Responsive Menu
Add more content here...

திருச்செங்கோடு டி.பி. ஆறுமுகம் exMLA

Visits:274 Total: 2674906

                  (28.07.1929 – 18.08.2014)
பிறப்பு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தில் வீரபத்திரன் கோத்திரம் பங்காளிகள் தோக்கவாடியார் ரங்கசாமி முதலியார் – மீனாட்சியம்மாள் தம்பதியரின் பேரனும்,
ர. பச்சியண்ணன் – வள்ளியம்மாள் தம்பதியரின் மகனாக (28.07.29) அன்று
டி.பி. ஆறுமுகம் பிறந்தார்.
வாழ்க்கை: 
கல்வி படித்து முடித்து தனலட்சுமி அம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு மல்லிகாதேவி, பூங்கோதை, ராஜேஸ்வரி, மோகனசுந்தரி, யசோதா, தங்கமணி என்று மொத்தம் ஆறு பெண் குழந்தைகள்.
தனது குலத்தொழிலான ஜவுளி தொழிலை சிறப்பாக செய்து “திருமகள் சைசிங் மில்” என்று நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வந்தார்.
சிறு வயதில் இருந்து அரசியலில் ஆர்வம் உள்ள இவர் திமுக கட்சியில் இணைந்து பணியாற்றி பல கட்சி பதவிகளில் இருந்தார்.
1967ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக சார்பில் க. அன்பழகன் திருச்செங்கோடு மக்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டர். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத க. அன்பழகனுக்கு தீவிர பிரச்சாரம் செய்து தேர்தலில் க. அன்பழகனை டி.பி. ஆறுமுகம் வெற்றிப்பெறச் செய்தார்.
கட்சியில் சிறப்பாக உழைத்து திமுக சார்பில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் பதவிக்கு இரண்டு முறை போட்டியிட்டு 12ஆண்டுகள் நகர்மன்ற தலைவராக சிறப்பாக பணியாற்றினார். (1967-1976) (1986-1991)
நகர்மன்ற தலைவராக இருந்த போது சிறப்பாக பணியாற்றி மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தார்.
பல நூறு ஆண்டுகளாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.
பல நூறு ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாத
அர்த்தநாரீஸ்வரர் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.
திருச்செங்கோடு நகா்மன்றத்தின் முதல் தலைவர் , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் , எழுகரை நாடு செங்குந்த முதலியார்களின் பெருமைமிகு நாட்டாண்மைக்காரர் , செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் , 365 வருடங்களுக்கு பிறகு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தியவர் , திருச்செங்கோடு நகர மக்களுக்கு , சுதந்திர பொன்விழா குடிநீர் திட்டம் கொண்டு வந்தவர் , திருச்செங்கோடு நகருக்கு பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் அமைத்து தந்தவர், கறை படியாத கரத்திற்கு சொந்தக்காரர்.
சிறப்பாக நகர்மன்ற தலைவராக பணியாற்றிய காரணத்தால் 1996ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வாக வெற்றிப்பெற்றார்.
செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்க்காக திருச்செங்கோட்டு செங்குந்தர் பொறியியல் கல்லூரி ஆரம்பித்து 16 ஆண்டுகள் அதன் செயலாளராக இருந்தார்.
19ஆண்டுகள் திருச்செங்கோடு செங்குந்தர் கல்வி அறக்கட்டளையின் செயலாளராக பணியாற்றினார்.
72 செங்குந்தர் நாட்டின் ஒன்றான எழுகரை நாட்டின்(திருச்செங்கோடு) நாட்டாண்மைக்காரராக 27 ஆண்டுகள் பணியாற்றினார்.
மாண்புமிகு
திரு T.P.ஆறுமுகம் முதலியார் EX.MLA(வீரபத்திரன் கூட்டம்) அவா்களின் 5ம் ஆண்டு நினைவு நாள்.
ஐயா தலைமையில் கட்டிய செங்குந்தர் கல்லூரியின் ஒரு பகுதி
இவரின்
கூட்டம் பெயர்: வீரபத்திரன் கோத்திரம்
குலதெய்வம்: பழனி முருகன் மற்றும் பச்சியம்மன்,  மலை அடிவாரம், திருச்செங்கோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *