Responsive Menu
Add more content here...

ஈரோடு வள்ளல் ஆர்.ஏ.என். முத்துசாமி முதலியார்

Visits:492 Total: 2674222

 

 
    (3.09.1913 – 13.01.2000)     
பிறப்பு:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம் ராய்க்காபாளையம் என்ற ஊரில் பிறந்தார் RAN. முத்துசாமி முதலியார்.  
 
வகித்த பதவிகள்:
1950இல் கவுந்தப்பாடி சுதேசி வர்த்தகர் சங்கம் தலைவர்.
 
கவுந்தப்பாடி கலைமகள் கல்வி நிலையம் நிறுவனர் தலைவர் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
 
அதற்குப் பின்பு ஈரோடு நூல் வியாபாரிகள் சங்கம் ஜவுளி மார்க்கெட் சங்கம் மற்றும் பல பொதுவான பதவிகள் வகித்தார்.
 
நூல் வியாபாரம் RANM.சிட்பண்ட்ஸ் அலுவலகம் ஈஸ்வரன் கோவில் வீதி ஈரோடு மாநகரில் உள்ளது அதன் ஸ்தாபகர் இவரே.
 
இவரது குல தெய்வமான
செங்குந்த கைக்கோளர் மரபு, குழந்தைசெட்டி முதலி கோத்திர்ம் பங்காளிகள்
காமாட்சி அம்மன் கோவில் நிறுவன தலைவர் என பல நற்காரியங்களை செய்த பெரும் தலைவர்.
 
மக்கள் பணிகள்:
நெசவு தொழில்அதிகம் உள்ள ஈரோடு மாவட்டத்தில் நெசவு க்கென்றே தொழில்நுட்ப கல்லூரி ஆரம்பித்து அதில் நடித்த பல்லாயிரம் மாணவர்கள் குடும்பங்கள் வாழ்க்கை தரம் உயர காரணமானவர்.
 
கல்வி தந்தை என்று அழைக்கப்படுகிறார் அவரது தலைமையில் முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களால் திறக்கப்பட்ட கவுந்தப்பாடி சுதேசி ஜவுளி வர்த்தகர் சங்கம் ஆரம்பிக்க பட்டு அதன்மூலம் கலைமகள் கல்வி நிலையம் என்ற பள்ளியை ஆரம்பித்தார்.
 
கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு 1.5ஏக்கர இடம் கொடுத்தார்.
 
பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆரம்பிக்க பெரும் நன்கொடை வழங்கினார்.
 
புயல் வெள்ளம் நிவாரணம் யுத்தகால உதவி என்று பல்வேறு சமுதாய பணிகளில் இன்றும் ஈடுபட்டு வருகிறது.
 
ஈரோடு கலைக்கல்லூரி, காமாட்சி அம்மன் தொழில்பயிற்சி நிறுவனம், எய்தினார் பாலிடெக்னீக் கல்லூரி ஆகியவை கொண்ட முதலியார் கல்வி அறக்கட்டளை யினை நிறுவினார்.
 
 
 
 
 
இவரின் 
கூட்டம் பெயர்: குழந்தைசெட்டி முதலி கோத்திரம்
குலதெய்வம்: பழனி முருகன் மற்றும் காமாட்சியம்மன் கோவில்,  கவுந்தப்பாடி.
குலகுரு: இறையமங்கலம் இம்முடி பரஞ்சோதி குருக்கள் மடம்.
 
மேலும் இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *