ஈரோடு மன்னர் சந்திரமதி முதலியார்
Visits:899 Total: 2674690
![]() |
மன்னர் சந்திரமதி முதலியார் |
வரலாறு மிகவும் அற்புதமானது, இன்று சாதாரணமாக காணப்
படும் பல இடங்கள் வரலாற்றில் மிக முக்கிய மாற்றங்களை
ஏற்படுத்திய இடமாக இருந்திருக்கக்கூடும். ஊர்கள், நாடுகளின்
பெயர்கள் கூட ஏதோ ஒரு சம்பவத்தின் அடிப்படையில், ஏதோ ஒரு
வரலாற்று நிகழ்வின், வரலாற்று கதை நாயகர்களின் நிளைவில்
உருவாக்கப்பட்டவையாக இருக்கும்
நமது ஈரோட்டை பொறுத்தவரை ஆன்மிக ரீதியாக ஒரு பெயர்
காரணமும், புவியியல் ரீதியாக ஒரு பெயர்க்காரணமும் கூறப்படு
கிறது. ஈரோடை என்பதோரோடு என்று மருவியதாக ஒரு குறிப்பும்
ஈர ஒடு ஈரோடு என்று மாறியதாக ஒரு குறிப்பும் உண்டு
ம்நூற்றாண்டில் வாழ்ந்த வாலசுந்தர கவிஞர் என்பவர் கொங்கு
மண்டல சதகத்தில்
சிரிய செங்கமலமாய மேவுந் திரு வெழின்மிக்
காரிரு வோருடன் கூடிக் கலந்தங் கவர் பொருட்டாற்
போரியல் வேல்விழி யிற்தாரணி நாயகன் பொன்னொடுபூ
மாரிபொழிந்தது மீரோடை சூழ்கொங்கு மண்டலமே
என்று பாடி இருக்கிறார்
ம்நூற்றாண்டிலேயோரோடு, ாராடைஎன்றபெயரில் கொங்கு
மண்டலத்தின் சிறப்புக்கு உரிய ஊர்களில் ஒன்றாகவே நிகழ்ந்து
இருக்கிறது. அது மட்டுமின்றி ஈரோடை சூழ் கொங்கு மண்டலமே
என்ற பாடல் வரிகள் கொங்கு மண்டலத்தின் மையப்பகுதியாக
ஈரோட்டை குறிக்கிறது
கி.பி.17-ம் நூற்றாண்டில் ஈரோட்டில் கோட்டை கட்டப்பட்டது
இந்த கோட்டையை கட்டியவர் சந்திரமதிமுதலியார் என்ற மன்னர்
ஆவார். இவருடையமுன்னோர்கள் அனைவரும் வீரர்களாக இருந்த
னர்.கொங்குமண்ணில்பிறமன்னர்களின் பன்டை எடுப்புகாலங்களில்
கொங்கு பகுதியை ஆட்சி செய்த அந்தந்த பகுதி ஆட்சியாளர்க
ளுக்குசேனை வீரர்களாகபணியாற்றியவர்கள் செங்குந்த வீரர்கள்
தொடக்க காலத்தில் காஞ்சிபுரம்பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின்
பிற பகுதிகளில் பரவலாக இருந்த செங்குந்த லீரர்கள் கொங்கு
மண்டலத்தை பாதுகாக்கும் வீரர்களாக இருந்தனர்
கொங்கு முதலி என்பவரின் பட்டயப்பாடல் ஒன்று
ஆதி முதல் செங்குந்தர் அதில் வந்த கொங்கனுக்கு
சாதி, குலம், கல்யாணம் தனது முறைப்படியாக
நீதியுடன் எந்நாளும் நிலைத்திருக்க வேண்டுமென
ஒதி வைத்தான் பூந்துறை நாட்டு உத்தமளே– என்று
கூறுகிறது
அதாவது உலகுடைய மன்றாடி என்ற பட்டம் ஏந்தி பூந்துறை
நாட்டை ஆண்ட காலிங்கராயன், செங்குந்தர்களைக் காஞ்சிமாநக
ரிலிருந்து கொங்கு நாட்டுக்குக் குடியேற்றி அவர்களை கொங்கர்க
ளாகமாற்றிதன் படை அணிகளில்போர் வீரர்களாக்கிக் கொண்டான்
என்று கொங்கு வெள்ளாளர் வரலாறு என்ற புத்தகத்தில் டி.கே
சக்திதேவி என்பவர் பதிவு செய்து இருக்கிறார்
இப்படி படை வீரர்களாக வாழ்க்கையை தொடங்கிய செங்குந்தர்
கள் பின்னாளில் சேதுபதிகளாக, குறநில மன்னர்களாக மாறினர்
அப்படிகி.யி.1628-ம் ஆண்டுாரோட்டின்மன்னராக ஆட்சி செய்தவர்
சந்திரமதி முதலியார். இவர்தான் ஈரோடு மண்கோட்டையை கட்டி
னார். சூரம்பட்டி பகுதியில் மன்னரின் அரண்மளை இருந்தது
ஈரோடு பஸ் நிலையம் பகுதி போர் வீரர்கள் பயிற்சி பெறும் இட
மாகவும், வடசி, பூங்கா பகுதி மன்னர், சேனாதிபதிகள் ஓய்வு
எடுக்கும் பகுதியாகவும் இருந்தது. அப்போதுமதுரையில் திருமலை
நாயக்கர் ஆட்சி நடந்து கொண்டு இருந்தது, கொங்குநாட்டின் பல
பகுதிகளில் ஆட்சிகளில் இருந்த மள்னர்கள் திருமலை நாயக்க
ருக்கு கப்பம் கட்டி, பாளையக்காரர்களாக இருந்தனர். ஆனால்
சந்திரமதி கப்பம் கட்ட முன்வரவில்லை. அடங்கிப்போகவும்
இல்லை, கொங்கு பகுதியில் கப்பம் வருலிக்க திருமலை நாயக்க
ரின் தளபதி ராமப்பையன் படையுடன் ஈராடு வந்தார். ஈரோட்டில்
தங்கி இருந்து சுற்று வட்டார பாளையக்காரர்கள், ஆட்சியாளர்களி
டம் கப்பம் வருலிந்தார். ஆனால் சந்திரமதி வரி கொடுக்கலவில்லை
இவரைப்போன்று கப்பம் செலுத்தாக பல பாளையக்காரர்கள்
லைநாயக்கர் படைகளை எதிர்த்து நின்ற சந்திரமதியை வீழத்த
விபூகம் அமைக்கப்பட்டது. பிரசித்திபெற்றாரோட்டுப்போர் நடந்தது.
துதான் ஈரோட்டில் நடந்த முதல் போர்கியி.1628-ல் நடந்த இந்த
போரில் பெரும்படையுடன் சந்திரமதியின் படையால் மோத முடிய
வில்லை. அவர் போரில் கொல்லப்பப்டார், கோட்டை’ராமப்பைய
னால் கைப்பற்றப்பட்டது. சந்திரமதியின் உறவினர்கள், குடும்பத்
நினர் எனஅனைவருமேபோரில்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது
எனவே மன்னரின் வாரிச இல்லாத நகராகாரோடுமாறியது. Tரோடு
வ.உ.சி.பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட ஒருகல்வெட்டில் சந்திரமதி
முதலியார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது அந்த கல்வெட்டு
கி.பி.1628-ல் செதுக்கப்பட்டது
சந்திரமதி முதலியார் என்ற மன்னர் கட்டிய ஈரோடு கோட்டை
திருமலை நாயக்கர் படையால் கைப்பற்றப்பட்டது. அவர் போரின்
போது ஏற்பட்ட சிதிலங்களை சிரமைத்து மீண்டும் கோட்டையாக
கட்டினார். கி.பி.1656-ம் ஆண்டு அடுத்த போர் நடந்தது. மைசூர்
மன்னர் கண்டவ நரசராஜர் வின் தளபதி ஹம்பையன் என்பவர்
படை எடுத்து வந்தார். அப்போது ஈரோட்டின் ஆட்சிப்பொறுப்பு
திருமலை நாயக்கர் வசம் இருந்தது. மதுரைநோக்கி படை எடுத்து
வந்த மைசூர் வீரர்களை திருமலை நாயக்கர் படை ஈரோட்டில்
தடுத்து நிறுத்தியது. தளபதி சேதுபதி, திருமலை நாயக்கரின் தம்பி
முத்தியாலு நாயக்கர் என்ற குமாரமுத்து நாயக்கர், திண்டுக்கல்
அரங்கண்ண நாயக்கர் ஆகியோர் நலைமையிலான படைகள்
மைசூர் படைகளை, விரட்டி வெற்றிவாகை சூடினார்கள். இதன்
மூலம் திருமலை நாயக்கர் படைகள் TOரோட்டில் 2 போர்களிலும்
வெற்றி பெற்றன. இதுவே வரலாற்றில் மூக்குப்பு போர் என்ற
பதிவைப்பெற்றது
கி.பி.1672-ல் அடுத்த போர், மைசூர் தொப்டதேவராயன் உடையார்
வடிவில் வந்தது, கொங்குநாட்டின் உரிமை பிரச்சினையில் எழுந்த
இந்த போர் கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளிலும் நடந்தது
போரின் முக்கிய தலைநகராக ஈரோடு இருந்தது. அப்போது மது
ரையை சொக்கநாத நாயக்கர் ஆட்சி செய்தார். மைசூர் உடையார்
தொட்ட தேவராயன் படைக்கு தளபதி சிக்க தேவராயன் தலைமை
தாங்கி வந்தார்.மதுரை படைக்கு ஆதரவாகசெஞ்சிநாயக்கர் படை
பீஜப்பூர் சுல்தான் படை, தஞ்சை மராட்டியர் படை, விஜயநகரத்தின்
ஆட்சியை இழந்திருந்த 3-ம் சீரங்கன் ஆகியோர் படை எடுத்து
வந்தனர். யானைப்படை, குதிரைப்படை என்று ஈரோடு அல்லோக
லப்படும் வகையில் நடந்த இந்த போரில் மைசூர் படை வெற்றி
பெற்றது குறிப்பிடத்தக்கது, பின்னர் ஈரோடு அமைதிப்பூங்காவாக
திகழ்ந்தது. சுமார் 90 ஆண்டுகள் எந்த போர் அச்சமும் இன்றி
ஈரோடு வளர்ச்சி அடைந்தது
அப்போது ஈரோடு ஐதர் அலி வசம் இருந்தது, ஆங்கிலேயப்ப
டைகள் ஈரோட்டை கைப்பற்ற எண்ணி கி.பி.1768-ம் ஆண்டு போர்
தொடுத்தனர். இந்த போரில் ஆங்கிலேயப்படை தோல்லியை சந்
தித்தது, மைசூர் மன்னர் ஐதர் அலி மறைவுக்கு பின்னர் திபட்புகல்
தான் ஆட்சியில் ஈரோடு இருந்தது. கி.பி.1790-ல் மீண்டும் ஆங்கி
லேயப்படைக்கும் மைசூர் படைக்கும் ஈரேட்டில் போர் நடந்தது
ஆங்கிலேய தளபதி மெடாஸ் தலைமையில் நடந்த இந்தப்பொரில்
திட்புவின் படைதோல்லியை சந்தித்தது. ஆனால்4 மாதத்திலேயே
திப்புவின் படை மீண்டும் ஒரு போர் நடத்திஈரோட்டை ஆங்கிலேய
ரிடம் இருந்து கைப்பற்றியது. திப்புலின் மறைவுவரை ஈரோடுமைகுூர்
வசமே இருந்தது
பின்னர் மீண்டும் ஈரோடு ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்கு வந்தது
அகழிசூழ்ந்திருந்தாரோடுகோட்டை கி.பி.1878-ல் இடிக்கப்பட்டது
போரில் மரணம் நிகழ்ந்தாலும், அவர் கட்டிய கோட்டை இல்லாது
போனாலும், கோட்ஸடையைகட்டிரரோட்டை ஆட்சிசெய்தசந்திரமதி
முதலியார் நினைவுகள் இன்னும் மிச்சமிருக்கின்றன. கோட்டை
இல்லாவிட்டாலும் கோட்டைபகுதி என்றோநுற்றாண்டுகள் கடந்தும்
அழைக்கப்படும் ஈOராடு இன்னும் பல மறைந்திருக்கும் வரலாறு
களை கொண்டது
தகவல்கள்: கல்வெட்டு அறிஞர் புலவர் ராசு மற்றும் ஆடிட்டர்
எம். மாறிமுத்து எழுகிய மாவீன் சந்திரமதி முதலியார் புத்தகம்.