Responsive Menu
Add more content here...

தொழிலதிபர் எத்திராஜ் முதலியார்

Visits:920 Total: 2674695

(?.?.?? – 11.07.2020)

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பின்னி மில்ஸ், எஸ்.வி. குலோபல் மில்ஸ் உரிமையாளரும், ராமசந்திரா மருத்துவமனையின் பங்குதாரரும் எத்திராஜ் முதலியார்.

உழைப்பால் உயர முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர். தொடக்கத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றிய எத்திராஜ் முதலியார், பின்னர் தமது பள்ளித் தோழர் என்.பி.வி இராமசாமி உடையாருடன் இணைந்து சிறிய அளவில் தொழில்களைத் தொடங்கி படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறினார். கடும் உழைப்பின் பயனாக தமிழகத்தின் குறிப்பிடத்தக்க தொழிலதிபராக உருவெடுத்தார்.
மேலும், பல தொழில் நிறுவனங்களுக்கு உரிமையாளராகவும், ராமசந்திரா மருத்துவமனை நிர்வாகத்தின் பங்குதாரகவும் இருந்தவர். தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபராக உருவெடுத்தாலும் கூட, எளிமையின் சின்னமாக திகழ்ந்தவர். ஏழைகளுக்கு ஏராளமான உதவிகளை செய்து வந்தவர். கல்விக்காக உதவி கேட்ட அனைவருக்கும் உதவியவர்.
மனிதநேய மாமணி திரு தே பட்டுசாமி exMP
அவர்களின் சம்பந்தி
மாமனிதர் திரு டி வி தேவராசனார்
குடும்பத் திருவிளக்கு
திருமதி வள்ளி செல்வம் அவர்கள்தம்
அன்புத் தந்தையார் தொழிலதிபர்
திரு எம் எத்திராசனார் அவர்களின்
மறைவு ஈடுசெய்ய முடியாத
பேரிழப்பு…..!
சமூக அடையாளமாகத்
திகழ்ந்த
பெருமிதச் செல்வரை
மலர்ந்த முகத்துப்
பெருமகனாரை
இழந்து வாடும்
குடும்பத்தார்க்கு
எங்களின்
ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்
கொள்கின்றோம்….!
தமிழ் நாட்டின்
தொழில் முகமாய்
திருமகள் மில்ஸ்
பின்னி மில்ஸ்
எஸ் வி குளோபல் மில்ஸ்
அதிபராக
வள்ளல் குணக்
குன்றமாகச்
சிறக்க விளங்கிய
பெருந்தகையர்தம்
பெருவாழ்வு
வணங்கிப்
போற்றுதற்குரியது….!
நெகிழ்ந்த
நெஞ்சுடன்,
ப மகாலிங்கம்
செல்லம் குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *