Responsive Menu
Add more content here...

சோழர்களும் செங்குந்தர்களும்

Visits:990 Total: 2101163

முற்காலச் சோழர் காலம்:

முற்கால சோழ மன்னர்களில் ஒருவரான முசுகுந்த சோழன் என்ற மன்னன் வசிஷ்ட முனிவரின் அறிவுரைப்படி முருகக் கடவுளை சஷ்டிவிரதம் முறைப்படி செய்தார்.

முருகக் கடவுள் முசுகுந்தனின் முருக பக்தியை மெச்சித் தம் நவவீரர்களோடு  வந்து காட்சி தந்து “உனக்கு வேண்டியவற்றை கூறுவாய்” என்றருள முசுகுந்த சோழன் முருகக் கடவுள் திருவடிகளைப் பணிந்து “நான் என் முன்னோர்களை போல் சக்கரவர்த்தி பதவியைப் பெற்று பூமியிலேயே சிறப்புடன் வாழ இந்த நவவீர செங்குந்தர் வம்சத்தினரை எனக்கு உறவினராகவும், படைத்தவர்களாகவும் தந்தருள வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

முருக கடவுள் முசுகுந்த சோழன் விண்ணப்பத்தை கேட்டு அவர் நவவீரர்களை  பார்த்து “நவவீர செங்குந்தர்  ஆகிய நீங்கள் முசுகுந்த சோழனுடன் மண்ணுலகம் சென்று அவனுக்கு உறவினர்களாலும் படைத் துணைவர்களாகவும் இருங்கள்” என்று  கூறினார்.

நவவீரர் செங்குந்தர்கள் முருகக்கடவுள் கூறியபடி முசுகுந்த சோழன் உடன் மண்ணுலகம் வந்தனர்.

மண்ணுலகம் வந்தபின் நவ வீரர்களில்  மூத்தவரான வீரவாகு முதலியாரின் மகளான சித்திரவள்ளியை முசுகுந்த சோழன் மணந்தார்.

இதன் பிறகுதான் செங்குந்த கைக்கோளர்கள் சோழர்களுக்கு படை வீரர்களாக மாறினர்.

இடைக்கால சோழர்: (கி.பி. 8 – 13 நூற்றாண்டு)

இடைக்காலத்தில் செங்குந்தகைக்கோளர்கள்  அதிக அளவில் சோழ இராணுவத்தில் பணியாற்றினார்.

சோழர் போர்படையில் 70% செங்குந்தகைக்கோளர்களே நிரப்பினர்.

அவர்களில்  சிலர் பிரம்மதராயர்,  பிரம்மமாராய என்ற பட்டத்தை வைத்திருந்தனர். இது பொதுவாக சோழ அரசாங்கத்தில் மிக உயர் பதவியில் இருந்த அரச குடும்ப அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

பலசெங்குந்தர்கள் சேனாதிபதிகளாகவும் (சேனை)படைத்தளபதிகளாகவும் (தளம்)  அணிபதிகளாகவும் (அணி)                    படைத்தலைவர்களாகவும்(படை)சோழர்களின் அரசில் இருந்திருக்கின்றனர். 

செங்குந்த கைக்கோள  சேனாதிபதிகள்   “சமந்த சேனாபதிகள்” அல்லது “சேனைத்தலைவர்”என்று அழைக்கப்பட்டனர்.

செங்குந்தகைக்கோள வீரர்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள், போர் திறன் மிக்கவர்கள் என்பதால் சோழ மன்னர்கள் இவர்களை தெரிந்த கைக்கோளர் படை என்று அழைத்தனர். பின்னர் அந்த பெயரிலேயே பல போர் படை பிரிவுகள் உருவாக்கப்பட்டது.

சோழர்படையில் “தெரிஞ்ச கைக்கோளப்படை”, எனும்  படைப்பிரிவுகள் இருந்தது,  கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. 

1.அபிமான பூஷண தெரிஞ்ச கைக்கோளப்படை

2.அருள்மொழிதேவ தெரிஞ்ச கைக்கோளப்படை

3.கண்டராதித்த தெரிஞ்ச கைக்கோளப்படை

4.கரிகாலசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை               

5.சமரகேசரி தெரிஞ்ச கைக்கோளப்படை         

6.சிங்களாந்தக தெரிஞ்ச கைக்கோளப்படை

 7.பராந்தகச்சோழ தெரிஞ்ச கைக்கோளப்படை

8.பார்திபசேகர தெரிஞ்ச கைக்கோளப்படை

9.வீரசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை 

10.விக்ரமசோழ தெரிஞ்ச கைக்கோளப்படை 

அந்தந்த மன்னர் பெயரை முன்னொட்டாக வைத்து அவருடைய (தெரிந்த)படை என   அழைக்கப்பட்டது.