1891 அன்று வில்லியம் கோட்டையில் இந்திய வைஸ்ராய் மற்றும் இந்திய கவர்னர் ஜெனரல்  மார்க்வெஸ் அவர்களால் “ராஜா”பட்டம் கொடுக்கப்பட்டது.

இராமசாமி முதலியரின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள அவரது சத்திரத்தில் ஒரு பொது விழாவாக கொண்டாடப்படுகிறது.

செயல்பாடு AGOT சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கூட்டுறவு அறங்காவலர் SVR. ராம் பிரசாத் (ஐயாவின் கொள்ளுபேரன்) மூலம் நிர்வகிக்கப்படுகிறது, இதில் சவலை ராமசாமி முதலியார் தொண்டு நிறுவனம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *