செங்குந்தர் – செங்குந்தம் என்றால் இரத்தத்தால்(செம்மை) சிவந்த ஈட்டி (குந்தம்) என்று பொருள். செங்குந்தர் என்றால் ‘அத்தகைய’ செந்நிறமான ஈட்டியை உடையவர்.
கைக்கோளர் – என்றால் வலிமையான (கோள்-வலிமை) கைகளை உடையவர் என்று பொருள்.மேலும் பாலி மொழியில் கட்டிய-குல என்றால் அரச குலம் என்று பொருள். அதுவே மருவி கய்- குல என்றாகி பின் கைக்கோளர் என்றானது என்றும் கூறுவர். முதலியார் – ‘முதலி’ என்றால் “முதன்மையானவர்” எனும் பொருள் படும்.
நமக்கு வழங்கும் வேறு பெயர்கள்
1.சிலப்பதிகாரத்தில் நம்மை காருகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காருகர் என்றால் நெசவு செய்பவர் என்று பொருள்.
2.சில கல்வெட்டுகளில் சேனைத்தலைவர், தத்துவாயர் எனறு நம்மை குறிப்பிடப்பட்டுள்ளது.
“சேனைத்தலைவர்”என்றால் , படைத்தளபதி என்று பொருள். “தத்துவாயர்” என்றால் நெசவாளர் என்று பொருள்.
3.தெற்கு ஆந்திராவில் நம்மை கரிகாலபக்தலூ, கைக்காள செங்குந்தம் என்று அழைப்பார்கள் “கரிகாலபக்தலூ” என்றால் கரிகால சோழனின் பக்தர்கள் என்று பொருள்.
4. கேரளாவில் நம்மை “கேரளமுதலி” அல்லது “கைக்கோள முதலி” என்று அழைப்பார்கள்.